பஜ்ஜி, சமோசா வேண்டாம்: சர்க்கரை அளவு எகிறாமல் இருக்க 10 புரதச் சிற்றுண்டிகள்!

பசியைக் கட்டுப்படுத்தி க்ளூகோஸ் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல்.
Diabetic-friendly snacks - நீரிழிவு ஸ்நாக்ஸ்
நீரிழிவு ஸ்நாக்ஸ்
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகள் தேவை. பஜ்ஜி, சமோசா, பக்கோடா மற்றும் பிஸ்கட்டுகளை உட்கொள்வதால் சர்க்கரை அளவு அதிகமாகும்‌. அவைகளில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதே காரணமாகிறது.

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து புரதம் நிறைந்த சிற்றுண்டிகள் உண்ணும் போது அடிக்கடி பசி ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தவிர்க்கப்படும். புரதம் நிறைந்த உணவை உண்ணுவதால் அவை ஜீரணமாவதற்கு நேரம் எடுக்கும்‌ இதனால் க்ளூகோஸ் உறிஞ்சப் படுவது தடுக்கப்படுகிறது‌. புரதம் வயிறு நிரம்பிய உணர்வைத் ஏற்படுத்துவதோடு மெட்டபாலிசத்தையும் மேம்படுத்துகிறது‌.

Q

நீரிழிவு நோயாளிகளுக்கு புரதம் ஏன் சிறந்தது?

A
  • உடலில் க்ளூகோஸ் அளவை கட்டுப்படுத்தும் பண்பு புரதத்திற்கு உள்ளது.

  • மெதுவாக புரதம் ஜீரணமாவதால் உங்களுக்கு நல்ல சக்தியைத் தருகிறது.

  • அதிகம் உண்ணும் பழக்கத்தைக் தடுக்கிறது.

  • தசைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது.

உங்கள் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும் பத்து உணவுகள்

வறுத்த தாமரை விதை மற்றும் வேர்க்கடலை

மகானா என்று அழைக்கப்படும் தாமரை விதைகளில் குறைந்த க்ளைசீமிக் குறியீடு மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளது‌. அதோடு கூட வேர்க்கடலயையும் ஒரு கைப்பிடி சிறிது நெய்யில் வறுத்து சாப்பிட சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு வறுவலைவிட இது சத்தானது. தாவரப் புரதம் நிறைந்தது. இதோடு கருப்பு உப்பு மற்றும் பொடி செய்த மிளகையும் சேர்க்கலாம். 7-8 கிராம் வரை புரதம் இதில் உள்ளது.

Mung bean - நீரிழிவு ஸ்நாக்ஸ்
Mung bean - நீரிழிவு ஸ்நாக்ஸ்

முளைகட்டிய பச்சைப் பயறு மற்றும் கருப்பு கொண்டைக்கடலை

முளைகட்டி வேகவைத்த பச்சைப் பயறு மற்றும் கருப்பு கொண்டைக்கடலையோடு சிறிதாக அறிந்த வெள்ளரிக்காய், தக்காளி பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை சேர்த்து உண்ணலாம். இது அதிக நார்சத்து நினைத்ததால் மெதுவாக ஜீரணமாகும்‌.

முளைகட்டிய பயறு மற்றும் முளைகட்டிய கருப்புக் கடலையை சிறிது வேக வைத்தால் போதுமானது.

பன்னீர் மற்றும் தோஃபு

ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதிக புரதம் நிறைந்த தோஃபு மற்றும் பன்னீர் துண்டுகளில் சிறிது தயிர், மஞ்சள் பொடி, சீரகம் மற்றும் ஓமம் சேர்த்து வறுத்து உட்கொள்ளலாம்‌. இது 12-15 கிராம் வரைபுரதம் நிறைந்தது. பசு மாட்டுப் பாலில் இருந்து தயாரித்த பன்னீரை பயன்படுத்துவது நல்லது.

Paneer - நீரிழிவு ஸ்நாக்ஸ்
Paneer - நீரிழிவு ஸ்நாக்ஸ்

வேகவைத்த முட்டை

புரதமும் அமினோ அமிலமும் நிறைந்தது‌. வெங்காயம், தக்காளி, மல்லித்தழை ஆகியவற்றையும் முட்டையோடு சேர்த்து உண்ணலாம், 12-14 கிராம் வரை புரதம் உள்ளது.

வறுத்த கருப்பு கொண்டைக்கடலை

இது தாவரப் புரதமும் நார்சத்தும் நிரம்பிது‌ இது ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும்

இதையும் படியுங்கள்:
40 வயதை தொட்டுவிட்டீர்களா? வாழ்க்கையை செதுக்க 5 சூப்பர் வழிகள்!
Diabetic-friendly snacks - நீரிழிவு ஸ்நாக்ஸ்

சத்து பானம்

வறுத்த கடலை மாவில் சீரக பொடி, புதினா மற்றும் எலுமிச்சை ஜுஸ் சேர்த்து தயாரிக்கப்படும் பானம் பசியைக் கட்டுக்குள் வைக்கும். வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும்‌. 8-10 கிராம் வர புரதம் நிறைந்தது‌.

பயத்தம் பருப்பு டிக்கி

பயத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து அதில் சிறிதாய் அரிந்த காய்கறிகள் இஞ்சி மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து இதை டிக்கியாக தயாரித்து தோசைக்கல்லில் போட்டு எடுக்கலாம்‌. இரண்டு டிக்கியில் 10 கிராம் புரதம் இருக்கும். இதில் உருளைக்கிழங்கு சேர்க்க வேண்டாம். அதற்குப் பதில் ஓட்ஸ் அல்லது துருவிய பன்னீர் சேர்க்கலாம்‌.

க்ரீக் யோகர்ட்

இதோடு வறுத்த சீரகம், பச்சை மிளகாய் மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகள் சேர்த்து உட்கொள்ளலாம். இதில் 10-12 கிராம் புரதம் உள்ளது.

வறுத்த எடமாம் பீன்ஸ்

வேகவைத்தோ அல்லது வறுத்த எடமாம் பீன்ஸில் அதிக புரதச்சத்து உள்ளது. ஆரோக்கிய கொழுப்பு மற்றும் நார்சத்தும் நிறைந்தது. இதில் 12-14 கிராம் புரதம் உள்ளது‌.

இதையும் படியுங்கள்:
30 நாட்கள் சர்க்கரையைத் தவிர்த்தால் என்னவாகும்? சுகர் கட் ட்ரெண்ட் உண்மையா?
Diabetic-friendly snacks - நீரிழிவு ஸ்நாக்ஸ்

கைப்பிடி வறுத்த கொட்டைகள் விதைகள்

பாதாம், வால்நட், பூசணி விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றில் புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் நார்சத்தும் நிறைந்துள்ளது. 6-8 கிராம் புரதம் கிடைக்கும்.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் மேற்கூறிய உணவுகளை உட்கொள்ள அவர்கள் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com