40 வயதை தொட்டுவிட்டீர்களா? வாழ்க்கையை செதுக்க 5 சூப்பர் வழிகள்!

வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், மன அமைதி மற்றும் ஓய்வூதிய நிதி மேலாண்மை குறித்த வழிகாட்டி.
40 வயது ஆரோக்கியம்
40 வயது ஆரோக்கியம்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

40 வயது என்பது வாழ்க்கையின் ஒரு புதிய மற்றும் அழகான தொடக்கம். இந்த வயதில் பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும், நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளவும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும் பல வழிகள் உள்ளன. இது வாழ்க்கையின் இரண்டாவது பாதியை அதிக ஆற்றலுடனும், தெளிவுடனும் தொடங்குவதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பாகும். 40 வயது என்பது முடிவல்ல, மாறாக நம்மைப் பற்றிய முழுமையான புரிதலோடு, நமக்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழத் தொடங்கும் ஒரு புதிய தொடக்கமாகும்.

ஆரோக்கியத்திற்கு முதலிடம் (Physical Health):

  • உணவு முறை:

    40 வயதில் உடலில் வளர்சிதை மாற்றங்கள் (metabolism) குறையத் தொடங்கும் என்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. நம் உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகரிக்க வேண்டும். சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்க வேண்டும்.

  • உடற்பயிற்சி:

    தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, யோகா அல்லது எளிய உடற்பயிற்சிகளை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. இது நம் உடலை மட்டுமின்றி மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.

  • உடலும் மூளையும் புத்துணர்ச்சி பெறுவதற்கு தினம் 7 முதல் 8 மணி நேர நிம்மதியான தூக்கம் அவசியம்.

  • மருத்துவப் பரிசோதனை:

    வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை (Master Health Checkup) செய்து கொள்வது நல்லது.

மன அமைதி மற்றும் ஆன்மீகம் (Mental Wellness):

  • தியானம்:

    தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக வைத்துக் கொள்ள உதவும்.

  • 'இல்லை' என்று சொல்லப் பழகுவது:

    நம் மன அமைதியைக் கெடுக்கும் விஷயங்களுக்கும், நம்மால் முடியாத காரியங்களுக்கும் அன்பாக, அதேசமயம் உறுதியாக 'இல்லை' என்று சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • நெகட்டிவிட்டியை தவிர்க்கவும்:

    நம்மைச் சுற்றி எப்போதும் நேர்மறையான மனிதர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நம் மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

40 வயது ஆரோக்கியம்
40 வயது ஆரோக்கியம்

புதிய திறன்களை கற்றல் (Personal Growth):

  • புதிய பொழுதுபோக்கு:

    நமக்கு ஆர்வம் உள்ள விஷயங்களை ஆராய்ந்து அவற்றை கற்றுக் கொள்ளத் தொடங்கலாம். நீண்ட நாட்களாக கற்க நினைத்த ஓவியம், இசை, சமையல் அல்லது ஒரு புதிய மொழியைக் கற்கத் தொடங்கலாம். இந்தப் புதிய திறன் நம்மை வாழ்வில் ஒரு பிடிப்புடன் வைத்துக் கொள்ள உதவும். மகிழ்ச்சியான மனநிலையை உண்டாக்கும்.

  • வாசிப்பு பழக்கம்:

    சுய முன்னேற்றம் மற்றும் நல்ல நாவல்கள், புத்தகங்களைப் படிப்பது நம் சிந்தனையை விரிவுபடுத்தும். நம்முடைய வேலையில் சலிப்பு ஏற்படாமல் புதிய பாதையைத் திறக்கும்.

  • தொழில்நுட்பம்:

    மாறிவரும் இன்றைய டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப புதிய செயலிகள் மற்றும் தொழில்நுட்பங்களை இயக்கக் கற்றுக் கொள்வது போன்ற புதிய திறனை வளர்த்துக் கொள்வது நம்மை உற்சாகத்துடனும், ஆக்கபூர்வத்துடனும் செயல்பட வைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடந்தால் என்னவாகும்? 10 ஆரோக்கிய நன்மைகள்!
40 வயது ஆரோக்கியம்

தோற்றத்தை மாற்றுவது (Grooming & Style):

  • ஆடை வடிவமைப்பு:

    நமக்குப் பொருத்தமான, அதே சமயம் தற்காலத்துக்கு ஏற்ற ட்ரெண்டியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது நம் தோற்றத்தை மாற்றுவதுடன், மனதில் மகிழ்ச்சியையும் உண்டாக்கும்.

  • புதிய ஹேர் ஸ்டைல்:

    நம் முக அமைப்புக்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைலை மாற்றிப் பார்க்கலாம். இது நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும்.

  • சரும பராமரிப்பு:

    எளிய ஸ்கின்கேர் முறைகளைப் பின்பற்றி நம்மைப் பொலிவாக வைத்துக் கொள்ளலாம்.

  • புதிய இடங்களுக்குப் பயணம் செய்வதும், புதிய மனிதர்களுடன் பழகுவதும் என்றிருப்பது நமக்கு உலகத்தின் மீதான பார்வையை விசாலமாக்கும்.

இதையும் படியுங்கள்:
இயற்கையின் மூன்று அமுதங்கள்! ஒரு டம்ளர்... உடலுக்கு இத்தனை நன்மைகளா?
40 வயது ஆரோக்கியம்

நிதி மேலாண்மை (Financial Freedom):

  • முதலீடுகள்:

    ஓய்வூதியக் காலம் மற்றும் அவசரக்காலத் தேவைகளுக்கான முதலீடுகளை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ், பி.பி.எஃப் போன்றவற்றை இந்த வயதில் திட்டமிடுவது எதிர்காலத்திற்கு நல்லது.

  • தேவையற்ற செலவுகள்:

    ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, அனுபவங்களுக்காக செலவிடலாம்.

இவையெல்லாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள உதவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com