பாலுடன் சேர்ந்தால் பன்மடங்கு பலன் தரும் 10 வகை உணவுகள்!

பிஸ்தா பால், பாதாம் பால்
பிஸ்தா பால், பாதாம் பால்
Published on

பால் ஒரு பரிபூரண உணவு. இதன் காரணமாகவே இதை சிறுவர் முதல் முதியவர் வரை அனைவருக்கும் கொடுத்து வருகிறோம். யாராவது சாப்பிடாமல் அவசரமாக வெளியில் கிளம்புகையில் வீட்டில் உள்ளவர்கள், ‘ஒரு கப் பாலாவது குடி’ன்னு சொல்லி பாலைக் கையில் தருவது வழக்கம். இத்தனை மகத்துவம் வாய்ந்த பாலுடன், இந்தப் பதிவில் கூறப்படும் 10 வகையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஏதாவது ஒன்றை சேர்த்து உட்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் சத்துக்களின் அளவு இரண்டு மடங்காகும். அவ்வாறான உணவுகள் எவையெவை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மஞ்சள்: பாலுடன் மஞ்சள் சேர்த்தால் அது, ‘கோல்டன் மில்க்’ ஆகிறது. மஞ்சளிலுள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பாலுடன் சேரும்போது கிடைக்கும் நன்மைகளின் அளவு கூடுகிறது.

2. தேன்: தேன் ஒரு இயற்கை இனிப்பூட்டி. இதை பாலுடன் சேர்ப்பதால் பாலுக்கு இனிப்பு சுவை கிடைப்பதோடு, தேனிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் குணங்களும் சேரும்.

3. சியா விதைகள்: இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளன. இதைப் பாலுடன் கலந்து உட்கொள்ளும்போது இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்குக் கிடைத்து உடல் அதிக பலம் பெறும்.

4. பாதாம் பருப்பு: இதை ஊறவைத்து அரைத்து பாலுடன் கலந்து அல்லது பவுடராக்கிச் சேர்த்தும் உட்கொள்ளலாம். பாதாம் பருப்புகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் E மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நம் உடலுக்குக் கிடைக்கும்.

5. பட்டை: இந்த மூலிகையைப் பவுடராக்கிப் பாலுடன் சேர்த்து குடிக்கும்போது இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி பராமரிக்க உதவும்.

6. ஓட்ஸ்: ஓட்ஸுடன் பால் சேர்த்து உண்ணும்போது நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கும். நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு கிடைத்து எடை பராமரிப்பிற்கும் உதவி புரியும்.

7. புரோட்டீன் பவுடர்: புரோட்டீன் அதிகம் உட்கொள்ள விரும்பினால், உயர்தரமான புரோட்டீன் பவுடரை வாங்கி பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கும்போது நல்ல பயன்கள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் பணத்தை சரளமாகப் புழங்கச் செய்யும் வெட்டி வேர்!
பிஸ்தா பால், பாதாம் பால்

8. ஃபிளாக்ஸ் விதைகள்: இவ்விதைகளை அரைத்துப் பாலுடன் சேர்த்து உட்கொண்டால் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் கிடைக்கும். இதனால் மூளை ஆரோக்கியம் மற்றும் பலம் பெறுவதுடன் வேறு பல நன்மைகளும் உடலுக்குக் கிடைக்கும்.

9. டேட்ஸ்: பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி, ஊற வைத்து அரைத்து பாலுடன் கலந்து உண்ணலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இயற்கையான இனிப்புச் சத்து இந்தப் பானத்துக்குக் கிடைப்பதுடன், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் B6 போன்ற கனிமச் சத்துக்களும் வைட்டமின் சத்தும் கிடைக்கும்.

10. பெரி வகைப் பழங்கள்: ஃபிரஷ்ஷான ப்ளூ பெரி, ஸ்ட்ராபெரி, பிளாக் பெரி போன்ற பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது அரைத்துப் பாலுடன் சேர்த்து உண்ணும்போது, நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும்.

இனி, எப்பொழுது பால் குடிப்பதாக இருந்தாலும் அதை வெறுமனே குடிக்காமல் மேற்கூறிய உணவுகளில் ஏதாவது ஒன்றை சேர்த்து உட்கொண்டு கூடுதல் நன்மை பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com