ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்ட உடன் பில்லோடு சேர்த்து சோம்பை ஒரு கிண்ணத்தில் கொண்டு வந்து வைப்பார்கள். அந்த வகையில் சாப்பிட்டவுடன் பத்து சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் ஏற்படும் 11 பலன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. சோம்பு முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது: மசாலா பொருளான சோம்பு நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றை அடக்கிய ஊட்டச்சத்துக்களின் கூடாரமாக உள்ளது.
2. செரிமானம்: சோம்பில் உள்ள முக்கிய எண்ணெய்யான அனேதோல் செரிமான என்சைம்களை தூண்டி வயிறு உப்புசம் மற்றும் அசிடிட்டியைக் குறைத்து குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து செரிமானத்தைத் தூண்டுகிறது.
3. சுவாசப் புத்துணர்ச்சியைத் தருகிறது: சோம்பில் உள்ள நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி இயற்கையாகவே வாயின் ஆரோக்கியத்தை அதிகரித்து சுவாச புத்துணர்ச்சியை தருகின்றன.
4. வளர்சிதை மற்றும் உடல் எடை குறைக்க உதவுகிறது: சோம்பில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் முக்கிய மினரல்கள் உடலின் வளர்சிதையை ஊக்குவிப்பதோடு, இதன் உட்பொருள்கள் கொழுப்பு உடைவதை அதிகரித்து உடல் எடையைக் குறைக்கின்றன.
5. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது: சோம்பில் ஃப்ளாவனாய்ட்கள் மற்றும் குபிர்செடின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமல் காத்து, நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. மேலும், இளம் வயதிலேயே வயோதிக தோற்றம் ஏற்படாமல் காக்கிறது.
6. இரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது: சோம்பில் உள்ள பொட்டாசிய சத்துக்கள், இரத்த நாளங்களில் அமைதியை ஏற்படுத்தி இரத்தம் நன்றாகப் பாய உதவுவதோடு, இரத்த அழுத்த அளவுகளைக்கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
7. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது: சோம்பில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், ஃப்ரிரேடிக்கல்களை எதிர்த்து போராடி, சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தின் தரத்தை அதிகரிக்கிறது. இதனால் வயோதிகத் தோற்றம் குறைகிறது.
8. கழிவுகளை நீக்க உதவுகிறது: சோம்பு இயற்கை கழிவு நீக்கியாக செயல்பட்டு, கல்லீரலை சுத்தப்படுத்தி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடல் இயக்கத்தை முறைப்படுத்துகிறது.
9. மாதவிடாய் அசௌகர்யங்களைப் போக்குகிறது: சோம்பில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் அசௌகர்யகளைக் குறைத்து, இதில் உள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள், ஹார்மோன்களை சமப்படுத்த உதவுவதோடு, மெனோபாஸ்க்கு முந்தைய அறிகுறிகளைப் போக்குகிறது.
10. கண் ஆரோக்கியம்: சோம்பில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கண் ஆரோக்கியத்தை அதிகரித்து கண் பார்வையை கூராக்கி கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
11. பசியைக் கட்டுப்படுத்துகிறது: சோம்பில் உள்ள நார்ச்சத்துக்கள், வயிறு நிறைந்த உணர்வைக் கொடுப்பதால், அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.
தினமும் சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூன் சோம்பை சாப்பிடுவதால், தேவையற்ற ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவது தடுக்கப்படுவதோடு, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது.