வயிற்றுப் பகுதி கொழுப்பைக் கரைக்க தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்!

4 Foods to Avoid to Melt Belly Fat
4 Foods to Avoid to Melt Belly Fathttps://tamil.asianetnews.com

சாதாரணமாக இருக்கவேண்டிய அளவை விட, அதிக உடல் எடை கொண்டவர்கள் உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க செய்ய வேண்டியவை என்னவென்று யோசிக்கையில், கண் முன்னே பூதாகரமாகத் தோன்றுவது, உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்ற கேள்விதான். இந்தக் கேள்விக்கு விடையாக அவர்கள் உட்கொள்ளும் உணவில் எவற்றையெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும், என்னென்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

வயிற்றைச் சுற்றி சேர்ந்து அகல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் கொழுப்பை கரையச் செய்ய, இந்தியன் டயட்டீஷியன் டாக்டர் மிருணால் பண்டிட் கூறும் நான்கு வகையான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டியது அவசியம். அவற்றில் முதலாவதாக வருவது பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் (Bake) செய்த உணவுகளாகும். இவற்றை அடிக்கடி உண்ணும்போது உடலுக்குள் வீக்கம் ஏற்பட்டு நீரிழிவு, கேன்சர் மற்றும் ஆட்டோ இம்யூன் கோளாறுகள் (Auto Immune Disorders) போன்ற நாள்பட்ட வியாதிகள் உண்டாகும் வாய்ப்பு அதிகமாகும். குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்ட அல்லது பதப்படுத்தப்படாத உணவுகளே ஆரோக்கியத்துக்கு உகந்தது.

இரண்டாவதாக, இறைச்சி அதிகளவு உண்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, ரெட் மீட் (Red Meat) மற்றும் பதப்படுத்தப்பட்ட மாமிசத்தில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகள் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்தி அவற்றை வயிற்றை சுற்றியுள்ள உள்ளுறுப்புகளின் மீது படியச் செய்து சேமிக்கின்றன. இதனால் உடல் எடை கூடுகிறது.

கலோரி அளவு அதிகம் உள்ள இனிப்பு சேர்த்த பானங்களை அருந்துவதாலும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரவும் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புண்டாகும். ஏனெனில் திட உணவு உண்ணும்போது உண்டாகும் நிறைவு திரவ உணவில் கிடைக்காது; நம்மை அறியாமலேயே அதிகம் எடுத்துக் கொள்வோம்.

அடுத்ததாக, பொரித்த உணவுகளை உட்கொள்ளும்போது அவற்றில் நிறைந்திருக்கும் ஆரோக்கியமற்ற சாச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் (Trans fat) ஆகிய கொழுப்புகள் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்தி, இதய நோய் மற்றும் பல ஆரோக்கியக் கேடுகளை உண்டுபண்ண வழி வகுக்கும்.

இதையும் படியுங்கள்:
எதிர்மறை விஷயங்களையும் நேர்மறையாக மாற்றிக் காட்டும் ரோஸி ரெட்ராஸ்பெக் ஷன் உத்தி!
4 Foods to Avoid to Melt Belly Fat

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள மீன், முட்டை, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தாவரக் கொட்டைகள் மற்றும் விதைகள் போன்றவற்றை தேவையான அளவு உட்கொள்வதும், தேவையான அளவு தூங்குவதும், தினமும் முப்பது நிமிடம் உடற்பயிற்சி செய்வதும் மிகவும் அவசியம். மேலும் மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.

மன அழுத்தத்தில் இருக்கும்போது சுரக்கும் கார்ட்டிசால் (Cortisol) என்ற ஹார்மோனும் வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேர காரணியாகிறது. முழுமையான ஆரோக்கியம் பெறவும் வயிற்றை சுற்றிலுமுள்ள கொழுப்பு கரையவும் பொறுமையையும், நிலையான நடைமுறையையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com