Diabetes: குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோய்... அறிகுறிகள் என்ன?

Diabetes
Diabetes
Published on

நீரிழிவு நோய் என்பது படிப்படியாக அதிகரித்து வரும் ஒரு நோயாகும். இன்சுலின் பற்றாக்குறை அல்லது இன்சுலின் எதிர்ப்பு காரணமாக, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. இதன் காரணமாக சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்த நிலை நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு நோய் என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறையால், இந்த நோய் இப்போது குழந்தைகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.

குழந்தைகளுக்கு நீரிழிவு நோய், குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய், வேகமாக அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோய்க்கு மரபியல் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கடுமையான சிக்கல்களைத் தடுப்பதற்கு ஆரம்பகால நோய் கண்டறிதல் மிக முக்கியமானது. எனவே, குழந்தைகளுக்கு நீரிழிவு நோயின் சில ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து, இந்தப் பிரச்சினை தீவிரமடையாமல் இருக்க சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமாகும்.

அதிகரித்த தாகம்:

இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால், அதிகப்படியான தாகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் குழந்தை திடீரென்று தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்க ஆரம்பித்தாலோ அல்லது தண்ணீர் குடித்த பிறகும், தாகமாக இருப்பதை உணர்ந்தாலோ, அது டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

எடை குறைப்பு:

உங்கள் குழந்தை திடீரென எடை குறைய ஆரம்பித்தால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். எந்த காரணமும் இல்லாமல் எடை குறைவது நீரிழிவு நோயின் அறிகுறியாகும். இந்த அறிகுறி டைப் 1 நீரிழிவு நோயில் அதிகமாகக் காணப்பட்டாலும், டைப் 2 நீரிழிவு நோயிலும் எடை குறைப்பு ஏற்படலாம். 

சோர்வு:

உங்கள் குழந்தை விரைவாக சோர்வடைந்து கொண்டிருந்தால் அல்லது பலவீனமாக உணர்ந்தால், அது டைப் 1 நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். எந்த உடல் உழைப்பும் இல்லாமல் சோர்வாக இருப்பது சாதாரணமான விஷயம் அல்ல. எனவே, உங்கள் குழந்தையானது காரணமின்றி வழக்கத்திற்கு மாறாக சோர்வாகவோ அல்லது எரிச்சலாகவோ இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது முக்கியமாகும்.

இதையும் படியுங்கள்:
டைப்-1, டைப்-2 தெரியும்... அதென்ன டைப்-5 நீரிழிவு நோய்? இது வேறையா?!
Diabetes

கருமையான தோல் திட்டுக்கள்: 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு தோலை கருமையாக மாற்றும் Acanthosis Nigricans எனப்படும் ஒரு நிலை ஏற்படலாம். இந்தத் திட்டுக்கள் பொதுவாக அக்குள் இடுப்பு மற்றும் கழுத்து போன்ற மடிப்புகள் உள்ள இடங்களில் காணப்படும். இது பெரும்பாலும் டைப் 2 நீரிழிவு நோய்க்கான அறிகுறியாக இருக்கும். 

மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை உங்கள் குழந்தையிடம் நீங்கள் கவனித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். நீரிழிவு நோயை இரத்த அல்லது சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டறியலாம். ஆரம்பகால நோய் கண்டறிதல், இந்த நிலையை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின்   ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருகிறதா?
Diabetes

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com