டைப்-1, டைப்-2 தெரியும்... அதென்ன டைப்-5 நீரிழிவு நோய்? இது வேறையா?!

முதன்முதலில் ஆப்பிரிக்காவின் ஜமைக்கா நாட்டில் கண்டறியப்பட்ட பைட்-5 நீரிழிவு நோய் பற்றி அறிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்
Published on

பொதுவாக அனைவரும் அறிந்தது டைப்-1 நீரிழிவு மற்றும் டைப்-2 நீரழிவு பற்றி தான். வகை-5 நீரிழிவு நோய் ஒரு புது வகையான நீரிழிவு நோய். முதன்முதலில் இந்த நோய் ஆப்பிரிக்காவின் ஜமைக்கா நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்த வகை நீரிழிவு நோய் உறுதி செய்யப்பட்டது. வகை-5 நீரிழிவு நோய் ஒரு நாள்பட்ட நோயாகும். 1985 ஆம் ஆண்டில், இந்த நோய் டைப்-5 நீரிழிவு நோயின் தனிப் பிரிவில் வைக்கப்பட்டு, டைப்-J நீரிழிவு நோய் என்று பெயரிடப்பட்டது.

பின்னர் 2000 ஆம் ஆண்டு வரை, இந்த நோய் பாதித்தவர்கள் பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்து போனது. அதனால் இந்த நோய் குறித்து எந்த ஒரு ஆராய்ச்சியும் இல்லை. நோய் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல் இல்லாததால் இந்த நோய்க்கு வழங்கப்பட்ட டைப்-ஜே நீரிழிவு நோயின் அங்கீகாரம் திரும்பப் பெறப்பட்டது.

ஆனால், தற்போது இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு இதற்கு டைப்-5 நீரிழிவு நோய் என்று பெயரிட்டு கண்காணித்து வருகிறது.

வழக்கமாக நீரிழிவு நோய்க்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மரபணு ரீதியில் வருவது, இரண்டாவது வகை சரியான முறையில்லாமல் உணவை சாப்பிடுவதால் வருவது. ஆனால், டைப்-5 நீரழிவு நோய் என்பது உடலில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு வரக்கூடிய நோயாக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஒருவரின் உடலில் மரபணுக்கள் பாதிப்பு அடைந்தாலும் இந்த நோய் அவரை தாக்குகிறது.

சமீபத்தில், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு வகை-5 நீரிழிவு நோய் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது. இந்த நோய் முன்பு ஆப்பிரிக்காவில் காணப்பட்டது. ஆனால் இப்போது இது தொடர்பான சில பதிவுகள் பல நாடுகளில் பதிவாகியுள்ளன.

உணவில் போதுமான ஊட்டச் சத்துக்கள் இல்லாததால் ஒருவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு இந்த நோய் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் ஒருவரின் மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு அவருக்கு டைப்-5 நீரிழிவு நோய் வரலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பின் உடலில் இன்சுலின் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. வழக்கமாக எடை அதிகமாக உள்ளவர்களுக்கு தான் நீரிழிவு நோய் வரும். ஆனால் , டைப் - 5 நீரிழிவு நோய் நிர்ணயிக்கப்பட்ட எடையை விடக் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

இப்போது இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும். டைப்-5 நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதை பற்றி சில நாடுகளில் உள்ள மருத்துவர்கள் அறிந்து வைத்துள்ளனர். இப்போது இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிக்கின்றனர். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வருகிறதா?
நீரிழிவு நோய்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com