நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, இரத்தம் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம். இரத்தம் சுத்தமாக இருந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில உணவுகள் இரத்தத்தை சுத்தமாக்க உதவுகின்றன.
வாரத்திற்கு இரண்டு முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அந்த நீரை வடிகட்டி குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள், கிருமிகள் அழிந்துவிடும். இரத்தமும் சுத்தமாகும். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கசப்பு தன்மையுடைய பாகற்காய் உணவில் அதிகம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளும். பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால்தான் அதன் முழு நன்மையைப் பெற முடியும்.
நெல்லிக்காயிலும் ரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெல்லிக்காய் ஜுஸ், சாதம், துவையல் என செய்தும் சாப்பிடலாம்.
கேரட் தினமும் சாப்பிட்டால் சருமம் தெளிவாக இருக்கும் கேரட் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. தினமும் காலையில் கேரட் ஜூஸ், கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
வாரம் ஒருமுறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தமானது சுத்தமாகும். பச்சை இலை காய்கறிகளில் ஒன்றான காலிபிளவரிலும் குளோரோஃபில் என்னும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. இதனையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, அன்னாசி போன்றவையும் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
இந்த உணவுகளை உணவில்சேர்த்துக் கொண்டால், ரத்தத்தை சுத்தப்படுத்தும். கல்லீரல், சிறுநீரகம், சிறுநீர் நாளங்கள் நன்கு செயல்பட்டு உடலில் ரத்தத்தை சீராக ஓட வைக்கும்.
ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால் உடலின் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.