சில குழந்தைகள் வயதுக்கேற்ற எடையுடன் இருப்பதில்லை. குழந்தைகள் ஒல்லியாக இருப்பதைக் கண்டு அவர்களின் பெற்றோர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். அத்தகைய குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் 5 வகைஉணவு வகைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்!
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் 5 உணவுகள்:
வாழைப்பழம்: குழந்தைகளின் எடை அதிகரிக்க வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி6, சி, இரும்பு, கல்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் எடை அதிகரிப்புக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
முட்டை: புரதத்தின் சிறந்த ஆதாரம் முட்டை. எனவே, குழந்தைகளுக்கு தினமும் ஒரு அவித்த முட்டை கொடுக்கலாம். அதுமட்டுமின்றி இதில் நிறைவுற்ற கொழுப்பு புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை குழந்தைகளின் எடை அதிகரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், நீங்கள் முட்டையில் வேறு ரெசிபிகள் கூட குழந்தைகள் சாப்பிடும் வகையில் செய்துக் கொடுக்கலாம்.
அவகோடா: அவகோடா பழம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. எனவே, குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். இதில் வைட்டமின் சி, ஈ, கே, தாமிரம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவை குழந்தைகளின் எடை அதிகரிப்புக்கு பெரிதும் உதவுகின்றன.
நெய்: குழந்தைகளின் எடை அதிகரிக்க நெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முடிந்தால் குழந்தைகளுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யை கொடுங்கள். பருப்பு, அரிசி போன்ற பல உணவுகளில் நெய் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுங்கள். நெய்யில் வைட்டமின் ஏ, டி, கால்சியம், பாஸ்பரஸ், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
பருப்பு வகைகள்: புரத மெக்னீசியம், கால்சியம், இரும்புச் சத்து, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இவற்றில் உள்ளன. எனவே, குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க இவற்றை தினமும் அவர்களுக்குக் கொடுக்கலாம்.
வாழைப்பழம், முட்டை, அவகோடா, நெய், பருப்பு வகைகள் ஆகியவற்றை குழந்தைகளுக்குத் தவறாமல் கொடுத்தால் அவர்களின் ஒல்லியான உடல் தேகம் விரைவில் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.