அனைத்து சக்திகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளையே ஒருவர் உட்கொள்ள வேண்டும். சில மோசமான உணவுப் பழக்க வழக்கங்கள் உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்தி ஞாபக மறதியை உண்டாக்கி விடுகின்றன. அத்தகைய ஞாபக மறதியை அதிகமாக்கும் ஐந்து வகை உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. ட்யூனா மீன்: ட்யூனா எனப்படும் சூரை மீன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பயனளிக்கக் கூடியதாக இருந்தாலும், இதில் அதிக அளவு பாதரசம் அடங்கியிருப்பதால் மூளையின் செயல்பாட்டை அழிக்கிறது. பாதரசத்திற்கு மூளையை செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உண்டு என்பதால் ட்யூனா மீனுக்கு பதிலாக சால்மன் மீனை எடுத்துக் கொண்டால் எந்தத் தீங்கும் ஏற்படாமல் நினைவாற்றல் மேம்படும்.
2. சோயா: சோயாவை டோஃபூ அல்லது சோயா சாஸ் ஆக எடுத்துக்கொள்வதால் நன்மைக்கு பதிலாக, அதிக தீமையே விளைகிறது. சோயாவில் இருக்கும் அதிக அளவு உப்பு மற்றும் சோடியம் விகிதங்கள் மூளைக்கு அதிக தீங்கு விளைவிக்கின்றன. இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்து மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை தடை செய்து நினைவை இழக்கச் செய்கின்றன.
3. மதுபானம்: நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆல்கஹால் மூளை செல்களை வலுவிழக்கச் செய்து நினைவிழப்பை ஏற்படுத்தும். மது குடிப்பதை தவிர்க்க வேண்டியதற்கான மற்றொரு காரணம் ஆல்கஹாலை நிறுத்துவதே ஆரோக்கிய வாழ்வை நோக்கி நாம் முன்னெடுத்து வைக்கும் மற்றொரு படியாகும்.
4. ஆரஞ்சு ஜூஸ்: ஆரஞ்சு ஜூஸில் நியர் சர்க்கரை அளவு செறிந்துள்ளதால் பகுத்தறிவு திறனை அழித்து ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வேலை செய்யும் திறனையும் அழிக்கின்றன. ஏனென்றால், அளவுக்கு அதிகமான சர்க்கரை அறிவாற்றலின் செயல்திறனை இழக்கச் செய்து ஞாபக மறதியை அதிகப்படுத்துகின்றன.
5. வெள்ளை அரிசி: முற்றிலும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த வெள்ளை அரிசியை உட்கொள்ளும்போது மூளையின் செயல்பாட்டில் பிரச்னைகள் உண்டாக்கி மன அழுத்தத்தில் கொண்டு போய்விடும் அபாயங்களை ஏற்படுத்தி நினைவாற்றலை மங்கச் செய்கின்றன. இதற்கு சுவையான கோதுமை உணவுகளுக்கு மாறுவதே நல்ல தீர்வாக இருக்கும்.
மேற்கூறிய உணவுகளை முடிந்தவரை தவிர்த்து, முடியாவிட்டால் அளவோடு எடுத்துக்கொண்டு பலமான நினைவாற்றலைப் பெறுங்கள்.