
நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை இயல்பு அளவை விட அதிகமாக இருப்பதை தான் சர்க்கரை நோய் என்கிறோம். இதற்கான காரணம் அதிக உடல்எடை, உணவுப்பழக்கம், ஸ்ட்ரெஸ் போன்றவையாகும். இருப்பினும்,மிகவும் முக்கியமான காரணம் கணையத்தில் இருந்து இயற்கையாக சுரக்கக்கூடிய இன்சுலின் அளவு குறைவாக இருப்பதும், இன்சுலின் சீராக வேலை செய்யாததுமே. இதை சரிசெய்ய இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவை எடுத்துக் கொண்டாலே போதுமானது. அந்த உணவுகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
1. பாகற்காய்
பாகற்காயின் கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லதாகும். பாகற்காயில் Charatine, vicine, polypeptide-p போன்ற ஆன்டி டயாபெட்டிக் பொருட்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. இது நேரடியாகவே கணையத்தில் உள்ள செல்களைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்துகிறது.
2. லவங்கப்பட்டை
உணவில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் லவங்கப்பட்டைக்கு இன்சுலினை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது. இதில் Cinnamaldehyde, cinnamate, cinnamic acid இருக்கிறது. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்களை சேதமடையாமல் தடுப்பதோடு அதனுடைய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். Insulin resistance ஐ குறைக்கக்கூடியது லவங்கப்பட்டை.
3. கொழுப்பு நிறைந்த மீன்கள்
மீன்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் அதிக அளவில் உள்ளது. இது கணையத்தில் ஏற்படும் Inflammation ஐ தடுத்து இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. மத்தி, காணாங்கெழுத்தி போன்ற மீன்களில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. எனவே, சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் இந்த மீன்களை எடுத்துக் கொள்வது சிறந்தது.
4. நட்ஸ் மற்றும் சீட்ஸ்
நட்ஸ் மற்றும் சீட்ஸில் ஹெல்த்தி ஃபேட்ஸ் என்று சொல்லக்கூடிய வைட்டமின் ஈ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் அதிக அளவு நிறைந்துள்ளது. இது இன்சுலின் சீராக சுரக்க உதவி செய்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் அவசியமான சத்துக்களான Chromium, magnesium, zinc, protein, fiber போன்றவை அதிகம் உள்ளது. இது சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமான Insulin resistance ஐ குறைத்து இன்சுலின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.
5. பச்சை காய்கறிகள்
ரத்த சர்க்கரையை நன்கு கட்டுப்படுத்த உதவக்கூடியது கீரை, வெண்டை, பாகற்காய், கோவக்காய், குடைமிளகாய் போன்ற பச்சை காய்கறிகள். இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம், நார்ச்சத்துக்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சேதமடைவதை தடுத்து இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.
இந்த 5 உணவுகளையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டு ரத்த சர்க்கரையை குறைத்து ஆரோக்கியமாக வாழுங்கள்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல் நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.