காலை உணவு அன்றைய நாளுக்கான வேலைக்கு கவனம் செலுத்த உதவும் மிகச் சிறந்த மருந்தாகப் பார்க்கப்படுவதோடு, ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கக் கூடியது. அந்த வகையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான 5 உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பேரிச்சம் பழம்: உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்க பேரிச்சம்பழம் சாப்பிடுவது மிகுந்த பயனுள்ளதாகும். இது தவிர, பேரிச்சம்பழம் செரிமானத்திற்கும் உதவி புரிந்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பேரீச்சம்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் முதலில் உட்கொள்ளலாம்.
2. அத்திப் பழம்: அத்திப் பழம் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் உள்ளது. அத்திப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும், அத்திப் பழம் சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கலாம். அத்திப் பழங்கள் நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் உதவியாக இருப்பதோடு, இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
3. நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்தும் ஆன்டி ஆக்ஸிடன்டும் நிறைந்து காணப்படுகிறது. இதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது உடலை நச்சுத் தன்மையற்றதாக்குகிறது. மேலும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் வெறும் வயிற்றில் அவசியம் சாப்பிட வேண்டிய உணவாகவே இது உள்ளது.
4. ஊறவைத்த பாதாம்: ஊறவைத்த பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள் வைட்டமின் ஈ, புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. இவற்றை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் சாதாரணமாக இருக்கும் என்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட மிகவும் சிறந்தது.
5. ஓட்ஸ்: ஓட்ஸில் அதிக அளவு பீட்டா க்ளூட்டன் ஃபைபர் உள்ளதால் இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாக இருப்பதோடு, ஆற்றலையும் வழங்குகிறது. இது நாள் முழுவதும் உடலின் ஆற்றலைப் பராமரிப்பதில் பயனுள்ளதாக இருப்பதாலும் வெறும் வயிற்றில் சாப்பிட மிகவும் சிறந்த உணவாக உள்ளது.
மேற்கூறிய 5 உணவுகளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அன்றைய நாள் மிகுந்த ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் இவற்றை சாப்பிட்டுப் பலன் பெறுவோம்.