சமையலுக்கு அதிகம் பயன்படும் வெங்காயம் உணவுக்கு சுவையை தருவது மட்டுமின்றி, பல அரிய நன்மைகளையும் வழங்குகின்றன. வெங்காயத்தில் அலர்ஜி எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, புற்று நோய் எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளதோடு, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், பைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை போதுமான அளவில் உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த வெங்காயச் சாற்றை தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நல்லது: வெங்காயச் சாறு பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நன்மை பயக்கின்றன. இது பற்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், ஈறுகளில் ஏற்படும் வலியை தடுப்பதால் தினமும் ஒரு கிளாஸ் வெங்காயச் சாற்றினை பருகுவதால் பற்களின் ஆரோக்கியம் மேம்பாடு அடைகிறது.
2. எடையை குறைக்கும்: வெங்காயச் சாறு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, எடையை எளிதாகக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தினமும் காலை வெறும் வயிற்றில் வெங்காயச் சாறை குடித்து வந்தால், உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கின்றன.
3. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்: வெங்காயச் சாறில் இருக்கும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, இரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் தினமும் வெங்காயச் சாற்றினை அருந்துவது நல்லது.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: வெங்காயச் சாறு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக, மாறிவரும் பருவ காலங்களில் ஏற்படும் நோய் தொற்றுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
5. வீக்கம் நீங்கும்: வெங்காயச் சாறு உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்புப் பண்புகள் உடலிலுள்ள வீக்கத்தைக் குறைக்கின்றன. மேலும், வெங்காயச் சாறு இரத்தத்தில் கரைந்து, சருமம் மற்றும் கூந்தலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன.
வெங்காயம் உணவு, கூந்தலுக்கும் மட்டும் அருமருந்தாக இல்லாமல், மேற்கூறிய ஐந்து நன்மைகளையும் வழங்குவதால் தினமும் வெங்காயச் சாறு குடித்து பலன் பெறுவோம்.