இந்த 5ஐ சீரகத்தோடு சேர்த்து சாப்பிடுங்க... தீராத வியாதியும் தீர்ந்திடுங்க!

ஆரோக்கியத்தை சீராக்கும் சீரகத்துடன் சாப்பிட வேண்டிய 5 பொருட்களும் அவற்றின் பலன்கள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
jeera water benefits
jeera water benefitsimage credit-1mg.com
Published on

வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் அமர்ந்து அனைவரின் ஆரோக்கியத்தை சீராக்கும் சீரகம், செரிமான கோளாறு முதல் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை சரி செய்வது நம் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் சீரகத்தை வேறு சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலில் இருக்கும் பிரச்னைகளுக்கு ஏற்றவாறு சரி செய்கிறது. அந்த வகையில் சீரகத்துடன் சாப்பிட வேண்டிய 5 பொருட்களும் அவற்றின் பலன்கள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.

சீரகம் + வெந்தயம் :

மருத்துவ குணங்கள் நிறைந்த சீரகம், வெந்தயத்தை தலா ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த நீரைக் குடிக்க வேண்டும் அல்லது வெந்நீரில் குடிக்கலாம். இப்படி குடிக்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் இருக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலான எல்டிஎல் அளவை குறைக்கிறது.

சீரகம் + ஓமம் :

பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் சீரகத்தையும் ஓமத்தையும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களும், வயிறு உப்புசம், அசிடிட்டி உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு சீரகம் ஒரு ஸ்பூனையும், ஓமம் ஒரு ஸ்பூனையும் சேர்த்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் அல்லது நீரில் கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளலாம். இந்த தண்ணீரை குடிப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மருந்தாக அமைந்து அஜீரண கோளாறை சரி செய்கிறது.

இதையும் படியுங்கள்:
பெருஞ்சீரகம் Vs சின்ன சீரகம்: ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?
jeera water benefits

சீரகம் + கொத்தமல்லி விதை :

தற்போதைய பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்னைகளான தைராய்டு, பிசிஓஎஸ், ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு மற்றும் சருமத்தை சுத்தம் செய்யும் டீ டாக்ஸ் பானமாகவும் சீரகம் மற்றும் கொத்தமல்லி விதை மேஜிக் பானம் உள்ளது.

ஒரு ஸ்பூன் சீரகத்தையும் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையையும் ஊறவைத்து குடிப்பதனால் மாசு மருவற்ற சருமம் கிடைக்கிறது.

சீரகம் + சோம்பு :

சீரகம், சோம்பு இரண்டையும் தனித்தனியாக பயன்படுத்துவதை விட ஒரு ஸ்பூன் சோம்பையும் ஒரு ஸ்பூன் சீரகத்தையும் முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி குடிக்க வேண்டும். அல்லது இரண்டையும் வறுத்தோ அல்லது பச்சையாகவோ கலந்தத் தண்ணீரைக் குடிப்பதால் உடல் குளிர்ச்சியாவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

சீரகம் + இலவங்கப்பட்டை :

ஒரு ஸ்பூன் சீரகமும் ஒரு பெரிய துண்டு இலவங்கப்பட்டையும் போட்டு இரவு முழுவதும் ஒரு டம்ளர் நீரில் ஊறவைக்க வேண்டும். ஊற வைத்த நீரை காலையில் கொதிக்க வைத்து டீ போல வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது அப்படியே வடிகட்டி குடிக்கும் போது உடலில் மெட்டபாலிசம் மேம்பட்டு கொழுப்பு அளவு குறைகிறது.

இதையும் படியுங்கள்:
ஒரு ஸ்பூன் சீரகம் போதும்! தொப்பை கரையும், முகம் பளபளக்கும், நோய்கள் ஓடும்!
jeera water benefits

மருத்துவ மற்றும் மாயாஜால பொருளான சீரகத்தை மற்ற பொருட்களோடு சேர்த்து சாப்பிடும் போது கூடுதல் பலன் கிடைக்கும் என்பதால் பிரச்னைக்கு தகுந்தபடி சீரகத்தோடு மற்ற பொருட்களை சேர்த்து பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com