

டைப்பயிற்சி என்றாலே ஷு அல்லது செருப்பு அணிந்து நடப்பது வழக்கம். ஆனால் இவைகளை அணியாமல் வெறும் காலில் நடப்பதால் நமக்குப் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. என்பதை நீங்கள் அறிவீர்களா?
இயற்கையோடு இணைந்து வெறும் காலில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது உடல், மனம் இரண்டும் மேன்மை அடைகிறது. இப்பதிவில் வெறும் கால்நடைப் பயிற்சியின் நன்மைகள் குறித்துக் காண்போம்.
இயற்கையோடு இணைப்பு
பூமியில் கால்பதித்து நடப்பதால் பூமியின் இயற்கையான சக்தியை நம்மால் உறிஞ்சிக் கொள்ள முடிகிறது. சில ஆராய்ச்சிகள் வெறும் காலில் நடப்பதால் அழற்சி குறைவதுடன் நல்ல தூக்கமும் ஊக்குவிக்கப்படுகிறது என்று அறியப்படுகிறது. நீங்கள் பச்சைப் புல் மற்றும் கற்கள் மீது நடக்கும்போது உங்கள் மனதும் உணர்வுகளும் புத்துணர்வு பெறுவதால் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
கால்களுக்கு பலம்
நீங்கள் என்னதான் ஷு மற்றும் செருப்பு அணிந்தாலும் அவை உங்கள் இயற்கையான அசைவைத் தடுக்கிறது. வெறும் காலால் நடப்பதால் தசைகள் மற்றும் லிகமெண்ட்டுகள் பலப்படுத்தப்படுகின்றன. உங்களுக்கு சமச்சீரான நடையை மேம்படுத்துகிறது. இப்படி நடப்பதால் மூட்டுக்களில் வலி குறைக்கப்படுகிறது. இதனால் மூட்டுக்கள் வலுவடைகின்றன.
இரத்த ஓட்டம் சீராகிறது
நீங்கள் வெறும் காலில் நடக்கும் போது தசைகளை பயன்படுத்தி நடப்பதால் ஆக்சிஜன் ஊக்குவிக்கப்பட்டு இரத்த ஓட்டம் சீராக அமைய வழி வகுக்கிறது இப்படி நடக்கும் போது வலிமையை உணர்வீர்கள்.
எடைக்குறைப்பு
நீங்கள் எடையைக் குறைக்க ஜிம் செல்ல வேண்டாம் தசைகளில் கவனம் வைத்து நீங்கள் ஒவ்வொரு அடியும் கவனமாக நடப்பதால் சக்தி அதிக அளவு செலவழிப்பதால் உங்கள் உடல் எடை குறைய வாய்ப்புண்டு
சோர்வை நீக்குகிறது
நீங்கள் வெறும் காலில் நடக்கும் போது புல், மண் மற்றும் கற்கள் மீது கால் வைக்கும் போது உங்கள் உடலில் ப்ரஷர் பாயிண்டுகள் தூண்டப்பட்டு உங்கள் சோர்வு மற்றும் பதட்டத்தை நீக்குகிறது. இப்படி நடைப் பயிற்சியை மேற்கொள்பவர்கள் அமைதியான மனநிலையைக் பெறுவார்கள்.
சோர்வைக் குறைத்து நல்ல தூக்கத்தை தருகிறது
வெறும் காலில் நடக்கும்போது சர்காடியம் ரிதம் சமச்சீராவதால் இது நல்ல தூக்கத்தை உண்டாக்குகிறது. இது கார்டிசால் அளவைக் குறைத்து சோர்வைப் போக்கி அதிக சக்தியைக் கொடுக்கிறது.
நீங்கள் வெறும் காலில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது நல்ல இதமான காற்று படுவதால் உங்கள் எண்டார் பின் தூண்டப்பட்டு உங்கள் மனதை மகிழ்ச்சியான நிலையில் வைக்கிறது. உங்கள் மனநிலையை மேம்படுத்தும் இந்த பயிற்சி உங்களை அந்த ஒரு விஷயத்திலும் முழு முயற்சியோடு ஈடுபடவைக்கிறது.
உடலுமக்கும் மனதிற்கும் நல்ல இணைப்பு
நீங்கள் வெறும் காலில் பயிற்சி செய்யும் போது முழு கவனமும் அதில் செலுத்துவதால் இது உங்கள் உடல் மற்றும் மனது இரண்டும் இணைந்து செயல் படுவதை ஊக்குவிக்கும் .
மக்களோடு இணைக்கிறது
ஒரு குழுவாக நீங்கள் பயிற்சி செல்லும்போது மக்களுடன் இணைந்து பழகும் வாய்பை ஏற்படுத்துகிறது. இதனால் வெளியுலக மக்களுடன் உங்கள் தொடர்பை அதிகரிக்கிறது.
நல்ல அமைதி
வெளியே நடந்து செல்லும் போது மனது அமைதி பெறுகிறது. நீங்கள் இயற்கையோடு இணைந்த பயிற்சியை மேற்கொள்வதால் உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியும் நல்ல மன அமைதியும் இயற்கையாகவே அதிகரிக்கிறது. இது உடல் மனது தசைகள் சமநிலையை எல்லாவற்றையும் இணைத்து நடப்பதால் நீங்கள் அளவில்லாத மகிழ்ச்சி அடைவீர்கள்.
அட வெறும் காலில் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?மசெரு பையும் ஷுக்களைய்ம் தவிர்த்து இப்படியும் நடைப்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.