தினசரி தேங்காய்ப் பால் குடிப்பதால் கிடைக்கும் 6 நன்மைகள்! 

6 Benefits of Drinking Coconut Milk Daily.
6 Benefits of Drinking Coconut Milk Daily.

தேங்காய்ப் பால், நன்கு முற்றிய தேங்காய்களின் சதையிலிருந்து பெறப்படும் ஒரு கிரீமி மற்றும் சுவையான பானமாகும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தனித்துவமான ஆரோக்கியக் கலவைகள் நிரம்பிய தேங்காய்ப் பாலை, தினமும் குடிப்பது மூலமாக நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் சிறப்பாய் அமைகிறது. சரி வாருங்கள் இந்தப் பதிவில் தினசரி தேங்காய்ப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

  1. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்: தேங்காய் பாலில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளது. இதில் வைட்டமின் சி, இ மற்றும் பி காம்ப்ளக்ஸ், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. குறிப்பாக உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நமது நோயெதிர்ப்பு செயல்பாட்டை சிறப்பாக்கி, எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் உற்பத்தியில் பங்களிக்கிறது. 

  2. ஆரோக்கியக் கொழுப்புகள்: தேங்காய் பாலில் அதிகப்படியான ட்ரைகிளிசராய்டுகள் உள்ளது. இது ஒரு வகையான ஆரோக்கியக் கொழுப்பு. எளிதில் ஜீரணிக்கக் கூடிய இந்த வகை கொழுப்பு, நமக்கு ஆற்றலை வழங்கப் பயன்படுகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தினசரி தேங்காய் பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

  3. செரிமான ஆரோக்கியம் மேம்படும்: தேங்காய் பாலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை சரி செய்கிறது. இதன் பைபர் உள்ளடக்கம் செரிமானத்திற்கு உதவி மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்குகிறது. 

  4. லாக்டோஸ் இல்லை: மாட்டு பாலில் காணப்படும் லாக்டோஸ், தேங்காய்ப் பாலில் இல்லை. எனவே லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சிறந்த மாற்று பாலாக தேங்காய்ப்பால் செயல்படுகிறது. குறிப்பாக, இது ஒரு கிரீமி அமைப்பில் இருப்பதால், பல்வேறு விதமான சமையல்களில் தேங்காய் பாலை பயன்படுத்தலாம். 

  5. நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும்: இதில் நிறைந்து காணப்படும் விட்டமின் சி, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட விட்டமின்கள் மற்றும் தாதுக்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்திக்கு உதவி உடலின் ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

  6. எலும்புகள் வலுவாகும்: தேங்காய் பாலில் மெக்னீசியம் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உள்ளன. இவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்க அவசியமானது. போதுமான அளவு கால்சியம் உட்கொள்வதால் எலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் வலுவிழப்பு போன்ற பாதிப்புகள் தடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
சூடான பால், குளிர்ந்த பால்: என்னென்ன பலன்கள் தெரியுமா?
6 Benefits of Drinking Coconut Milk Daily.

தினசரி தேங்காய்ப் பால் குடிப்பதால் மேலே குறிப்பிட்டுள்ள பல நன்மைகள் உங்களுக்குக் கிடைக்கிறது. எனவே சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேங்காய்ப் பாலை ஏதோ ஒரு வகையில் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சில சமயங்களில் நேரடியாக தேங்காய் பால் குடிக்கும்போது வயிறு உபாதைகளை ஏற்படுத்தலாம். எனவே உங்களுக்கு எது ஒத்து வருமோ அந்த வகையில் தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com