இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது சர்க்கரை வியாதி. உழைப்பாளிகள் முதல் ஓய்வெடுப்பவர்கள் வரை யாரையும் இது விட்டு வைக்கவில்லை. உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்தால் இந்த உடல் பிரச்னையை தவிர்க்கலம். இதைத்தான் மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டக் கூடாத 6 வித உணவுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. சர்க்கரை பானங்கள்: பழச்சாறுகள், சோடா மற்றும் பிற இனிப்பு பானங்கள் இரத்த சர்க்கரை அளவை மோசமாக பாதிக்கும். சர்க்கரை சேர்க்கப்பட்ட இந்த பானங்கள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சர்க்கரை பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சூடான நீர், மூலிகை டீ அல்லது சர்க்கரை இல்லாத பானங்களை குடிக்கலாம். இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்காமல் உங்களது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
2. அதிக இனிப்புள்ள பழங்கள்: பழங்கள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், சில வகை பழங்களில் மற்றவற்றை விட சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. அதாவது, தர்பூசணி, அன்னாசிப்பழம், நன்கு பழுத்த வாழைப்பழம் போன்ற பழங்கள் அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. அதாவது, இந்தப் பழங்கள் அனைத்தும் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் இந்தப் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.
3. வறுத்த மற்றும் பொரித்த உணவுகள்: பிரெஞ்சு பொரியல், சிக்கன், டோனட்ஸ் போன்ற வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அது தவிர, அவற்றில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளன. எனவே, சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடும்போது உடலில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, இன்சுலின் அளவை அதிகரிக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது சவாலானது.
4. டீ & காபி: டீ மற்றும் காபியில் காஃபின் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்யும். மேலும் காஃபின் உள்ள பானங்களை சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் குடித்தால் செரிமான கோளாறுகள் ஏற்படும். எனவே, சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் காஃபின் உள்ள பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
5. ஆல்கஹால்: ஆல்கஹாலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது இரத்த சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இது ஆரம்பத்தில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகக் காட்டினாலும் பிறகு அதிகரிக்கச் செய்யும். சில சமயம் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் கூட தலையிடலாம். அது மட்டுமின்றி, ஆல்கஹால் இரத்த சர்க்கரை குறைவின் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.
6. வெள்ளை ரொட்டி: வெள்ளை ரொட்டி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில், அவை உடலில் குளுக்கோஸ் அளவை விரைவாக உடைக்கும் மற்றும் செரிமானத்தை மெதுவாக்கும். காரணம், இவற்றில் நார்ச்சத்து குறைவாக உள்ளதால் இந்த மாதிரியான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
எனவே, அதற்கு பதிலாக நீங்கள் முழு கோதுமை ரொட்டி, ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை சாப்பிடலாம். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மற்றும் உடலுக்குத் தேவையான நார்ச்சத்தையும் வழங்குகிறது.