ஸ்லிம்மாக மாற சூப்பர் 'சூப் டயட்'! 7 நாட்களில் ஆச்சரியப்படும் மாற்றங்கள்! ஆனால்...

உடல் எடையை குறைக்க நிறைய ‘டயட்’ முறைகள் இருந்தாலும் கூட பெரும்பாலான மக்கள் முன்னெடுத்து வைப்பதும், விரும்புவதும் இந்த ‘சூப் டயட்’ தான்.
soup diet
soup diet
Published on

உடல் எடையைக் குறைப்பதே உங்கள் இலக்கு என்றால், தவிர்க்க வேண்டிய உணவுகளைக் காட்டிலும், உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய திருப்தியளிக்கும், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்துவது நீண்ட கால வெற்றிக்கு வழிவகுக்கும்.

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க பலரும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதில் யோகா, ஜிம், ஜாக்கிங் சென்றும் உடல் எடை குறையவில்லை என்று புலம்புபவர்கள் ஏராளம். அதேபோல் நிறைய பேர் நான் டயட்டில் இருக்கிறேன். அப்படி இருந்தும் என் உடல் எடை குறையவில்லை என்று சொல்வார்கள். ஆனால் நாம் வீட்டில் கிடைக்கும் பொருள்களை கொண்டே நம்முடைய உடல் எடையை குறைக்க முடியும் என்று பலருக்கும் தெரிவதில்லை.

அந்த வகையில் உடல் எடையை குறைக்க நிறைய ‘டயட்’ முறைகள் இருந்தாலும் கூட பெரும்பாலான மக்கள் முன்னெடுத்து வைப்பதும் விரும்புவதும் இந்த ‘சூப் டயட்’ தான். அதேசமயம், உடல் எடையைக் குறைப்பது உங்கள் இலக்குகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும், இந்தச் சத்தான சமையல் குறிப்புகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது பயனுள்ளது.

இதையும் படியுங்கள்:
உடல் எடை குறையணுமா? இந்த 7 தவறை மட்டும் கண்டிப்பா செய்யாதீங்க..!
soup diet

ஏனெனில் சூப் டயட் தயார் செய்வதற்கும் பின்பற்றுவதற்கும் எளிதான ஒன்று மட்டுமல்லாமல் ஆரோக்கியம் நிறைந்ததும் என்பதால் அனைவரில் முதல் சாய்ஸாக இந்த டயட்டே உள்ளது. அதனால் தான் பிரபலங்கள் முதல் நடுத்தர மக்கள் வரை தங்கள் எடையை குறைக்க இந்த சூப் டயட்டை பின்பற்றுகின்றனர். மேலும் குறுகிய காலத்தில் வேகமாக எடையை குறைக்க இது சிறந்த டயட் முறையாகும்.

அதாவது இந்த சூப் டயட்டில் திட உணவுகள் இருக்காது, அதற்கு பதிலாக 7 நாட்கள் தொடங்கி 15 நாட்கள் வரை சூப் வகைகளையே உட்கொள்ள வேண்டியிருக்கும்.

தற்போது பல்வேறு வகையான சூப் டயட்கள் நடைமுறையில் இருந்தாலும் கீட்டோ சூப் டயட், சைவ சூப் டயட், பீன் சார்ந்த சூப் டயட் என பல டயட் முறைகள் மிகவும் பிரபலமாக உள்ளது.

காய்கறி சூப்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் உடல் எடை குறைப்பிற்காக வயிறு நிரம்பிய உணர்வைத் தருகின்றன. அதிக நீர்ச்சத்து கொண்ட சூப்கள், உங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும், ஒட்டுமொத்தமாக குறைவான கலோரிகளை உட்கொள்ளவும் உதவும்.

மேலும், காய்கறிகள் நிறைந்த குழம்பு வகை சூப்கள், நீங்கள் செலவிடும் கலோரிகளுக்கு அதிகபட்ச பலனைத் தருகின்றன. சாலட்டைப் போலவே, காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ள சூப் ஒரு சிறந்த வழியாகும், ஏனெனில் அவற்றிலுள்ள நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வைத் தர உதவுகிறது .

குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை தினமும் சூப் வடிவில் உணவில் சேர்ப்பது, வயிறு நிறைந்த உணர்வைத் தருவதுடன், தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்தி விரைவாக உடல் எடையைக் குறைக்க உதவும். இந்த டயட்டில் முக்கியமாக ராகி சூப், கொள்ளு சூப் மற்றும் காய்கறி சூப்களை மதிய அல்லது இரவு உணவாக 7 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் தினமும் சூப் சாப்பிடுவதால் உடல் வறட்சி நீங்கி, கலோரிகள் குறைவாக உட்கொள்ளப்படுகிறது. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, வேகமாக இடுப்பு சுற்றளவை குறைக்க உதவுகிறது.

கடைகளில் வாங்காமல் வீட்டில் தயாரிக்கப்படும் சூப்களையும் எடுத்துக் கொள்வது தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த சூப் டயட்டை முறையாக பின்பற்றினால் 7 முதல் 10 கிலோ வரை உடல் எடையை இழக்க நேரிடும்.

முட்டைக்கோஸ் சூப் மிகவும் பிரபலமான சூப் டயட் . இது கலோரி குறைந்த டயட். இந்த சூப்பில் ஒவ்வொரு நாளும் தக்காளி, வெங்காயம், கேரட் அல்லது இறைச்சி போன்றவற்றை சேர்த்து சூப் செய்து குடிக்கலாம். இந்த சூப் டயட்டை 7 நாட்கள் வரை பின்பற்றி கிட்டத்தட்ட 4.5 கிலோ வரை குறைக்க முடியும் என்கிறார்கள், நிபுணர்கள்.

சூப் டயட்டில் இறைச்சி, காய்கறி, மீன், பச்சை காய்கறிகளான பச்சை பீன்ஸ், செலரி மற்றும் தக்காளி போன்றவற்றை சேர்த்து சாப்பிடலாம்.

மொத்தத்தில் நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், சத்தான காய்கறி சூப் உங்கள் உணவுப் பழக்கத்தில் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் அது ஊட்டச்சத்தையும் திருப்தியையும் அளிக்கிறது. காய்கறி சூப்களில் நார்ச்சத்தும் நீரும் அதிகமாக இருப்பதால், நீங்கள் விரைவாக வயிறு நிறைந்த உணர்வைப் பெறலாம். மேலும், உணவுகளுக்கு இடையில் பசி எடுப்பதற்கான வாய்ப்புகளையும் குறைத்து, அதிக காய்கறிகளைச் சாப்பிடுவதன் நன்மைகளையும் பெறலாம் .

சூப் டயட்டில் இருக்கும் போது என்ன சாப்பிட கூடாது?

சூப் டயட்டில் இருக்கும் போது ஐஸ்கிரீம், வேகவைத்த பொருட்கள் மற்றும் சாக்லெட் போன்ற இனிப்பு உணவுகள், சிப்ஸ், நொறுக்கு தீனிகள், வெண்ணெய், கிரீம் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. பொதுவாக எல்லா சூப் டயட்டிலும் அடிப்படையாக கோழி கறி, காய்கறிகள் மற்றும் ஆட்டு இறைச்சியை பயன்படுத்துகின்றனர். இவை எல்லாம் குறைந்த ரத்த சர்க்கரை அளவைக் கொண்டவை.

இதையும் படியுங்கள்:
உடல் எடை குறைப்புக்கு காய்கறி ஜூஸ் உதவுமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
soup diet

குறிப்பு: நீண்ட காலத்திற்கு சூப் மட்டுமே சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும், எனவே சரிவிகித உணவு அவசியம். இந்த டயட்டை தொடங்குவதற்கு முன் மருத்துவர் அல்லது டயட்டீஷியனின் ஆலோசனையைப் பெறுவது மிக அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com