சர்க்கரை நோயாளிகளின் பாதங்களை பாதுகாக்கும் 8 ஆலோசனைகள்!

8 Tips to Protect Diabetic Feet
8 Tips to Protect Diabetic Feethttps://www.onlymyhealth.com
Published on

பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அது அவ்வளவு எளிதில் ஆறாது. அவர்கள் தங்கள் கால்களை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி சர்க்கரை நோயாளிகள் தங்களின் கால்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய எட்டு ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. கால்கள் மற்றும் பாதங்களில் ஏதாவது காயங்கள், வெட்டுக்கள், வீக்கம், புண்கள், கொப்புளங்கள், சருமம் சிவந்து போதல், தடிப்புகள் போன்று ஏதாவது இருக்கிறதா என்று ஒவ்வொரு நாளும் சரிபார்க்க வேண்டும். பாதங்களின் அடிப்பகுதியை அவர்களால் பார்க்க முடியாவிட்டால் கண்ணாடியை பயன்படுத்த வேண்டும். அல்லது குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம்.

2. தினமும் கால்களை சிறிது அளவு உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். பின்பு சாதாரண தண்ணீரால் கழுவ வேண்டும். கால் விரல்களுக்கு இடையில் உள்ள ஈரத்தை மென்மையான துண்டால் ஒற்றி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நோய் தொற்றுக்கு வழி வகுக்கும்.

3. சர்க்கரை நோயாளிகள் ஒருபோதும் வெறும் காலுடன் வெளியில் செல்லக்கூடாது. எப்போதும் காலணிகள் அல்லது ஷூக்கள் அணிந்துதான் செல்ல வேண்டும். கால்களுக்கு பொருத்தமான காலணிகள் அல்லது ஷூக்கள் அவசியம். ஏதாவது கூர்மையான பொருட்களோ கற்களோ இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

4. காலணிகள் தேய ஆரம்பித்ததும் அவற்றை அணியக் கூடாது. புதிதாக வாங்கி அணிய வேண்டும். புதிய காலணிகள் கால்களுக்கு மிகவும் இறுக்கமாகவோ அல்லது லூசாகவோ இருக்கக் கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும். மென்மையான காலணிகள் அணிய வேண்டும். அதோடு சாக்ஸ் அணிவது நல்லது.

5. கால் விரல் நகங்களை சீராக வெட்டி விட வேண்டும். கூர்மையாக நீட்டிக் கொண்டிருக்கும்படி எந்த நகத்தையும் விடக் கூடாது. நக வெட்டியால் நகங்களை மென்மையாக்கிகொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சுத்தமான வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?
8 Tips to Protect Diabetic Feet

6. கால்களில் ஏதாவது புண்களோ காயமோ ஏற்பட்டால் தானாக சுய வைத்தியம் செய்யக்கூடாது. மருத்துவரை கலந்த ஆலோசிப்பது மிகவும் அவசியம்.

7. கால்களின் உணர்வு திறன் மற்றும் இரத்த ஓட்டத்தை சரி பார்க்க வேண்டும். உட்கார்ந்து இருக்கும்போது கால்களை உயர்த்தி, கால் விரல்களை சில நிமிடங்கள் அசைக்க வேண்டும்.

8. தினமும் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற பாதங்களுக்கு ஏற்ற செயல்களைச் செய்ய வேண்டும். கால்களை எப்போதும் ஆரோக்கியமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com