ஜப்பானியர்கள் பின்பற்றும் பாரம்பரிய 'வாஷோகு' (Washoku) டயட்... என்ன பலன் சார்?

Washoku food diet
Washoku food diet
Published on

2025 ல் ஜப்பானில், வேலைக்குச் செல்லும் 12,500 பேர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் அவர்கள் பின்பற்றிய பாரம்பரிய 'வாஷோகு' (Washoku) டயட், அவர்களின் மனஅழுத்தத்தை 17-20 சத விகிதம் குறைக்க உதவியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாஷோகு என்பது என்ன?

United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) பரிந்துரை செய்துள்ள உணவு வகைகளின் பட்டியலில் வாஷோகுவும் ஒன்று. இதில் மீன், மிஸோ சூப், அரிசி வகை உணவு, சோயா, காய்கறிகள், மஷ்ரூம், ஸீ வீட் (Sea Weed) மற்றும் க்ரீன் டீ போன்றவை அடக்கம். சீசனுக்கு ஏற்றபடி உணவு வகைகளை மாற்றியமைத்து சமநிலைப்படுத்திக் கொள்ளலாம்.

ஒமேகா-3: சால்மன் மற்றும் மாக்கரேல் போன்ற மீன் வகைகளிலிருந்து மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், மனநிலையை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவக்கூடிய EPA மற்றும் DHA ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கிடைக்கின்றன.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த காய்கறிகள்:

பச்சை இலைக் காய்கறிகள், ஸீ வீட் மற்றும் மஷ்ரூம்களில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மூளையில் உள்ள வீக்கங்களைக் குறைக்க உதவுகின்றன. வீக்கங்கள் குறைவதால் மன அழுத்தம் குறைகிறது.

மிஸோ சூப், சோயா மற்றும் க்ரீன் டீ போன்ற உணவுகளில் உள்ள ப்ரோபயோட்டிக்குகள் குடலிலுள்ள மைக்ரோபியோம்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன. இது குடல்(Gut)-மூளை ஆக்ஸிஸ் வழியாக மூளையின் ஆரோக்கியம் மேம்படவும் துணையாகிறது.

சோயா மற்றும் காய்கறிகளில் உள்ள ஃபொலேட் மற்றும் ஈசோஃபிளவோன்ஸ் ஆகிய ஊட்டச் சத்துக்கள் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நரம்பு மண்டல ஆரோக்கியம் மேம்பட உதவி புரிகின்றன.

வாஷோகுவில் உள்ள மிஸோ சூப்பின் ப்ரோத் (Broth) திலிருக்கும் உமாமி (Umami) சுவையானது உடலின் பாராசிம்ப்பதெட்டிக் நெர்வஸ் சிஸ்ட (Parasympathetic Nervous system)த்தை ஊக்குவித்து, உடலை அமைதியுடன் கூடிய தளர்வுற்ற நிலைக்கு எடுத்துச் செல்ல உதவி புரிகிறது.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானும் பெருமாளும் ஒரே கோயிலில் இரண்டு மூலவர்களாக அருளும் அரிய கோயில்!
Washoku food diet

ஆராய்ச்சியாளர்கள், 2018-2021-ஆம் ஆண்டுகளில், 12,500 பேர்களிடம் (இவர்களில் 88% ஆண்கள்) நடத்திய சர்வே முடிவுகளின் அடிப்படையில் ஒரு வலுவான ஆய்வு வடிவமைப்பை (Robust study design) வெளிக்கொணர்ந்துள்ளனர். சாதாரண உடற்பயிற்சி, தூக்கம், புகை பிடித்தல், வேலைப் பளுவினால் உண்டாகும் மன அழுத்தம் போன்ற, பயனர் நடத்தை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் எதுவும் இந்த வடிவமைப்பில் சிறிதளவு பாதிப்பைக்கூட உண்டு பண்ண முடியாது எனவும் கூறப்படுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வாஷோகு முறையைப் பின்பற்றி, ஆரோக்கியமான கொழுப்பு வகைகள், நொதிக்கச் செய்த உணவுகள், காய்கறிகள் மற்றும் முழு தானிய வகை உணவுகளை நாமும் உட்கொள்வோம். மன அழுத்தமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
மீன் எண்ணெய் மாத்திரை ஏன் சாப்பிடணும்? யார் சாப்பிடலாம்?
Washoku food diet

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com