காலையில் சில விஷயங்களை செய்வது மூளையை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இத்தகைய மூளைஆரோக்கியத்தை காக்கும் 9 காலை பழக்கங்கள் குறித்து இப்பதிவில் காண்போம் .
1. காலையில் இடையூறுகளை தவிர்க்கவேண்டும்
காலையில் எழுந்தவுடன் மெயில்களை செக் செய்வது, சமூக வலைதளங்களை பார்ப்பது, செய்திகளில் மூழ்குவதை கட்டாயம் ஒரு மணி நேரத்திற்கு தவிர்த்து விட்டு, அன்றைய நாளில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைவதோடு மூளை பல்வேறு டாஸ்க்குகள் செய்ய ஆயத்தப்படும்.
2. மிதமான உடற்பயிற்சி
காலையில் மிதமான உடற்பயிற்சிகள் (அதாவது வேகமாக நடப்பது) செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளைக்கு ஆக்சிஜன் செல்லும் அளவை அதிகரிப்பதால் நினைவாற்றல், கற்றல் மட்டும் ஒட்டுமொத்த நினைவாற்றல் ஆரோக்கியமும் மேம்படுகிறது .
3. காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது
காலையில் எழுந்தவுடன் இரவு இழந்த நீர் சத்துக்களை சரி செய்ய ஒரு டம்ளர் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும். நீர்ச் சத்துக்கள் இழப்பு, மூளையின் வேலையை குறைக்கும் என்பதால், மனத்தெளிவை முறைப்படுத்தவும், ஆற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்கவும், தண்ணீருடன் கொஞ்சம் எலுமிச்சை சேர்த்துக் கொண்டால் நல்ல வைட்டமின் சத்துக்கள் கிடைக்கும்.
4. காலை நேர சூரிய ஒளியில் குளியல்
காலையில் சூரிய ஒளியில் குளிப்பது உடலில் செரோட்டினின் அளவை அதிகரித்து, மெலோட்டினின் உற்பத்தியை முறைப்படுத்தி, மனநிலையை அதிகரிக்கிறது. மேலும் உறக்க சுழற்சியை மேம்படுத்தி மூளையின் கூர்மைக்கும் உதவி, ஆற்றலை அதிகரிக்கிறது.
5. ஆரோக்கிய காலை உணவு
காலையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த முட்டைகள், பெரிகள், நட்ஸ்கள், முழுதானியங்களை சாப்பிடவேண்டும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் கவனத்தை மேம்படுத்தி மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன .
6. தியானம்
தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பதால் அதிகாலையில் தியானத்தில் அமர வேண்டும். இது மூளையில் க்ரே மேட்டர் என்பதை அதிகரிக்கிறது. இதுதான் நினைவாற்றல், உணர்வுகள் கட்டுப்பாடு, பிரச்னைகளை தீர்க்கும் திறனை அதிகரிக்கிறது.
7. நேர்மறையான மற்றும் புதியவிஷயங்களை படிக்கவேண்டும்
காலையில் எழுந்தவுடன், முதல் 15 நிமிடங்கள் வாசிக்கவேண்டும். கற்றல், பசில்களை தீர்ப்பது போன்ற புதிய விஷயங்களை மூளைக்குக் கொடுக்கும்போது, அது மூளையைத் தூண்டி, நரம்பியல் பாதைகளை உருவாக்கி, கிரியேட்டிவிட்டியை மேம்படுத்துகிறது.
8. உங்கள் சிந்தனைகளை எழுதுவது மற்றும் நன்றி தெரிவிப்பது
உங்களின் இலக்குகள், சிந்தனைகள் மற்றும் நன்றி ஆகியவை குறித்து எழுதும்போது உங்களின் மனத்தெளிவு அதிகரிப்பதோடு, எழுதுவது நேர்மறை மனநிலையை உருவாக்கி பதற்றத்தைக் குறைக்கிறது.
9. வழக்கமான எழுந்திருக்கும் நேரம்
நீங்கள் அதிகாலையில் கண் விழிக்கும் நேரம் வழக்கமானதாக இருக்கவேண்டும். இது உங்கள் உடலில் உறக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை முறைப்படுத்தி மூளையின் திறனை அதிகரித்து நாள் முழுவதும் உற்சாகம் தருகிறது.
மேற்கூறிய ஒன்பது பழக்கங்களையும் காலையில் செய்வதால் மூளையின் செயல் திறன் கண்டிப்பாக அதிகரிக்கும்.