உடல் எடையை இயற்கையாய் குறைக்கும் ஆரோக்கிய மருத்துவப் பொடி!

Medical powder for weight loss
Medical powder for weight loss
Published on

யுர்வேதத்தில் உங்களுக்கு என்ன உடல்நலப் பிரச்னைகள் இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. அதை நீங்களே வீட்டில் செய்யலாம். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் ஆகியவை கலந்த பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் 3 மாதத்தில் உடலில் உள்ள அனைத்து கழிவுக் கொழுப்புகளும் கரைந்து உடல் எடை குறையும். எடை குறைவது மட்டுமின்றி, பல உடல் நலப் பிரச்னைகளுக்கும் இந்தப் பொடி நல்ல தீர்வாக செயல்படுகிறது. முடி வளர்ச்சி, இதயம் தொடர்பான நோய்கள், மலச்சிக்கல் மற்றும் உடல் எடையை குறைக்கவும் இப்பொடி சிறந்தது.

வெந்தயம் மற்றும் சீரகத்தின் கலவையை எடுத்துக்கொள்வது உடலில் கொழுப்பை திறம்பட நீக்குகிறது மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இது கொழுப்பை திறம்பட எரிக்கிறது. கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் ஆகியவை உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றன. இது படிப்படியாக எடையையும் குறைக்க உதவுகிறது. தாமதமின்றி உடல் எடையைக் குறைக்க இந்தப் பொடியை எப்படித் தயாரித்துப் பயன்படுத்துவது? இதில் என்னென்ன பயன்கள் உள்ளன என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

முதலில் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் ஆகிய மூன்றையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு சிறிது சூடாக்கவும். பிறகு இந்த மூன்று பொருட்களையும் கலந்து உலர வைக்கவும். உலர்ந்த பிறகு அவற்றை அரைத்து காற்றுப்புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்தப் பொடியுடன் சிறிதளவு இஞ்சி தூளைக் கலந்து பருகலாம். தேவையென்றால் இந்தப் பொடியுடன் சிறிது இஞ்சித் தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து வைத்தும் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
ஃபிரக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்கள் சந்திக்கும் விளைவுகள் என்னென்ன?
Medical powder for weight loss

தினமும் இரவு உணவுக்குப் பிறகு 1 கிளாஸ் வெந்நீரில் 1 டீஸ்பூன் பொடியைக் கலந்து குடிக்கவும். இதைக் குடித்த பிறகு எந்த உணவையும் எடுக்கக் கூடாது. மேலும், இரவில் குடிக்க முடியாதவர்கள் காலையில் வெதுவெதுப்பான நீரில் இதைக் குடிக்க வேண்டும். அல்லது சாப்பிட்ட பிறகு குடிக்கலாம். ஆனால், அதன் பிறகு வேறு எந்த உணவையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இந்தப் பொடியை தயிருடன் சேர்த்தும் சாப்பிடலாம். இது சுவையை அதிகரிக்கிறது. அதோடு, பல நன்மைகளையும் வழங்குகிறது. மோர் அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவு. குறிப்பாக, கோடைக்காலத்தில் இந்தப் பொடியை மோரில் சேர்த்தால் உடல் எடை விரைவில் குறையும். இந்தப் பொடியை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.

தொடர்ந்து 40 முதல் 50 நாட்களுக்கு இப்பொடியை உட்கொண்டால் சிறந்த பலன்களைப் பெறலாம். இதை 3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். இந்தப் பொடியைப் பயன்படுத்திய பிறகு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அனைத்தும் கரைந்து இரத்தம் சுத்தமாகும். உடலில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும். உடல் சுருக்கங்கள் மாறும், உடல் வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும், பொலிவாகவும் விளங்கும்.

இதையும் படியுங்கள்:
தேசப் பாதுகாப்புப் படைவீரர்களைப் போற்றும் தினம்!
Medical powder for weight loss

தீராத இருமலால் அவதிப்படுபவர்கள் இதை தினமும் இரவில் குடித்து வந்தால் இருமல் நீங்கும். மூளை சுறுசுறுப்பாக இருக்கும். செவித்திறன் அதிகரிக்கும். சர்க்கரை கட்டுக்குள் வரும். இந்தப் பொடியை தொடர்ந்து பயன்படுத்த விரும்புபவர்கள் பதினைந்து நாட்கள் இடைவெளியில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் குடிக்க ஆரம்பிக்கலாம். இந்தப் பொடியை 3 மாதங்கள் இடைவெளியின்றி பயன்படுத்தியவர்கள், மீண்டும் பயன்படுத்தினால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com