உலக அளவில் காற்று மாசுபாடு பெரிய அளவில் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவித்து மனிதனின் வாழ்நாளை குறைக்கிறது. மேலும் உலகில் 6க்கு ஒரு மரணம் சுற்றுசூழல் மாசு காரணமாக ஏற்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சிகரெட், மது, எய்ட்ஸ் மற்றும் காசநோய் போன்ற வேறு சில காரணங்களால் ஏற்படும் துர்மரணங்களை காட்டிலும் அதிகப்படிப்படியான மரணங்கள் மாசு காரணமாக ஏற்படுகிறதாம்.
வீட்டிலிருந்தே எளிதாக சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள...
2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட நுண்துகள்கள் பிஎம் 2.5 என்று அழைக்கப்படுகின்றன. இந்த பிஎம் 2.5 நுண்துகள்கள்தான் உடலுக்கு மிக தீங்கை விளைவிக்கும் தன்மை கொண்டவை. இந்தியாவில் இந்த துகள்கள்தான் அதிகம் இருக்கின்றன. இந்த 2.5 பிஎம் நுண் தூசு நாம் சுவாசிக்கும் போது நுரையீரல் வழியாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலில் அழற்சி எனும் inflammationஐ அதிகரிக்கிறது.
அதோடு, ஆக்ஸிடேடிவ் ஸ்டிரஸ்யையும் அதிகரிக்கிறது. இதுவே உடலில் இன்சுலின் உருவாக்கும் செல்களை அழித்து இன்சுலின் செயல்பாட்டை முடக்குகிறது. இதன் விளைவாக டைப் 2 சர்க்கரை நோய்யை உருவாக்குகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
தென் ஆசியாவில் இப்படி சத்தமில்லாமல் சர்க்கரை நோயாளிகளை அதிகரிக்க காற்று மாசு முக்கிய காரணியாக உள்ளது... குறிப்பாக, இந்தியாவில் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு கனமீட்டர் காற்றில் 10 மைக்ரோ கிராம் பிஎம்ஐ 2.5 நுண் மாசு துகள்கள் இருந்தாலே 22 சதவீதம் டைம் 2 சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
தாயின் வயிற்றில் இருக்கும் போது கடைசி மூன்று மாத காலத்தில் காற்று மாசுபாட்டுக்கு ஆளாகிற குழந்தைகள் பிற்காலத்தில் உயர் ரத்த அழுத்த குறைபாட்டை சந்திக்கிறார்கள் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். உலகில் பெருமளவில் மக்கள் மாசுபாடு நிறைந்த நச்சு காற்றை சுவாசிப்பதால் சுவாசக் கோளாறு பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.
மாசடைந்த காற்றை சுவாசிக்கும் போது அது குழந்தைகளின் மூளையின் ஆற்றலை பாதித்து அதனை தொடர்ந்து பல்வேறு உடல் நலக்குறைவுக்கு காரணமாகிறது என்கிறார்கள் உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர்கள். மாசு காற்று, குழந்தைகளை ஆட்டிசம் குழந்தைகளாக உருவாக்குகிறது என்கிறார்கள்.
நாம் சுவாசிக்கும் காற்றின் தன்மைக்கு ஏற்ப 'அல்சைமர்' நோய் வருவதாக அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் வில்லியம் கிராண்ட் என்பவர் கண்டறிந்துள்ளார். நாற்பது வயதிற்கு மேல் மனத்தளர்ச்சியினால் ஏற்படும் ஒரு வகை மறதி நோய் 'அல்சைமர்'. இந்த நோய் அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் அதிகம் வருவதாக கண்டறிந்துள்ளனர். எனவே சுத்தமான காற்றை சுவாசிக்கும் கிராமப்புற ஆசாமிகளுக்கு இந்த நோய் வர வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.
முக்கிய சாலைகளின் அருகில் வசிப்பவர்களுக்கு இருதய மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஜெர்மன் விஞ்ஞானிகள். சாலையிலிருந்து 50 மீட்டருக்குள் வசிப்பவர்களுக்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் நைட்ரஜன் டை ஆக்சைடு புகை மற்றும் வாகனங்களிலிருந்து வரும் இரைச்சல் தான் இவற்றிற்கு காரணம் என்கிறது ஆய்வு.
காற்று மாசுவின் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பல வழிமுறைகள் உள்ளன.
காற்று மாசுகளிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான சமையல் முறைக்கு மாறுங்கள்; வெளியேறும் புகையின் அருகில் இருப்பதை தவிருங்கள். குறைந்த புகை வெளியிடும் வாகனங்களை பயன்படுத்துங்கள்; முடியும் போதெல்லாம் நடந்து செல்லுங்கள்; மிதிவண்டியில் செல்லுங்கள்; இயற்கை சூழ்ந்த பசுமையான இடங்களில் நடைப்பயிற்சி செய்யுங்கள். வீட்டினுள் நல்ல காற்றோட்டம் இருக்க வீட்டில் செடிகளை வளர்க்கலாம். காற்று சுத்திகரிப்பான்கள், சிம்னி பயன்பாடுகளை நடைமுறைப்படுத்துங்கள்; பொது இடங்களுக்கு வெளியே செல்லும்போது தரமான N95/KN95 முகக்கவசம் அணியுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)
வீட்டிலிருந்தே எளிதாக சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள...