லட்ச ரூபாய் மருந்து வேண்டாம்... இந்த ஒரு பருப்பு உங்களை காப்பாற்றும்!

இதய நோய் மற்றும் புற்றுநோயை மிக எளிதாகத் தடுக்கும் சக்தி வாய்ந்த பருப்பு வகைகள் பற்றிய மருத்துவ ரகசியங்கள்.
Lentils பருப்பு வகைகள்
Lentils பருப்பு வகைகள்
Updated on

நமது இந்திய சமையலறைகளில் இருக்கும் பல மளிகைப் பொருட்கள் வெறும் பசியை போக்குவதற்காக மட்டுமல்லாமல், நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கும் பொக்கிஷங்களாக இருக்கின்றன. பல ஆயிரங்களைச் செலவழித்து நாம் வாங்கும் வெளிநாட்டு சூப்பர்ஃபுட் பொருட்களுக்கு நிகரான சத்துக்கள், நமது வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களிலேயே நிறைந்து கிடக்கின்றன. 

பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கரண் ராஜன் (Dr. Karan Rajan) என்பவர் சமீபத்தில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் நமது அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு உணவுப்பொருள் எப்படி இதய நோய் மற்றும் புற்றுநோயை தடுத்து நம் ஆயுளை நீட்டிக்கிறது என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அந்த அட்டகாசமான உணவுப் பொருள் வேறு எதுவும் இல்லை, அது தான் நாம் தினமும் சாப்பிடும் பருப்பு வகைகள். 

இதயத்தை பாதுகாக்கும் பருப்பு வகைகள்!

நமது உடலின் மிக முக்கியமான உறுப்பான இதயத்தை பாதுகாப்பதில் இந்த உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் அரை கப் அளவுக்கு இதை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வரும் அபாயம் முப்பத்தி எட்டு சதவீதம் வரை மிக எளிதாகக் குறைகிறது. மேலும் இதை மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு எட்டு சதவீதம் வரை அதிரடியாகக் குறைந்துவிடும். 

வாரத்திற்கு நான்கு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால் ஒட்டுமொத்த இருதய நோய்களின் ஆபத்தும் பெருமளவு தடுக்கப்படும். இது மனிதர்களின் ஆயுட்காலத்தை கணிசமாக அதிகரிக்கும் ஒரு அற்புதமான இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது.

Lentils பருப்பு வகைகள்
Lentils பருப்பு வகைகள்

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் பருப்பு வகைகள்!

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். காலையிலோ அல்லது மதியமோ இந்த உணவை நீங்கள் சாப்பிடும்போது, அந்த நாள் முழுவதும் உங்களின் ரத்த சர்க்கரை அளவு மிகவும் சீராக நிர்வகிக்கப்படுகிறது. இதில் உள்ள எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் பல மணி நேரத்திற்கு இன்சுலின் உணர்திறனை மிகச்சரியாக மேம்படுத்துகின்றன. 

இதை மருத்துவ உலகில் இரண்டாவது உணவு விளைவு என்று அழைப்பார்கள். ஒருமுறை சாப்பிட்டால் அதன் அபாரமான நன்மை அடுத்த உணவு வரை தொடர்வது இதன் தனிச்சிறப்பாகும்.

இதையும் படியுங்கள்:
உடல் நலம் காக்கும் 'நீர்ச்சத்து' பெட்டகம்... 'பீர்க்கு' தரும் பாதுகாப்பு வளையம்!
Lentils பருப்பு வகைகள்

புற்றுநோயை தடுக்கும் பருப்பு வகைகள்!

இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்ற உணவுகளைப் போலப் பெருங்குடலின் ஆரம்பத்திலேயே செரிமானம் ஆவதில்லை. இதில் காலக்டோலிகோசாக்ரைடுகள் (Galactooligosaccharides) எனப்படும் மெதுவாகப் புளிக்கும் சிறப்பு நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை பெருங்குடலின் இறுதிப் பகுதி வரை பயணம் செய்து, அங்குள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு மிகச்சிறந்த உணவாக மாறுகின்றன. 

இப்படி நடக்கும்போது பியூட்ரேட் (Butyrate) எனப்படும் ஒரு வேதிப்பொருள் உருவாகிறது. இது பெருங்குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அங்கு உருவாகும் கேன்சர் செல்களை முளையிலேயே கிள்ளி எறியும் மாபெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ! வெயில்ல வயிறு எரியுதா? இந்த 5 உணவுகளை உடனே சாப்பிடுங்க!
Lentils பருப்பு வகைகள்

லட்சக்கணக்கில் செலவு செய்து மருத்துவமனைக்குச் செல்வதை விட, நமது சமையலறையில் இருக்கும் இந்த மலிவான உணவை தினமும் அளவோடு சாப்பிடுவது எவ்வளவோ புத்திசாலித்தனமானது. வெறும் சுவைக்காக மட்டும் சாப்பிடாமல், நமது உடலுக்குத் தேவையான அபரிமிதமான புரதம் மற்றும் நார்ச்சத்துக்களை அள்ளித் தரும் இந்த அருமருந்தை இனிமேல் யாரும் தவிர்க்க வேண்டாம்.

References: Health Benefits of Lentils

Protein and fiber rich food that reduces heart disease risk, cholesterol, has anti-cancer properties

logo
Kalki Online
kalkionline.com