100 வயசு வரைக்கும் நோயில்லாமல் வாழ பழங்கால மக்கள் செய்த சீக்ரெட் ட்ரிக்ஸ் இதோ!

Ancient Health Secrets
Ancient Health SecretsAI Image
Published on

இன்றைய காலகட்டத்தில் நூறு வயது வரை வாழ்வது, ஒரு மாபெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. விதவிதமான டயட் முறைகள், ஜிம் வொர்க்அவுட் என நாம் ஆரோக்கியத்தைத் தேடி ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க மற்றும் ரோமானிய மக்கள் எந்த ஒரு நவீன மருத்துவ வசதியும் இல்லாமல் மிக எளிதாக நீண்ட ஆயுளோடு வாழ்ந்துள்ளார்கள். 

இதைப் பற்றி பழங்கால மருத்துவர்களும் அறிஞர்களும் தங்களது புத்தகங்களில் பல சுவாரஸ்யமான குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். அவர்கள் எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான அந்த பழங்கால சீக்ரெட்ஸ்களைப் பார்க்கலாம் வாங்க.

பழங்கால கிரேக்க அறிஞர்கள் தங்களது குறிப்புகளில் நூறு வயது என்பது மிகவும் சாதாரணம் என்றும், சில குறிப்பிட்ட தேசங்களில் மக்கள் 300 வருடங்கள் வரை கூட ஆரோக்கியமாக வாழ்ந்ததாக பல ஆச்சரியமான கதைகளைப் பதிவு செய்துள்ளனர். இதற்குக் காரணம் அந்த ஊரின் தூய்மையான சீதோஷ்ண நிலை, அங்குள்ள இயற்கையான மண் வளம் மற்றும் அவர்கள் குடிக்கும் சுத்தமான தண்ணீர் என்று அவர்கள் ஆழமாக நம்பினார்கள். 

எந்த ஒரு கலப்படமும் இல்லாத வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு, சாதாரண பார்லி ரொட்டிகளைச் சாப்பிட்டு தங்களது கண்பார்வையைக் கூட இறுதிவரை மங்காமல் பாதுகாத்த சில ஆச்சரியமான மனிதர்களைப் பற்றிய குறிப்புகளும் அந்தப் பழங்காலப் பதிவுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.

எளிமையான உணவுப் பழக்கம்!

அக்காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் நீண்ட ஆயுளோடு இருந்த சிலரை மிக உன்னிப்பாக கவனித்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டனர். எண்பது மற்றும் நூறு வயதை நெருங்கிய சிலரை உதாரணமாகக் கொண்டு இதனை விளக்குகிறார்கள். இவர்களது நீண்ட ஆயுளுக்கு மிக முக்கியக் காரணம் அவர்களின் மிகவும் எளிமையான உணவு முறைதான். ஒரு நாளைக்கு மூன்று வேளை மட்டுமே அளவாகச் சாப்பிடுவதை இவர்கள் எப்போதுமே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். 

உயர்தரமான தேன் கலந்த கஞ்சி, சுட்ட ரொட்டி, காய்கறிகள் மற்றும் கடலில் கிடைக்கும் மீன்கள் மட்டுமே இவர்களது அன்றாட உணவாக இருந்துள்ளது. எந்த ஒரு ரசாயனமும் இல்லாத, இயற்கையான உணவுகளை மட்டுமே இவர்கள் தங்களது மெனுவில் வைத்திருந்தார்கள். இரவு நேரங்களில் மிகவும் எளிமையாகச் சாப்பிட்டு தங்களது வயிறு மற்றும் குடலை மிகவும் லேசாக வைத்துள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
60+ வயதானால் உடற்பயிற்சி செய்யலாமா?
Ancient Health Secrets

உடற்பயிற்சி, ஆலிவ் எண்ணெய் மசாஜ்!

உணவைத் தாண்டி அவர்களின் தினசரி வாழ்க்கை முறையும் மிகவும் வித்தியாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்துள்ளது. தினமும் காலையில் எழுந்தவுடன் தூய்மையான ஆலிவ் எண்ணெயைக் கொண்டு உடலுக்கு நன்றாக மசாஜ் செய்வதை அவர்கள் ஒரு கட்டாயப் பழக்கமாகவே வைத்திருந்தார்கள். இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்கி அவர்களுக்கு ஒரு பெரிய புத்துணர்ச்சியைத் தந்துள்ளது. 

அதேபோல எந்த ஒரு கடினமான உடற்பயிற்சிகளையும் செய்யாமல், தங்களது வயதிற்கு ஏற்றவாறு மெதுவாக நடப்பது போன்ற மிகவும் எளிய பயிற்சிகளை மட்டுமே தினமும் செய்துள்ளார்கள். ஆச்சரியப்படும் விதமாக, இவர்களில் சிலர் தினமும் குளிக்கும் வழக்கத்தைக் கூட வைத்திருக்கவில்லை. மாதத்திற்குச் சில முறை மட்டுமே குளித்தாலும், தினசரி எண்ணெய்க் குளியல் மற்றும் மசாஜ் மூலம் தங்களது உடலை மிகவும் சுத்தமாகவும் நோய்கள் அண்டாமலும் மிகச் சிறப்பாகப் பராமரித்து வந்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சுவரில் உள்ள கிறுக்கல்களைப் பார்த்து பதற வேண்டாம்... இதோ எளிமையான தீர்வு!
Ancient Health Secrets

எளிமையான சாப்பாடு, உடலுக்குத் தேவையான சிறிய அளவிலான பயிற்சிகள் மற்றும் இயற்கையோடு இணைந்த ஒரு அமைதியான வாழ்க்கை முறை ஆகிய இந்த மூன்று விஷயங்கள் மட்டுமே அவர்களின் நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்பது தெளிவாகிறது. 

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com