கீழே விழுந்து கணுக்கால் வீங்கினால் என்ன செய்ய வேண்டும்? இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்!

ஐஸ் ஒத்தடம், கால் உயர்த்தி வைத்தல் முதல் மசாஜ் தவிர்ப்பது மற்றும் மருத்துவரை அணுக வேண்டிய நேரங்கள் வரை.
Ankle swelling first aid | கணுக்கால் வீக்கத்திற்கான முதலுதவி
Ankle swelling first aid | கணுக்கால் வீக்கத்திற்கான முதலுதவிImage Credit: ChatGPT
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

கணுக்காலில் (Ankle) அடிபட்டு வீக்கம் ஏற்பட்டால், சுளுக்கு அல்லது எலும்புகளில் பெரிய முறிவு ஏற்படுவதைத் தடுக்கவும் வலி/வீக்கத்தைக் குறைக்கவும் உடனடியாக R.I.C.E. எனப்படும் முதலுதவி முறையைப் பின்பற்ற வேண்டும்.

​ஓய்வு (Rest):

அடிபட்ட காலைப் பயன்படுத்தாமல் உடனடியாக ஓய்வு கொடுக்க வேண்டும். அடிபட்ட காலின் மீது உடலின் எடையைக் கொடுத்து நடக்க முயற்சிக்கக் கூடாது. இது காயத்தை மேலும் தீவிரமாக்கும்.

​பனிக்கட்டி ஒத்தடம் (Ice):

வீக்கம் மற்றும் உள்ளார்ந்த இரத்தக் கசிவைக் குறைக்கப் பனிக்கட்டி (Ice pack) ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

​பனிக்கட்டியை நேரடியாகச் சருமத்தில் வைக்காமல், ஒரு துணியில் சுற்றி வீக்கம் உள்ள இடத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

​முதல் 24 முதல் 48 மணி நேரத்திற்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை இவ்வாறு செய்யலாம்.

​மிதமான கட்டு (Compression):

​இளகிய மீள்தன்மை கொண்ட பேண்டேஜ் துணியைக் கொண்டு (Elastic / Crepe Bandage) கணுக்காலைச் சுற்றி மென்மையாகக் கட்ட வேண்டும். கட்டு மிகவும் இறுக்கமாக இருக்கக் கூடாது. ரத்த ஓட்டம் தடைபடாதவாறு மிதமான அழுத்தத்துடன் இருக்க வேண்டும். என்றாலும் அந்த கட்டையை சரியாக அனைவருக்கும் போடத் தெரியாததால் அதை டாக்டர் தவிர்க்க சொல்கிறார்கள். அவர்களே எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு பின்னர் போட்டு விடுகிறார்கள்.

​காலை உயர்த்தி வைத்தல் (Elevation):

உட்காரும் போதோ அல்லது படுக்கும் போதோ அடிபட்ட காலை இதயத்தின் மட்டத்திற்குச் சற்று உயரமாக தூக்கி வைக்க வேண்டும்.

காலின் கீழே 2 அல்லது 3 தலையணைகளை வைத்து உயர்த்தலாம். இது திசுக்களில் நீர் கோர்ப்பதைத் தடுத்து வீக்கத்தைக் குறைக்க உதவும்.

Ankle swelling first aid | கணுக்கால் வீக்கத்திற்கான முதலுதவி
Ankle swelling first aid | கணுக்கால் வீக்கத்திற்கான முதலுதவி

கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியவை:

  • அடிபட்ட இடத்தில் எண்ணெய் தேய்த்து அழுத்தமாக உருவுவது அல்லது மசாஜ் செய்வது காலுக்கான பயிற்சி செய்வது முற்றிலும் கூடாது.

  • வலி குறையும் வரை ஓடுதல், குதித்தல் அல்லது கனமான எடைகளைத் தூக்குவதைத் தவிர்க்கவும்.

​எப்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்?

  • ​காலில் எடையை வைத்து ஊன்றி நிற்கவே முடியாவிட்டால்.

  • கணுக்கால் எலும்பு இயல்பு நிலைக்கு மாறாக வளைந்து/கோணலாகக் காணப்பட்டால்.

  • அடிபட்ட இடத்தில் மரத்துப் போன உணர்வு (Numbness) அல்லது கால் விரல்கள் நீல நிறமாக மாறினால்.

  • 2-3 நாட்கள் கழித்தும் வீக்கம் மற்றும் வலி குறையாமல் அதிகரித்துக் கொண்டே சென்றால்

நாட்களைக் கடத்தாமல் மருத்துவரிடம் செல்வது அவசியம்.

​மருத்துவரிடம் சென்ற பிறகும் கணுக்காலில் தசைநார் கிழிசல் (Sprain) அல்லது சிறிய எலும்பு முறிவு (Fracture) இருக்கிறதா என்பதை எக்ஸ்-ரே (X-Ray) எடுத்துப் பார்த்து உறுதி செய்துகொள்வது பாதுகாப்பானதுடன் மிக மிக அவசியமானது.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்டவுடன் குளித்தால் செரிமானம் கெடுமா? அறிவியல் சொல்லும் விளக்கம்!
Ankle swelling first aid | கணுக்கால் வீக்கத்திற்கான முதலுதவி

மேலும் டாக்டர் எக்ஸ்ரேயைப் பார்த்துவிட்டு கிரிப்பாண்டேஜ் போட்டு விடுகிறார்கள். போட்டிருக்கும் ஐந்து நாட்களில் வாக்கர் வாங்கி வைத்து நடந்தால் முதுகு வலி வராமல் தவிர்க்கலாம். அதை விடுத்து சுவற்றையோ வேறு ஏதாவதையோ பிடித்துக் கொண்டு நடப்பது போன்ற வேலைகளை செய்யாமல் இருப்பது மிக மிக அவசியம். அப்படி செய்தால் முதுகு வலி தோள்பட்டை வலி எல்லாமே வரும். இது தேவையற்ற மன அழுத்தத்தைக் கொடுக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அடிபட்ட உடனேயே ஐஸ் ஒத்தடம் கொடுத்தும் கால் வீங்கி வலி குறையாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுவதுதான் நலம் பயப்பதாக இருக்கும். கிரிப் பேண்டேஜ் அவர்களே போடுவது போதுமான நெகிழிவு தன்மையுடன் சரியான முறையில் போடப்படுகிறது என்பதுதான் அனுபவத்தில் கண்ட உண்மை. அதை அடிக்கடி கழற்றாமல் இருப்பதும் மிக மிக அவசியம்.

இதையும் படியுங்கள்:
குளிரில் கை கால்கள் மட்டும் ஐஸ் போல் சில்லென்று ஆவது ஏன்? மறைந்திருக்கும் காரணம்!
Ankle swelling first aid | கணுக்கால் வீக்கத்திற்கான முதலுதவி

இது கிழக்கு தாம்பரத்தில் இருக்கும் COSH மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கௌதமன் என்கின்ற எலும்பு முறிவு டாக்டரிடம் நான் சிகிச்சை பெற்று வரும் போது நேரடியாக கேட்டு எழுதிய முதலுதவி குறிப்புகள்.