சாப்பிட்டவுடன் குளித்தால் செரிமானம் கெடுமா? அறிவியல் சொல்லும் விளக்கம்!

நீரில் குளிப்பது ரத்த ஓட்டத்தை மாற்றுமா? யாருக்கு அசௌகரியம் வரலாம், எவ்வளவு நேரம் கழித்துக் குளிக்கலாம்?
Bath After Eating | சாப்பிட்டவுடன் குளித்தால்
Bath After Eating | சாப்பிட்டவுடன் குளித்தால்Image Credit: ChatGPT
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

பொதுவாகவே நம்முடைய கலாச்சாரத்தில் சாப்பிட்ட உடன் குளிக்கக்கூடாது என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற அறிவுரையாக இருக்கிறது. இது உண்மையிலேயே அறிவியல் ரீதியான அறிவுரையா அல்லது மூட நம்பிக்கையா... சாப்பிட்ட உடனே குளித்தால் செரிமானம் பாதிக்கப்படுமா? என்பது குறித்து விரிவாக அறிந்துகொள்ளலாம் வாங்க...

நாம் சாப்பிட்ட பிறகு, உணவைச் செரிப்பதற்காக வயிறு மற்றும் செரிமான மண்டலத்திற்கு அதிக இரத்த ஓட்டம் தேவைப்படும். சாப்பிட்ட உடனே குளிக்கும்போது, உடல் வெப்பநிலையைச் சீராக்க இரத்த ஓட்டம் சருமத்தை நோக்கித் திசைதிருப்பப்படுகிறது.

இதனால் செரிமானம் மெதுவாகி, அஜீரணம், வயிற்று வலி, வாயுத் தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சாப்பிட்ட உடனே குளிப்பதால் செரிமானம் முற்றிலுமாக நின்றுவிடாது அல்லது பெரிய ஆபத்து ஏற்படாது; ஆனால் செரிமான வேகம் சற்று குறையலாம்.

பொதுவாக சாப்பிட்ட பிறகு நம் உடல் மிகப்பெரிய ஆற்றல் சார்ந்த வேலையை, அதாவது ஆற்றலைச் செலவழிக்கத் தொடங்குகிறது. அந்த நேரத்தில் நாம் செய்யும் சில தவறுகள் ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதில் முதன்மையானது, சாப்பிட்ட உடனே குளிப்பது.

Bath After Eating | சாப்பிட்டவுடன் குளித்தால்
Bath After Eating | சாப்பிட்டவுடன் குளித்தால்Image Credit: Gemini

நாம் உணவை சாப்பிட்டவுடன், அதைச் செரிக்க வைப்பதற்காக நம் உடலின் பெரும்பான்மை ஆற்றலும், ரத்த ஓட்டமும் வயிற்றுப் பகுதியை நோக்கிப் பாயும். அப்போது வயிற்றுப் பகுதியில் அதிகரிக்கும் வெப்பமும், ரத்த ஓட்டமும் தான் செரிமான அமிலங்கள் (Digestive Enzymes) சீராகச் சுரப்பதற்கும், குடல் சுவர்கள் உணவிலுள்ள சத்துகளை உறிஞ்சுவதற்கும் உதவி புரிகின்றன.

ஆனால் நாம் சாப்பிட்ட உடனே குளிக்கும் போது உடலின் வெளிப்புற வெப்பநிலை சட்டென்று குறைய தொடங்கும். அப்போது வெளிப்புற வெப்பநிலையைச் சமன் செய்வதற்காக, வயிற்றுப் பகுதியில் இருக்க வேண்டிய ரத்த ஓட்டம், திடீரென கை, கால்கள் மற்றும் சருமத்தின் மேல் பகுதிக்குத் திசைமாறிச் சென்றுவிடுவதால், செரிமானப் பகுதிக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு கணிசமாகக் குறைகிறது.

அதேசமயம், வயிற்றுக்குத் தேவையான ரத்தம் கிடைக்காததால், ஜீரண செயல்பாடு மிகவும் மந்தமாகிறது. இதனால் உணவானது நீண்ட நேரம் வயிற்றில் தேங்கி விடுவதுடன், உணவு சரியாகச் செரிக்காததால் ஒரு சிலருக்கு புளித்துப் போய், வயிற்று உப்புசம், கடுமையான நெஞ்செரிச்சல் (Acid Reflux), வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்று வலி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

அறிவியல் என்ன சொல்கிறது?

அதிக சுடுநீரில் குளிப்பது இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும்; மிகவும் குளிர்ந்த நீரில் குளிப்பது இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்யும். இந்தத் திடீர் மாற்றம் வயிற்றுப் பிடிப்பு அல்லது வாயுத் தொல்லையை (வயிறு உப்புசம்) தூண்டலாம்.

ஆரோக்கியமான ஒருவருக்கு சாப்பிட்டவுடன் குளிப்பதால் கடுமையான வயிற்றுப் பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கு உறுதியான மருத்துவ ஆய்வு ஆதாரங்கள் இல்லை. உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் போதுமான ரத்த ஓட்டத்தைச் சமாளிக்கும் திறன் உள்ளது.

யாருக்கு அசௌகரியம் ஏற்படலாம்?

அனைவருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை என்றாலும், கீழ்க்கண்டவர்களுக்கு வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் அல்லது மந்தமான உணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது:

Stomach Pain|செரிமானம் பாதிக்கப்படுமா
Stomach Pain|செரிமானம் பாதிக்கப்படுமா

அதிக கொழுப்பு, காரம், புரதம், மசாலா நிறைந்த கனமான உணவுகளைச் சாப்பிட்ட உடனே குளிக்கும்போது, வயிற்றில் அழுத்தம் ஏற்பட்டு நெஞ்செரிச்சல் (Acid Reflux) உண்டாக வாய்ப்பு அதிகம்.

ஏற்கனவே அசிடிட்டி (Acid reflux), அல்சர் அல்லது செரிமானக் கோளாறுகள் (IBS) உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

பின்பற்ற வேண்டிய எளிய வழிகள்:

பொதுவாக சாதாரண உணவு சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் கழித்துக் குளிப்பது நல்லது. மிகவும் கனமான உணவு சாப்பிட்டிருந்தால் ஒற்றரை முதல் 2 மணி நேரம் கழித்துக் குளிப்பது சிறந்தது.

முடிந்தவரை காலை அல்லது இரவு உணவுக்கு முன்பே குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கலாமா? - அறிவியல் உண்மைகளும், மூடநம்பிக்கைகளும் !
Bath After Eating | சாப்பிட்டவுடன் குளித்தால்

தவிர்க்க முடியாத காரணங்களால் சாப்பிட்ட பிறகு கட்டாயம் குளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதிக சூடான அல்லது மிகவும் குளிர்ந்த நீரைத் தவிர்த்து, வெதுவெதுப்பான (Lukewarm) நீரில் குளியுங்கள்.

வயிறு நிறைந்திருக்கும்போது குளிக்கும்போது அதிகமாகக் குனிந்து வேலை செய்வது வயிற்று அமிலம் மேலே எழும்பி நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம்.

இந்த அறிகுறிகள் குளிக்காத நேரங்களிலும் தொடர்ந்து இருந்தாலோ அல்லது கடுமையான வயிற்று வலி இருந்தாலோ, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

எப்போதும் குளித்துவிட்டுப் பிறகு சாப்பிடுவதே உடலுக்கும் செரிமானத்திற்கும் மிகவும் உகந்தது.

நம் உடல் சாப்பிட்ட உணவை ஓரளவாவது உடைத்து, செரிமானப் பாதையைச் சீரமைக்கக் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். தினமும் சாப்பிடுவதற்கு முன்பே குளித்து முடிப்பது உடலுக்குக் சுறுசுறுப்பைத் தரும்... பசியைத் தூண்டும்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்ட உடனே 10 நிமிடம் நடந்தால் இத்தனை நன்மைகளா?
Bath After Eating | சாப்பிட்டவுடன் குளித்தால்