Aquaphobia: குழந்தைகளுக்கு தண்ணீர் பயம் வரக் காரணம் பெற்றோரா?

Aquaphobia
Fear of Water - Aquaphobia
Published on

நீர்வாழ் உயிரினங்கள் மீது பயம் உள்ளவர்களுக்கு தண்ணீர் பயம் இருக்கும். அக்வா ஃபோபியா(Aquaphobia) என்பது நீர், நீர்நிலைகள், வெள்ளம், நீரின் ஓட்டம் போன்றவற்றை கண்டு பயப்படுவதாகும். தண்ணீரை கண்டாலே ஏற்படும் பதட்டம், இதயத்துடிப்பு அதிகரிப்பு, பயந்து விலகி செல்லுதல் போன்றவை ஏற்படும்.

அறிகுறிகள்:

தண்ணீரை பற்றி நினைக்கும் பொழுது அல்லது பார்க்கும் பொழுது ஏற்படும் பயம் அல்லது பதட்டம் அக்வா ஃபோபியாவின் (Aquaphobia) அறிகுறியாகும்‌.

ஆழமான நீர், அலைகள் அல்லது நீச்சல் குளங்கள் போன்ற குறிப்பிட்ட நீர்நிலைகளைக் கண்டு பயப்படுவது. குளியல் தொட்டிகள், நீச்சல் குளங்கள் போன்ற நீர் நிலைகளுக்கு அருகில் செல்லும் போது கடுமையான பயம் ஏற்படுதல், தண்ணீரைக் கண்டால் மயக்கம் உண்டாகுதல் போன்றவை அறிகுறிகளாகும்.

இந்த பயம் பெரியவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது.

தலைசுற்றல் அல்லது மயக்கம், கடுமையான வியர்வை, குமட்டல் உண்டாவது. விரைவான சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு, தசைகள் நடுங்குதல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் தோன்றலாம்.

அக்வா ஃபோபியாவுடன் தொடர்புடைய வேறு சில பயங்கள்:

  • சைமோபோபியா (Cymophobia) - அலைகளைப் பார்த்து பயப்படுதல்

  • மெகாலோஹைட்ரோதலசோபோபியாா (Megalohydrothalassophobia) - நீருக்கடியில் உள்ள உயிரினங்கள் அல்லது பொருட்களைப் பற்றி பயம்

  • தலசோபோபியா(Thalassophobia) - பெரிய நீர்நிலைகளைக் கண்டு பயப்படுதல்.

காரணங்கள்:

தண்ணீருடன் தொடர்புடைய எதுவும் அக்வா ஃபோபியாவை (Aquaphobia) ஏற்படுத்தக் கூடும். நீர் தந்த கசப்பான அனுபவங்கள் காரணமாக இந்த பயம் ஏற்படலாம். பெற்றோர்கள் குழந்தைகளிடையே சிறுவயதில் நீர்நிலைகள் குறித்த பயத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இது வரலாம். நீர்வளம் இல்லாத பாலைவனப் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட நீர் பயத்தால் பாதிக்கப்படலாம்.

இதையும் படியுங்கள்:
Pot Water Benefits: மண்பானையில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? 
Aquaphobia

அதிகப்படியான பாதுகாப்பு வளர்ப்பு அல்லது பெற்றோருக்கு அக்வா ஃபோபியா இருப்பது போன்ற மரபணு காரணிகள் பிள்ளைகளில் பயத்தை உருவாக்கலாம்.

நீரில் மூழ்கி விடுவோமோ என்ற உள்ளுணர்வு பயம், அடிப்படை நீச்சல் திறன் இல்லாததால் ஏற்படும் பாதுகாப்பின்மை உணர்வு, கடந்த கால அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் தண்ணீரைப் பற்றிய பயத்தை உருவாக்கலாம்.

சிகிச்சைகள்:

வெளிப்பாடு சிகிச்சை (Exposure therapy):

தண்ணீரின் மீதுள்ள பயத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாதுகாப்பான சூழலில் தண்ணீருடன் படிப்படியாக பழக்கப்படுத்தும் வெளிப்பாடு சிகிச்சைமுறை. மனநல மருத்துவர் அறிகுறிகளை தூண்டக்கூடிய சூழ்நிலைகள் மற்றும் கற்பனைகளை வெளிப்படுத்தி, அவை படிப்படியாக உங்கள் எதிர்வினையை நிர்வகிக்க உதவும் வகையில் இந்த உளவியல் சிகிச்சை முறையை கையாளுவார்.

அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavioral therapy CBT):

இந்த சிகிச்சை பயத்திற்கு வழிவகுக்கும் எண்ணங்களையும் நடத்தைகளையும் மாற்றுவதற்கு உதவுகிறது. அறிகுறிகளைத் தூண்டும் சூழ்நிலைகள் மற்றும் பொருட்களை பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள், எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை மாற்றி கற்றுக்கொள்ள இந்த CBT உதவுகிறது. இவை பயத்தை நிர்வகிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
செல்போனை எப்போதும் பிரிய மனம் வரவில்லையா? அப்ப உங்களுக்கு நோமோபோபியா தான்!
Aquaphobia

ஹிப்னோதெரபி (Hypnotherapy) மற்றும் மருந்துகள்:

சில சந்தர்ப்பங்களில் மனநல நிபுணர்கள் ஹிப்னோதெரபியை மூலம் தளர்வு நுட்பங்களை பயன்படுத்துவதும், அக்வா ஃபோபியா அறிகுறிகளை குறைக்க பதட்ட எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com