மனிதன் ஆரோக்கியமாக வாழ தினமும் தேன் சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளலாம். இதய நோய் வராமல், இளமையைத் தக்க வைக்கும், எடையைக் குறைக்கும் தன்மை கொண்ட தேன், பல நன்மைகளை வழங்குகிறது. இந்த தேனுடன் இலவங்கப்பட்டை பொடியை உணவில் சேர்த்துக்கொள்ள பலவித நன்மைகள் கிடைக்கின்றன.
* தினமும் தேனுடன் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிட்டு வர அல்சர் பிரச்னை குணமாகும்.
* தேனுடன் இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் சொரி, சிரங்குகள் குணமாக்கும்.
* புற்றுநோய் பாதித்தவர்கள் தேன், இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிடுவதால் நோயினால் உண்டான பாதிப்பு குறையும்.
* 2 டீஸ்பூன் இலவங்கப் பொடியுடன், 1 டீஸ்பூன் தேனை மிதமான சுடுநீரில் கலந்து சாப்பிட சிறுநீரக பாதிப்புகள் குணமாகும்.
* தேன், இலவங்கப்பட்டை பொடி வாயு தொல்லையைப் போக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது.
* உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. கிருமிகளுக்கு எதிராக உடலை வலுவாக்குகிறது.
* வயதானவர்கள் தேன், பட்டை பொடியை உணவில் சேர்த்துக்கொள்ள இழந்த சக்தியை அவர்களுக்கு மீட்டுக் கொடுக்கும்.
* வாய் துர்நாற்றத்தைப் போக்குவதோடு பற்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
* தேன், இலவங்கப்பட்டை பொடியை இருவேளை சாப்பிட்டு வர, காது மந்தம் குணமாகும்.
* வயிற்றின் அஜீரணத்தைப் போக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* இளமையுடன் இருக்க தேன், பட்டை பொடி உதவுகிறது. வெந்நீரில் தேன், இலவங்கப்பட்டை பொடியை கலந்து அருந்தி வர கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.
* வெதுவெதுப்பான தேன், இலவங்கப்பட்டை பொடி சைனஸ், சளி, இருமலை குணமாக்கி தொண்டை கரகரப்பு, தொண்டையில் புண் ஆகியவற்றை குணமாக்கும்.
* தேன், இலவங்கப் பொடியுடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், கபம் நீங்கும்.
இப்படிப் பல்வேறு வகையான குணங்களைக் கொடுக்கக்கூடிய தேன், பட்டை பொடியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.