எந்த வயதில் நீங்கள் நல்ல தூக்கத்தைப் பெறுகிறீர்கள்? தூக்கம் என்பது வயதுக்கு ஏற்ப பரிணமிக்கும் ஒரு செயல்முறையாகும். இளம் வயது முதல் முதுமை வரை நமது தூக்க அமைப்பு குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்; வாழும் காலம் வரை ஒருவர் நல்ல தூக்கத்தை எவ்வாறு பராமரிக்கலாம்?
20 முதல் 40 வயதுடையவர்கள்
20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பொதுவாக சிறந்த தூக்கத்தைப் பெறுகிறார்கள். அவர்களின் உடல் இயற்கையாகவே ஆழ்ந்த தூக்கத்திற்கு ஒத்துழைக்கும். அதுவே அடுத்த நாள் அவர்களைப் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் உணர வைக்கும். இதற்கு அவர்களின் உள் உடல் கடிகாரமும் (circadian rhythm) சீராக இருப்பதால், அவர்கள் தூங்கி எளிதாக எழுந்திருப்பார்கள். இந்த வயதுடையோர் இரவில் 4 முதல் 6 சுற்றுகள்(Cycles) தூக்கத்தை சந்திப்பார்கள் (light sleep, deep sleep, and dream sleep (REM)). ஒவ்வொரு சுற்றும் சுமார் 1.5 முதல் 2 மணி நேரம் வரை நீடிக்கும். இவைதான் அவர்களின் மூளை, உடலை செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
60 வயதிற்கு மேல்
60 வயதிற்கு மேல் வயதாகும்போது குறிப்பாக 60 வயதிற்கு மேல் மனிதர்களின் தூக்கம் கொஞ்சம் மாறுபடும். அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் (deep sleep) குறைந்த நேரத்தையும், இலகுவான தூக்கத்தில் (light sleep) அதிக நேரத்தையும் செலவிடுவார்கள்; இதனால் பெரும்பாலும் இரவில் அடிக்கடி எழுந்திருப்பார்கள். இந்த மாற்றத்திற்கான காரணம் மெலடோனின் (melatonin) உற்பத்தி குறைதல், circadian rhythm-ல் ஏற்படும் மாற்றங்கள், வயது தொடர்பான சுகாதார நிலைமைகள் அல்லது அதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் ஒரு காரணமாகும்.
இதிலிருந்து மீள முடியுமா?
அனைத்து வயதான நபர்களும் மோசமான தூக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள். நிலையான தூக்க அட்டவணைகள், குறைக்கப்பட்ட திரை நேரம் (reduced screen time), அமைதியான படுக்கை அறை சூழல் என்று வயதானவர்கள் தங்கள் தூக்கத்தின் தரத்தைக் கணிசமாக மேம்படுத்தலாம்.
தூக்கமின்மைக்கான அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive behavioral therapy for insomnia (CBT-I)), ஒளி சிகிச்சை (Light therapy), மருத்துவ வழிகாட்டுதலின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் மெலடோனின் மருந்துகள் (melatonin supplements) கூட பெரியவர்களின் தூக்க தரத்தை மேம்படுத்தும். இதனால் அவர்கள் இளைய வயதினர்போல் 7-9 மணி நேர தூக்க நேரத்தையும் அடையலாம்.
தூக்கம் என்பது வெறும் வயதை மட்டும் சார்ந்தது அல்ல; அது நம் பழக்க வழக்கங்களையும் சார்ந்ததுதான். உயிரியல் மாற்றங்களைப் (biological shifts) புரிந்துகொள்வதன் மூலமும், சில வடிவமைக்கப்பட்ட உத்திகளைப் பின்பற்றுவதன் மூலமும் 70 மற்றும் 80 வயதுடையவர்கள்கூட இளைய வயதினருக்குக் கிடைக்கும் சீரான ஆழ்ந்த தூக்கத்தை (7-9 hours) அனுபவிக்க முடியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)