இரத்த சோகையைப் போக்கி உடல் நலம் பெருக்கும் அவல் உணவு!

Aval food
Aval food
Published on

ரிசியிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள் அவல். நமது பாரம்பரிய உணவு வகைகளில் அவல் ஒன்று. உடல் நலம் குன்றியவர்களும் பயமின்றி அவலை உணவாக எடுத்துக்கொள்ளச் சிறந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், தனது நண்பன் குசேலன் மூலமாக அவலை பிரதானப்படுத்தியதன் மூலம் அவலின் முக்கியத்துவத்தை அறியலாம். ஏனெனில், மலிவு விலையில் எண்ணற்ற சத்துகளுடன் வயிற்றையும் நிறைப்பதில் அவலுக்கு நிகர் வேறில்லை. அப்படி என்ன இருக்கிறது அவலில் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

அரிசியின் நிறம் மற்றும் தன்மைக்கேற்ப வெள்ளை மற்றும் சிவப்பு  நிறத்தில்  அவல் தயாரிக்கப்படுகிறது. வெள்ளை அவலில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களும், சிவப்பு அவலில் வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்றவற்றுடன் நார்ச்சத்தும்  நிறைந்துள்ளன. இதில் சிவப்பு அவல் பட்டை தீட்டப்படாத சிவப்பு அரிசியில் தயாரிக்கப்படுவதால் மிகவும் சத்து நிறைந்ததாக தற்போது அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளில் அவலும் ஒன்று. கார்போஹைட்ரேட்டுகளின் நல்ல மூலமான இதில் இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்ததுள்ளது. ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் உடல் நலனைக் காக்கும் முக்கியமான வைட்டமின்கள் கொண்டுள்ளது. பசையம் இல்லாததால் இதை க்ளூடன் அலர்ஜி உள்ளவர்களும் எடுக்க ஏற்றது.

இதையும் படியுங்கள்:
மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் மட்டுமே செயல்படும் சுவாமி ஐயப்பன் தபால் அலுவலகம்!
Aval food

உடலின் சூட்டைத் தணித்து மூளைச் செல்கள் புத்துணர்ச்சி பெற அவல் பெரிதும் உதவும். இதய ஆரோக்கியம், உடல் வலு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு உகந்த அவல் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைத்து இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதால் இரத்த சோகையைப் போக்கும். வளரிளம் பெண்களுக்கும் இது அற்புதமான உணவு. மேலும், ஏராளமான மருத்துவ நலன்களைத் தருகிறது அவல்.

இப்படிப் பல நன்மைகள் இருந்தாலும், அவல் எடைக் குறைப்புக்கு ஏற்றது என்ற தவறான கருத்தும் உதவுகிறது. அவல்  எடைக்குறைப்புக்கு நிச்சயம் உதவாது  என்கின்றது சில மருத்துவக் குறிப்புகள். காரணம் அதிலுள்ள அதிக கார்போஹைட்ரேட். 100 கிராம் சாதாரண அவலில் 77 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை கார்போஹைட்ரேட் மட்டும்தான் உள்ளது.

சிவப்பு அவல் அல்லது சிறுதானிய அவல்களில் காய்கறிகள் சேர்த்தும் புரதச்சத்துக்குத் தேவையான வேர்க்கடலையை வறுத்து முழுதாகவோ, பொடித்தோ அதில் சேர்த்து உண்ணும்போது உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். மற்றபடி அவலால் எடை குறையும் வாய்ப்பு குறைவே. மேலும், கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்களும் அவலை மிதமாக எடுப்பதே நல்லது என்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
மனதில் நிற்கும் அக்கால தொலைந்துபோன சிறுவர் விளையாட்டுக்கள்!
Aval food

அவலை புரதச்சத்து நிறைந்ததாக மேம்படுத்தி வளரும் குழந்தைகளுக்குத் தர அவலை வறுத்து வேர்க்கடலை மற்றும் முளைகட்டிய பருப்பு வகைகளைச் சேர்க்கலாம். பாதாம், முந்திரி, பேரீச்சம் பழம் சேர்த்தும் பால் அல்லது தண்ணீரில் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி, தேங்காய், ஏலக்காய் சேர்த்தும் சாப்பிடுவது நல்லது. சத்துள்ள எந்த உணவையும் மிதமாக எடுத்துக்கொண்டால் உடல் நலம் பெறலாம். அதில் அவலும் அடக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com