18 முதல் 28 வயதினரை குறிவைக்கும் முதுகு வலி! - தப்பிப்பது எப்படி?

முதுகு வலி பற்றிய 3 பயங்கரமான கட்டுக்கதைகளும்... மறைக்கப்பட்ட உண்மைகளும்!
Back pain
Back pain
Updated on

முதுகு வலி என்பது வயதானவர்களுக்கு மட்டும் தான் வரும் என நினைத்துக் கொண்டு இருந்தோம். அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. உடலின் பின் பகுதியில் கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பின் கீழ் பகுதி வரை உள்ள முதுகெலும்பில் ஏற்படும் அசௌகரியம்தான் முதுகு வலி ஆகும்.

தசைநார் சுளுக்கு, முதுகெலும்பு கோளாறு, உள்ளுறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அறிகுறி இவைதான் முதுகு வலிக்கு காரணம். சர்வதேச அளவில் முதுகு வலி உள்ளவர்களில் 15 சதவீதம் பேர் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, 18 முதல் 28 வயதினருக்கு அதிக அளவில் முதுகு வலி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. தினசரி பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். 76% முதுகெலும்பில் ஏற்படும் பிரச்னைகள் உடல்நலத்தை மோசமானதாகி உயிரிழப்புகளை ஏற்படுத்தும் 10 காரணிகளில் ஒன்றாக உள்ளது.

அதே நேரத்தில் முதுகு வலி தொடர்பான கட்டுக்கதைகளும் போலியான நம்பிக்கைகளும் நம்மிடையே சகஜமாக உலாவி வருகின்றன.

இனி கட்டுக் கதைகள் பற்றியும் அதன் அர்த்தம் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

1. கட்டுக்கதை ஒன்று:

படுக்கையில் ஓய்வு எடுப்பது முதுகு வலிக்கு சிறந்த சிகிச்சை.

உண்மையான காரணம்:

நீண்ட நேரம் ஓய்வு தசைகளை பலவீனப்படுத்தும். மூட்டுகளை விறைபாக்கும். வலியை நீட்டித்து குணமடைவதை தாமதப்படுத்தும். மென்மையான மெதுவான செயல்பாடுகள் தான் முதுகு வலியில் இருந்து விடுபட உதவும்.

இதையும் படியுங்கள்:
திரும்பும்போதும், எழுந்திருக்கும் போதும் அறையே 'கிர்'ரென்று சுற்றுகிறதா? பிரச்னை தலையில் இல்லை; காதில்!
Back pain

2. கட்டுக்கதை இரண்டு

அதிக எடை தூக்குவது முதுகு வலியை ஏற்படுத்தும்.

உண்மை காரணம்:

அதிக எடையை தூக்குவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுவது இல்லை. ஆனால், முறையற்ற முறையில் தூக்குவது முதுகு வலியை உண்டாக்கலாம்.

3. கட்டுக்கதை மூன்று

உடற்பயிற்சி முதுகு வலியை மோசமாக்குகிறது.

உண்மை காரணம்:

சரியான உடற்பயிற்சி உண்மையில் முதுகு தசைகளை வலுப்படுத்தும்

முதுகு வலியை தவிர்ப்பது எப்படி?

நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். 45 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நிற்பது, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தசை இறுக்கத்தை போக்க ஸ்ட்ரெட்சிங் செய்யலாம்.

புரதம் நிறைந்த ஊட்டச்சத்து மிகுந்த சமச்சீர் உணவு, நீர் சத்து குறையாமல் பாதுகாப்பது.

கம்ப்யூட்டர் முன் அமரும்போது நிமிர்ந்து உட்கார்ந்து கண் மட்டத்திற்கு திரை இருக்க வேண்டும்.

நான்கு வாரங்கள் தொடர்ச்சியாக வலி இருப்பது, வலி பரவுவது, சில நேரங்களில் உணர்ச்சி இல்லாமல் போவது, நடப்பது நிற்பதில் சிரமம், முதுகு வலியுடன் கூடிய குடல், சிறுநீர் பையில் தொந்தரவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com