Kuthiraivali
Kuthiraivali

கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்துக் கொண்ட சிறுதானியம் எது தெரியுமா?

Published on

சிறுதானிய அரிசி வகைகளில் மிகவும் முக்கியமானது தான் குதிரைவாலி அரிசியாகும். இதை ‘புல்லுச்சாமை’ என்றும் அழைப்பார்கள். குதிரைவாலி பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும், இதில் உள்ள சத்துக்கள் ஏராளம். அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

குதிரைவாலியில் பாஸ்பரஸ், கேல்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம், கார்போஹைடரேட், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

1. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.

குதிரைவாலியில் கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. இதை எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக கட்டுப்படுத்தும். மற்ற சிறுதானியத்தை விடவும் அதிகப்படியான நார்ச்சத்து இந்த குதிரைவாலியில் இருக்கிறது. எனவே, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கோதுமையைக் காட்டிலும் இதை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

2. மாரடைப்பு வராமல் தடுக்கும்.

மாரடைப்பு  வருவதற்கு முக்கியமான காரணம், கொழுப்புகள் சென்று ரத்தக் குழாயில் அடைப்பதேயாகும். குதிரைவாலியில் Soluble and insoluble Fiber என்று இரண்டு வகையான நார்ச்சத்து உள்ளது. இதில் உள்ள Soluble fiber ரத்தத்தில் இருக்கும் LDL என்னும் கெட்டக்கொழுப்பை குறைக்கும். இதனால் மாரடைப்பு வராமல் இதயத்தை பாதுகாக்கிறது.

3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாக இருக்க Zinc மற்றும் Iron சத்துக்கள் மிகவும் முக்கியம். இவை இரண்டுமே அதிக அளவில் குதிரைவாலியில் இருக்கிறது. அடிக்கடி ஜலதோஷம், சளி போன்ற ஏற்படும் போது குதிரைவாலியை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

4. ஒவ்வாமையைத் தடுக்கும்.

சிலருக்கு Gluten உணவுகள் சாப்பிடுவது ஒவ்வாமையை ஏற்படுத்தும். Gluten அடங்கிய கோதுமை, பார்லி, பிரட், பிஸ்கட் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். இதுப்போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது இந்த குதிரைவாலி அரிசி. எனவே, Gluten intolerance பிரச்னை இருப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசியை சாப்பிட்டு வரலாம்.

5. ரத்தச்சோகையை தடுக்கும்.

இரத்தத்தில் இரும்புச்சத்து குறைப்பாடு இருப்பது தான் ரத்தச்சோகை வருவதற்கான முக்கியமான காரணமாகும். 100 கிராம் குதிரைவாலியில் 18.6 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இது ரத்தத்தில் புதிய சிகப்பணுக்களை அதிகரித்து ரத்தச்சோகை வராமல் தடுக்கும்.

இனி உணவில் சிறுதானிய அரிசியான குதிரைவாலியை அதிகமாக சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

இதையும் படியுங்கள்:
Kefir தயிர் என்றால் என்ன?
Kuthiraivali
logo
Kalki Online
kalkionline.com