குளியல் - தெரிந்துகொள்ள வேண்டிய சில உண்மைகள்!

ஜூன் 14, உலக குளியல் தினம்
குளியல்
bath

நாள் முழுவதும் புத்துணர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது அன்றாட குளியல். தினமும் குளிப்பதால் உடல் மட்டும் சுத்தமடைவதில்லை, இரத்த ஓட்டம் சீராகிறது. நமது உடல் சருமத்தின் மீது எண்ணற்ற வியர்வை துவாரங்கள் உள்ளன. இவை தூசுகளால் அடைபடுவதால் உடலின் கழிவுகளை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் நுரையீரலின் பணியும் தடைபடும். அதனால் ஆரோக்கிய கேடு ஏற்படும். இவற்றை குளிப்பதால் சரி செய்ய முடியும் என்பதால் தினமும் குளியல் அவசியம். அதனால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க தினமும் குளிப்பது அவசியம். குளிர்ந்த நீரில் குளிப்பது சருமத்தை இருக்கமாக்குவதால் முகத்தில் ஏற்படும் வியர்வை மற்றும் திறந்த சரும துளைகளை குறைக்க உதவுகிறது. மேலும், முகப்பரு, கட்டிகள் நீங்கி அழுக்குகள் சேராமல், பாக்டீரியா தொற்றும் பரவாமல் இருக்க உதவுகின்றன. மேலும், தினமும் தலைக்கு குளித்தால் முடியும் வலுவடையும்.

தினமும் குளிப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மேலும், உடலில் ஏற்படும் தசை மற்றும் மூட்டு வலியை குறைக்கிறது. தினமும் குளிப்பது உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதோடு, மன அழுத்தத்தையும் குறைத்து மனதிற்கு அமைதியைத் தருகிறது. வியர்வை மூலம் வெளிவந்த உடல் கழிவுகளை காலை குளியல் எளிதில் வெளியேற்றும்.

தினசரி குளிப்பது இதயத்தின் செயல்முறைகளை மேம்படுத்தி இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. இதனால் ஆக்ஸிஜனை உறிஞ்சும் திறன் அதிகமாக்கி சுவாச மண்டலத்தை மேம்படுத்துகிறது.

காய்ச்சல் இருந்தால் குளிக்கலாமா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க. உண்மையில், காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை உயர்கிறது. உடல் வெப்பநிலையை குறைக்க குளிப்பது அவசியம். தேவைப்பட்டால் தலைக்கு குளிக்கவும் செய்யலாம்.

பொதுவாகவே காய்ச்சல் இருக்கும் நேரத்தில் ஈரத்துணியால் உடல் ழுழுவதையும் துடைப்பார்கள் இதன் நோக்கம் உடலின் வெப்பநிலையை குறைக்க வேண்டும் என்பதுதான். இது சரி எனும் பட்சத்தில் குளிப்பதும் எந்த வகையிலும் பாதகத்தை ஏற்படுத்தாது.

காய்சல் நேரத்தில் குளிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காது. இருப்பினும், வெதுவெதுப்பான அல்லது சாதாரண தண்ணீரை பயன்படுத்துவது சிறந்தது. காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற மருந்து சாப்பிட வேண்டியதும் அவசியமாகின்றது. குளிப்பதனால் நோய் கிருமிகள் உடலில் இருந்து வெளியேறுகின்றது. இதனால் காய்ச்சலின்போது குளிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் துணைபுரியும்.

காலையில் குளிக்கும்போது உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைத்து மன அழுத்தம் குறைகிறது. உடலில் புதிய வெள்ளை அணுக்கள் உருவாக்க தூண்டப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. காலை குளியல் சருமத்திலுள்ள எண்ணெய் பசையின் இயற்கை தன்மையை சமன் செய்கிறது.

குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடல் எடை குறையும் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது என்கிறார்கள் ஆய்வில். குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பது தூக்கம், எரிச்சல், அசதி இவற்றை நீக்குகிறது. வியர்வை, அரிப்பு, தாகம் இவற்றை போக்குகிறது. சோம்பலை போக்குகிறது. பசியை தூண்டும் என்கிறது ஆயுர்வேதம். காலையில் குளிர்ந்த நீர் உடலில் படும்போது ஆண்களின் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதையும் படியுங்கள்:
சகல நலன்களையும் பெற்றுத்தரும் ரிஷப சங்கராந்தி!
குளியல்

காலை வெந்நீர் குளியல் சளி, இருமல் பாதிப்பை குறைக்கிறது, தசை வலியை குறைக்கிறது. பகலில் அதிக நேரம் ஏசியில் இருப்பவர்கள் இளம் வெந்நீரில் குளிப்பது நல்லது. மாதவிடாய் காலத்தில் வெந்நீரில் குளிப்பது வலியை சற்று குறைக்கிறது, நரம்புகளின் அழற்சியை குறைக்கும். சருமத்தில் படிந்துள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகளை போக்க வெந்நீர் குளியல் சிறந்தது.

நாம் குளிக்கும்போது எடுத்தவுடன் தண்ணீரை தலைக்கு ஊற்றிக் கொள்ளக்கூடாது. முதலில் பாதத்தில் ஊற்றி பிறகு முழங்கால், அடுத்து இடுப்பு, மார்பு என படிப்படியாக உடலில் நீரை விட்டுக் கொண்டு இறுதியில் தலையில் நீரை விட்டுக் கொள்ள வேண்டும். இதனால் நமது உடலில் உள்ள வெப்பம் சீராக வெளியேறும். அதேபோல் குளித்து முடிந்ததும் துடைத்து கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக் கூடாது. முதலில் பின்பக்க முதுகைத்தான் துவட்ட வேண்டும்.

வருடத்திற்கு ஒரு முறை கடல் நீரில் குளிப்பது நல்லது, முடியாதவர்கள் வாரம் ஒருமுறை குளிக்கும் நீரில் உப்பைப் போட்டு தலைக்கு குளிக்க வேண்டும். தினமும் குளிப்பது ஆரோக்கியமானதுதான். ஒரு நாளைக்கு ஒரு முறை குளிப்பதே போதுமானது. ஆனால், அடிக்கடி குளிப்பது சருமத்திலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களையும் அழித்து விடலாம். அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகிறது என்கிறார்கள் உத்தாத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தினமும் குளிப்பவர்கள் ஒரு நாள் குளிக்காமல் போனால் அதற்காக வருத்தப்படாதீர்கள். அதுவும் நல்லதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com