நெட்டையா இருக்கணுமா? குட்டையா இருக்கணுமா? ஆய்வு கூறும் செய்தி என்ன?

height and short
height and short
Published on

உயரம் நம் ஆரோக்கியத்தோடு தொடர்புக் கொண்டது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் உயரம், நம் ஆரோக்கியத்திற்கு முக்கியம். சிலர் அதிக உயரமாக இருப்பார்கள். சிலர் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள். சமீபத்தில் கூட, உலகத்தில் அதிக உயரமான பெண்ணும், அதிக குள்ளமான பெண்ணும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாக இருந்தது.

உயரம் குறைவாக இருந்தால் நல்லதா? இல்லை அதிகமாக இருந்தால் நல்லதா? என்ற கேள்வி உங்களுக்கு என்றாவது தோன்றியுள்ளதா?

உயரத்தை பற்றி பேசினாலே, பள்ளிபருவங்கள் தான் நினைவுக்கு வருகிறது. உயரத்தை பொறுத்துதான் மாணவர்கள் வரிசையில் செல்வார்கள். மற்ற மாணவர்களை விட குட்டையாக இருந்தால் வரிசையில் முதல் நபராகவும், உயரமாக இருந்தால், இறுதி நபராகவும் நிற்க வேண்டிவரும். ஆனால் முதல் மற்றும் கடைசி நபராக நின்றால், எவ்வளவு சிக்கல் வரும் என்பது இதில் நீங்களும் ஒருவராக இருந்த காலத்தை நினைவுப்படுத்தினால் நினைவு வரும்.

இதையும் படியுங்கள்:
நீங்க பயணத்தை வெறுப்பவரா? ரொம்ப மிஸ் பண்ணறீங்களே...
height and short

ஆமாங்க! முதல் நபராக இருந்தால், எல்லா நேரங்களிலும் மற்ற மாணவர்களுக்கு ட்ரையலாக தெரிவோம். இதே கடைசி நபராக இருந்தால், அனைத்திற்கும் தாமதம் ஆகும். சரிதானே? உங்கள் பள்ளிப்பருவத்தில் நீங்கள் முதல் நபரா? அல்லது கடைசி நபரா? என்பதை மறக்காம கமென்ட்ல சொல்லுங்க.. அதற்குமுன் ஆய்வு கூறும், ஆரோக்கியத்தில் உயரத்தின் பங்கு என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நாம் குள்ளமாகவோ அல்லது உயரமாகவோ இருப்பது பெரிய பாதிப்புகளை உடல் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தாது என்றாலும், சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குள்ளமானவர்கள் பற்றி ஆய்வு கூறும் தகவல்:

குள்ளமாக இருப்பதற்கு, பரம்பரை மரபணு, குழந்தை பருவத்தில் ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவை காரணங்களாக இருக்கலாம். 

ஆனால், வெளிநாடுகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், குள்ளமாக இருக்கும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் போன்ற தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், ஆண்களில் உயரம் குறைவாக உள்ளவர்களுக்கு 'புரோஸ்டேட்' என்ற புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
நீங்கள் டைரி எழுதுபவரா? டிஜிட்டல் டைரி எழுதுபவரா?
height and short

மேலும்,500க்கும் மேற்பட்ட நபர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குள்ளமானவர்களுக்கு அல்சைமர் போன்ற நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கு இதில் மாற்றம் இருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

அது மட்டுமல்லாமல், உயரமானவர்களை விட குறைந்த உயரத்தை பெற்ற பெண்கள் மிக எளிதாக கர்ப்பம் தரிக்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால்,

5 அடிக்கும் குறைவாக உள்ளவர்கள் 'கரோனரி' என்ற இதய நோய் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம் என தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், 22,000 மேற்பட்ட ஆண்களை வைத்து செய்யப்பட்ட சோதனையில் உயரம் குறைவாக உள்ள ஆண்கள் முடி உதிர் பிரச்சனையை அதிகமாக எதிர்கொள்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

உயரமானவர்கள் பற்றி ஆய்வு கூறும் தகவல்:

தற்போது பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பரம்பரை பாதிப்பு, ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம் போன்றவை காரணமாக இருந்தாலும், உயரம் அதிகமாக உள்ளவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படலாம் என ஆய்வு கூறுகிறது.

ஆக, உயரமானவர்களை விட குள்ளமானவர்கள் நீண்ட காலம் வாழ்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆனால் இது நிலையற்றது என்றும் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே ஆரோக்கியமான முறையை மேற்கொண்டால், இது போன்ற பிரச்னைகளை பற்றி சிந்திக்க தேவையில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com