வீகன் டயட் எடுத்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்!

நவம்பர் 1, உலக வீகன் தினம்
World Vegan Day
World Vegan Day
Published on

லகில் சைவ சித்தாந்தம் குறைந்தது 2000 ஆண்டுகளாக இருந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க தத்துவ ஞானியும் கணிதவியலாளருமான பித்தாகரஸ் அனைத்து உயிரினங்களையும் கருணை மற்றும் அக்கறையுடன் நடத்துவதை ஊக்குவிப்பதை தனது கொள்கையாக வைத்திருந்தார். நமது நாட்டில் வள்ளலார் ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பயிர்களுக்குக் கூட கருணை காட்டினார். இந்தப் பதிவில் ‘வீகன் டயட்’ எனப்படும் சைவ உணவை உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிப் பார்ப்போம்.

‘வீகன் டயட்’ என்பது அனைத்து விலங்கு பொருட்களையும் தவிர்த்து தாவர அடிப்படையில் ஆன உணவுகளை பின்பற்றும் முறையாகும். வீகன் டயட்டை பின்பற்றுபவர்கள் மீன், இறைச்சி, பால் பொருட்கள், முட்டை போன்ற விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட உணவுகளை உட்கொள்ள மாட்டார்கள். முழுக்க முழுக்க தாவரங்களிலிருந்து பெறப்பட்ட, குறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் மட்டுமே உண்பார்கள்.

வீகன் டயட்டின் முக்கிய அம்சங்கள்:

பழங்கள் மற்றும் காய்கறிகள்: பல்வேறு வகையான புதிய பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்ளுதல் மற்றும் உறைந்த அல்லது உலர்ந்த பழங்களையும் உட்கொள்ளுதல். இவற்றில் அத்தியாவசியமான வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன

தானியங்கள்: முழு தானியங்களான பழுப்பு அரிசி, குயினோவா, ஓட்ஸ், பார்லி மற்றும் முழு கோதுமை பொருட்கள் ஆகியவை வீகன் டயட்டின் பிரதானமான உணவுகள்..

பருப்பு வகைகள்: பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை. பட்டாணி போன்றவை புரதம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் முக்கிய ஆதாரங்கள் ஆகும்.

கொட்டைகள் மற்றும் விதைகள்: பாதாம், முந்திரி, ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகள் புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

தாவர அடிப்படையில் ஆன பால் பொருள்கள்: வீகன் டயட்டை பின்பற்றுபவர்கள் தாவரங்கள் மற்றும் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்ட பால் பொருட்களை உட்கொள்வார்கள். பாதாம் பால், சோயா பால், தேங்காய் பால் போன்றவற்றை எடுத்துக்கொள்வார்கள்.

இறைச்சி மாற்றுகள்: இறைச்சி வகைகளுக்கு பதிலாக டோஃபு, டெம்பே போன்ற தாவர அடிப்படையிலான இறைச்சி வகைகளை உண்பார்கள். இவை புரதச்சத்தை அள்ளி வழங்குகின்றன.

மூலிகை மற்றும் மசாலா பொருட்கள்: இவை விலங்குகளிலிருந்து பெறப்பட்ட பொருட்களை விடவும் உணவில் சுவையையும் சத்துக்களையும் சேர்க்கின்றன.

ஆரோக்கிய நன்மைகள்:

1. மேம்படுத்தப்பட்ட இதய ஆரோக்கியம்: சைவ உணவில் பெரும்பாலும் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும், இது சிறந்த இதய ஆரோக்கியம், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

2. எடை மேலாண்மை: குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டதாக இருப்பதால், சைவ உணவில் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது எளிது.

இதையும் படியுங்கள்:
காது குத்துவதில் உள்ள அறிவியல் காரணங்கள் தெரியுமா?
World Vegan Day

3. நாள்பட்ட நோய்களின் ஆபத்து குறைவு: சைவ உணவு உண்பவர்களுக்கு வகை 2 நீரிழிவு, சில புற்றுநோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயம் குறைவாக இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4. சிறந்த செரிமான ஆரோக்கியம்: ஆரோக்கியமான செரிமானம், வழக்கமான குடல் இயக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஆதரிக்கிறது.

5. மேம்படுத்தப்பட்ட இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: ஒரு சைவ உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகள் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவும்.

6. ஆரோக்கியமான சருமம்: பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கும். இது சருமப் பழுது மற்றும் நீரேற்றத்திற்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com