தேங்காயை சமைத்து சாப்பிடுவது / பச்சையாக சாப்பிடுவது... எது நல்லது? யாருமே சொல்லாத ரகசியம்!
பச்சை தேங்காயை சமைக்கும் பொழுது கொழுப்பாக மாறுவதால் பச்சையாக சாப்பிடுவது (benefits of eating coconut raw) கூடுதல் நன்மைகளைத் தரும். நார்ச்சத்து மிகுந்த பச்சை தேங்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது அல்லது உணவில் சேர்ப்பது எண்ணிலடங்கா நன்மைகளைத் தரும்.
எலும்பு மற்றும் பல் ஆரோக்கியம்:
கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்குகின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கின்றது.
நீர்ச்சத்து மற்றும் தாதுக்கள்:
பச்சைத் தேங்காய் நீர்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்ற தாதுக்கள் நிறைந்தது. இது நீரிழப்பைத் தடுக்கிறது.
மூளை ஆரோக்கியம்:
அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவும் பீனாலிக் சேர்மங்கள் உள்ளன.
ரத்த சர்க்கரை கட்டுப்பாடு:
குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியம்:
இதில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் சருமத்திற்கும், முடிக்கும் ஊட்டமளித்து பளபளப்பை அதிகரிக்கிறது. அத்துடன் முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களையும் வழங்குகிறது.
இதய ஆரோக்கியம்:
நல்ல கொழுப்பான HDL அளவை அதிகரித்து இதயத்திற்கு நன்மை செய்கிறது. ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து இருப்பதன் காரணமாக, ஒட்டுமொத்த கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
செரிமான ஆரோக்கியம்:
நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உணவு செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கலை தடுக்கிறது. மேலும் செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
பச்சையாக தேங்காயை சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆயுர்வேதத்தில் தேங்காய் மூன்று தோஷங்களை (வாதம், பித்தம், கபம்) சமநிலைப்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது.
தேங்காய் சமையல் மற்றும் அழகு சாதன பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.
தேங்காயில் இயற்கையாகவே ஆன்டிபயாட்டிக் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேங்காயில் 60 சதவிகிதம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை பச்சையாக உட்கொள்ளும் பொழுது எடை இழப்புக்கு உதவுகிறது. ஏனெனில் இது உடல் கொழுப்பை விரைவாக எரிக்கிறது. பசியை அடக்குகிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தேங்காய் நீரில் (இளநீர்) லாரிக் அமிலம் உள்ளது. இது தாய்ப்பாலுக்கு சமமாக கருதப்படுகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீட்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
தேங்காய்களில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாகவும் உள்ளன. இது ரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும். தேங்காய் சட்னியில் ஆரம்பித்து பேக்கரி ஐட்டங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது.
வெறும் வயிற்றில் பச்சை தேங்காய் அல்லது இளநீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி சிறுநீரக ஆரோக்கியத்தை காக்கும்.
ஸ்மூத்திகள், சூப்கள் முதல் இனிப்பு வகைகள் வரை பல்வேறு வகையான சமையல் குறிப்புகளில் தேங்காய்ப் பால் சேர்த்து செய்வது ஊட்டச்சத்தை அதிகரிப்பதுடன், சுவையையும் கூட்டுகிறது.

