நடந்தால் நன்மை – உட்கார்ந்தால்…?

03-04-2024 - இன்று தேசிய நடை தினம்!
Walking...
Walking...pixabay.com
Published on

ன்று ஏப்ரல் மாதத்தின் முதல் புதன் கிழமை அல்லவா...

இண்றைய தினம் நம் நாட்டின் “தேசிய நடை தினமாக”  அனுசரிக்கப்படுகிறது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

உடலை   ஃபிட்டாக, ஆரோக்கியமாக வைப்பதற்கான மிக எளிய பயிற்சி நடைதான்..

முதலில் அமெரிக்காவில் தான் நடைப் பயிற்சி தினம் ஆரம்பமானது. அதிகரித்து வரும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும், உடல் செயல்பாடுகளை (physical activity) அதிகரிக்கவும், American Heart Association என்ற அமைப்பு அந்த நாட்டுக்காக ஏற்படுத்தியது. இன்று பல நாடுகள் பின் பற்றுகின்றன.

நடக்கும்போது, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நம் உடலுக்கும் மனதுக்கும் நன்மை தருகிறது. செலவோ, சாதனங்களோ இல்லாத, யாரும் எளிதில் செய்யக்கூடிய நடைப் பயிற்சியினால்  என்னென்ன நன்மைகள் பார்ப்போமா?

இதய நோய்கள், சர்க்கரை, உடல் பருமன் போன்றவை வராமல் காப்பதில் நடைப் பயிற்சிக்கு முதலிடம் எனலாம்.

தசைகளை வலுப் பெற வைக்கிறது. இதயத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நம் கார்டியோ வாஸ்குலர் (cardiovascular ) நலம் பாதுகாப்புப் பெறுகிறது. எலும்புகள், தசைகள், நரம்பு மண்டலம் இவை ஒருங்கிணைக்கப் படுகிறது. நடக்கும் போது மூளையில் சுரக்கும் என்ட்ரோஃபின் (endorphins) என்னும் வேதிப்பொருள், நமக்கு உற்சாகமான மனநிலையைத் தருகிறது

வலி நிவாரணியாக, (Pain killer) நல்ல மூடில் (Mood Elevator) நம்மை வைக்கும் காரணியாகவும் செயல்படுகிறது.

நமது மூளைத் திறன் மேம் பட, கிரியேடிவாக செயல்பட, மூளையில் இருக்கும் ஒரு வித மின்சக்தியை நடைப் பயிற்சி அதிகரிக்கிறது என்றால் வியப்பாக இல்லை..?

நடக்கும்போது மூளை சிந்திப்பதால், புதிய யோசனைகளும் உருவாவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதயம், மூளைக்கு அதிக ரத்தமும் ஆக்சிஜனும் பம்ப் செய்து அனுப்புகிறது.

இதனால்தான் நடைப் பயிற்சி முடிந்ததும் அதிக சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வேலைகளில் ஈடுபட முடிகிறது. நடப்பதால் உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது.

இன்னொரு மகத்தான பயன், நடைப் பயிற்சியின் போது, சுற்றிலும் உள்ள இயற்கையோடு நமக்கு ஒரு நெருக்கம் ஏற்படுகிறது. மரங்கள், காற்று, வானம், பறவைகள் அவற்றின் உற்சாகக் குரல்கள், பொது இடங்களில் நடக்கும் போது எதிர்ப்படும் மனிதர்களின் அறிமுகம், நட்பு…

நம்மை நாமே சரிபார்த்துக் கொள்ள முடியும்.

நாம் நலமாக திடமாக, பேலன்ஸ்டாக இருக்கிறோமா, எந்த உறுப்புக்களில் பிரச்னை என்பதையும் நடைப் பயிற்சியின் போது நாமே கண்காணிக்க முடியும்.

சோர்வடைகிறோமா, எதனால் என்பதையும் கவனித்து உடனே தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் நடை பயிற்சி உதவுகிறது.

இத்தனை நன்மைகள் நடந்தால் கிடைக்கிறது. ஆனால் உட்கார்ந்து கொண்டே இருந்தால் வரும் தீமைகள் என்ன தெரியுமா?

நாள் முழுவதும் உட்கார்ந்தால் ஒரே நாளில் உடலின் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும்.

மூளைக்கு குறைந்த அளவே ரத்தமும் ஆக்ஸிஜனும் செல்வதால், ஒரு மந்த நிலை ஏற்பட்டு மூளையில் செயல் திறன் குறையும்.

நீண்ட நேரம் உட்காரும்போது...
நீண்ட நேரம் உட்காரும்போது...pixabay.com

இரண்டு மணி நேரமாக உட்கார்ந்து கொண்டே இருக்கிறீர்களா? அப்போ உங்க உடலில் உள்ள நல்ல கொழுப்பு (Good Cholestral )  20 சதவீதம்  வீணடிக்கப்படும்.

நாள் முழுக்க உட்கார்ந்து கொண்டு இருந்து விட்டு பின்னர் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் இரண்டும் சமமாகி விடாது. வாரத்தில் 23 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

இதையும் படியுங்கள்:
அழகான வளைந்த புருவங்களுக்கு ‘த்ரெட்டிங்’தான் பெஸ்ட்!
Walking...

நீண்ட நேரம் உட்காரும்போது, நம் ரத்தக் குழாய்கள், குறிப்பாக வெய்ன் குழாய்களில் பளு அதிகரிப்பதால் இதயம் அதிகம் வேலை செய்து, மூளைக்கு ரத்தம் பம்ப் செய்ய நேரிடுகிறது.

கழுத்து, முதுகு வலி வரும் வாய்ப்பு உண்டு.

 உட்கார்ந்தபடியே பணி செய்ய வேண்டியிருப்பவர்கள், இதையெல்லாம் தவிர்க்க, அவ்வப்போது  எழுந்து நிற்பதும், கொஞ்ச தூரம் நடப்பதும் அவசியம்.

கழுத்து முதுகு வலி வராமல் இருக்க அடிக்கடி பாஸ்ச்சர் (Posture) மாற்றி உட்கார்ந்து கொள்ள வேண்டும். உடலின் நெகிழ்வுத்தனமை தான் உடல் ஆரோக்கியத்தின் முக்கியப் புள்ளி…

எங்கே, உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தவர்கள், எழுந்து நின்று நடக்கவும் தொடங்கிவிட்டீர்கள்தானே?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com