எந்த நேரத்தில் எந்த நட்ஸ் சாப்பிட வேண்டும்? தெரியாமல் சாப்பிட்டால் பலன் கிடைக்காது!

Nuts
Best Time to Eat Nuts
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on: 

நட்ஸ் (nuts) என்பது உடலுக்கு மிகவும் நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும். பாதாம், முந்திரி, வேர்க்கடலை, வால்நட் போன்றவை எல்லாம் நட்ஸ் வகைகளில் அடங்கும். இவற்றில் நல்ல கொழுப்பு (healthy fats), புரதம் (protein), நார்ச்சத்து (fiber), மற்றும் பல விதமான விட்டமின்கள் இருக்கின்றன.

நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளமாக உள்ளன.

*இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

*உடலுக்கு சக்தி கிடைக்கும்.

*நீண்ட நேரம் பசி வராமல் தடுக்கிறது.

*மூளை செயல்பாடு மேம்படும்.

ஆனால் அதிகமாக சாப்பிடக்கூடாது. தினமும் ஒரு சிறிய கைப்பிடி அளவு மட்டும் சாப்பிட்டால் போதும்.

நட்ஸ் என்பது சுவையானதும் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தைத் தரும் ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் ஆகும்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த நட்ஸ் வகைகளை சரியான நேரத்தில் உட்கொண்டால்தான் அதனுடைய முழு பலனையும் பெற முடியும். அதனால் நட்ஸ் வகைகளை எந்தெந்த நேரத்தில் சாப்பிடலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

பிஸ்தா:

பெரும்பாலும் பகல் நேரத்தில் இதை உட்கொள்ளலாம். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக, உடலுக்கு விரைவான ஆற்றல் திறன் கிடைக்கும்.

ஹேசல்நட்ஸ்:

இதில் உள்ள வைட்டமின் B6 மற்றும் ஃபோலேட் ஆகியவை நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவும். காலையில் வெறும் வயிற்றில் அல்லது காலை உணவுடன் இதை சாப்பிடுவது, நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்கும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
சுவையும் ஆரோக்கியமும் இணைந்த நட்ஸ் பர்ஃபி & மணமான தேங்காய் பர்ஃபி!
Nuts

முந்திரி:

மதிய நேரத்தில் ஸ்நாக்ஸ் போல இதை சாப்பிடலாம். இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் நல்ல கொழுப்புச்சத்து, உடலில் ஆற்றல் திறனை மேம்படுத்த உதவும். கொழுப்புச்சத்து அதிகம், புரதம் அதிகம் போன்ற காரணங்களால், இவை விரைவில் செரிமானம் ஆகாது. எனவே இரவில் இதை தவிர்ப்பது நல்லது.

பாதாம்:

காலை வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் வளர்சிதை மாற்றம் ஊக்குவிக்கப்படுவதுடன், ஆற்றல் அதிகரிப்பு, கவனம், நீண்ட நேர பசியை தாங்கும் திறன் வல்லது என பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

வால்நட்ஸ்:

மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை உட்கொள்வது, ஊட்டச்சத்து உட்கிரகிப்பு (Absorption) பெரிய அளவில் உதவும். இதில் உள்ள ஒமேகா-3 (Omega-3) மற்றும் மெலடோனின், உடலுக்கு ஆற்றல் திறனை கொடுப்பதுடன், இரவு நல்ல தூக்கம் கிடைக்கவும் உதவும்.

உலர் திராட்சை (Raisins):

உலர் திராட்சை என்பது திராட்சையை உலர்த்தி தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு ஸ்நாக்ஸ் ஆகும். இதில் இயற்கை சர்க்கரை, இரும்புச்சத்து (iron), நார்ச்சத்து (fiber) அதிகமாக உள்ளதால், இந்த உலர் திராட்சை ரத்தசோகை (anemia) குறைய உதவும். செரிமானம் நன்றாக நடக்கும். உடலுக்கு உடனடி சக்தி தரும்.

வேர்க்கடலை (Peanuts):

வேர்க்கடலை சுலபமாக கிடைக்கும் மலிவான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும். இதில் புரதம் (protein), நல்ல கொழுப்பு (healthy fats), மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

வேர்க்கடலையை சாப்பிடுவதால் உடல் வளர்ச்சிக்கு உதவும். இதய ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நேரம் பசி வராமல் காக்கும்.

இதையும் படியுங்கள்:
கொட்டைகளின் (Nuts) பால் மிக நல்லது! ஏன்?
Nuts

நாம் உண்ணும் பிற உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை நன்கு உட்கிரகிக்கவும் நட்ஸ் உதவும். நட்ஸ் உடலுக்கு மிகவும் நல்லதுதான் ஆனால் அளவாக சாப்பிட்டால் அதிக நன்மை கிடைக்கும். தினமும் சாப்பிடுவது நல்ல பழக்கம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com