எடை குறைக்கும் டயட்கள்: பலன்களைத் தாண்டி ஒளிந்திருக்கும் ஆபத்துகள்!

DIET
DIET
Published on

உடல் பருமன் என்பது தற்போது வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் கவலைப்படுத்தும் ஒரு விஷயமாகி வருகிறது. காரணம் நமது உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம். இருப்பினும் உடல் எடையை குறைப்பதற்கான டயட் எனப்படும் பல வித உணவு முறைகளும் வந்துள்ளன.

தகுதி வாய்ந்த உணவியல் நிபுணரால் (Dietician) உருவாக்கப்பட்ட இந்த டயட் முறைகளை கடைப்பிடிப்பதால் சிலருக்கு எடையில் மாற்றம் உண்டாகி எடை குறைந்துள்ளது. எனினும் இவற்றை கடைபிடித்த வேறு சிலருக்கு உடல் எடை குறைந்தாலும் உடல் நல பிரச்சினைகளில் வேறு சில பாதிப்புகள் உருவாகி உடனே அந்த டயட் முறையை கைவிட்டு விடுவதும் என கேள்வி பட்டுள்ளோம்.

உண்மையில் டயட்டுகளால் என்னென்ன பாதிப்புகள் வரும்?

இதோ உங்களுக்காக பிரபலமான சில டயட்டுகளும் அதனால் வரும் பாதிப்புகளும் பற்றிய சிறு விளக்கம் இங்கு.

1. குறைந்த கார்ப் உணவுமுறைகள் (Low-Carb Diets)

குறைந்த கார்ப் உணவு என்பது அரிசி, ரொட்டி, சர்க்கரை உள்ளிட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தும் ஒரு டயட் முறை. அதற்கு மாற்றாக முட்டை, இறைச்சி, காய்கறிஙள் போன்ற புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

எதிர்மறை விளைவுகள்

நீண்ட காலத்திற்கு பின்பற்றுவது கடினம் என்பதுடன் நார்ச்சத்து வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். இதனால் வாய் துர்நாற்றம், சோர்வு மற்றும் மலச்சிக்கலை ஏற்படும் வாய்ப்பு உண்டு.

2. குறைந்த கொழுப்பு உணவுகள் (Low-Fat Diets)

குறைந்த கொழுப்புள்ள உணவுமுறையான இது உட்கொள்ளும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பொதுவாக தினசரி கலோரிகளில் 30% அல்லது அதற்கும் குறைவாகப் பெறுவதை வலியுறுத்துவதால் எடை குறைப்பு மற்றும் இருதய ஆரோக்கிய நன்மைகளுக்காக பெரும்பாலும் இந்த டயட் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளுடன் எடையை சீராக பராமரிப்பது மிகவும் முக்கியம்.

எதிர்மறை விளைவுகள்

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உணவுகளை அதிகரிக்க வழிவகுக்கும். அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் குறைபாடுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் நீண்ட கால எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்காது என்கின்றனர்.

3. இடைப்பட்ட உண்ணாவிரதம் (Intermittent Fasting)

இடைப்பட்ட உண்ணாவிரதம் (IF) என்பது உணவு உண்ணும் நேரங்களுக்கும் விருப்பத்துடன் இருக்கும் உண்ணாவிரதத்திற்கும் (விரதங்கள்) இடையில் சுழற்சி முறையில் செயல்படும் ஒரு உணவு அணுகுமுறையாகும். இது ஒரு குறிப்பிட்ட உணவுமுறை அல்ல, மாறாக நமது உணவு நேரத்தை நிர்ணயிக்கும் ஒரு வழியான இதில் எடை மேலாண்மை, மேம்படுத்தப்பட்ட இன்சுலின் போன்ற நன்மைகளை வழங்கக்கூடும்.

எதிர்மறை விளைவுகள்

பசி, எரிச்சல் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். சில மருத்துவ பாதிப்பு உள்ளவர்களுக்கு (எ.கா. நீரிழிவு) சவாலாக இருக்கும். சரியாக திட்டமிடப்படாவிட்டால் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்

இதையும் படியுங்கள்:
ஸ்லிம் ஆக வேண்டுமா? எச்சரிக்கை! இந்த டயட் உங்களை மரணத்திற்கு இட்டுச் செல்லும்!
DIET

4. சைவ உணவுகள் (Vegan or Vegetarian Diets)

சைவ உணவு டயட் தாவர அடிப்படையிலானவை, ஆனால் சைவ உணவு என்பது மிகவும் கடுமையான ஒன்றாக கருதப்படுகிறது. சைவ உணவு உண்பவர்கள் இறைச்சி, கோழி மற்றும் கடல் உணவுகளுடன் பால், முட்டை மற்றும் தேன் உள்ளிட்ட அனைத்து விலங்கு பொருட்களையும் தவிர்க்கின்றனர்.

எதிர்மறை விளைவுகள்

தகுந்த நிபுணர் இன்றி சரியாக திட்டமிடப்படாவிட்டால் புரத குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி12, இரும்பு, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறையும் என்பதால் கவனமான திட்டமிடல் அவசியம்.

5. டீடாக்ஸ் உணவுகள் (Detox Diets)

டிடாக்ஸ் டயட்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட குறுகிய கால உணவுமுறை மாற்றம் ஆகும். இந்த டயட்களில் பொதுவாக உண்ணாவிரதம் இருக்கும் காலங்கள், அதைத் தொடர்ந்து பழங்கள், காய்கறிகள், பழச்சாறுகள் மற்றும் தண்ணீர், சில சமயங்களில் மூலிகைகள், தேநீர் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய நிச்சய உணவுமுறையை உள்ளடக்கியது.

இதையும் படியுங்கள்:
டயட்ல இருக்கீங்களா? இந்த ஒரு ரெட் ரைஸ் சாலட் போதும்! உடல் எடை குறைவது நிச்சயம்!
DIET

எதிர்மறை விளைவுகள்

இதனால் விளையும் நன்மைகளை உறுதிப்படுத்தும் அறிவியல் சான்றுகள் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மேலும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் பின்பற்றுவதில் கடினம் ஆகியவை குறிப்பிடத்தக்கது.

இங்கு பார்த்தது 5 முறைகள் மட்டுமே. இன்னும் க்ராஷ் டயட், ஃபேட் டயட், அதிக புரத உணவு போன்ற பலமுறைகள் உள்ளது. இதன் பின்விளைவுகளை அறிந்து அவரவர் உடலுக்கு தகுந்த டயட் பின்பற்றுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com