உடம்பில் அரிப்பு தொல்லையா? தற்காலிக நிவாரணம் பெற எளிய வழிகள்!

ஐஸ் ஒத்தடம், ஓட்ஸ் குளியல் மற்றும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி அரிப்பைக் கட்டுப்படுத்துவது எப்படி? மருத்துவ எச்சரிக்கைகள்.
Itching | சரும அரிப்பு
Itching | சரும அரிப்புIm,age Credit: ChatGPT
நடேஷ் கன்னா

நடேஷ் கன்னா (இயற்பெயர் சிவராம சுப்ரமணியன்), நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர்; ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். 57 ஆண்டுகளாக கல்கி, தீபம், குமுதம், விகடன், துக்ளக், தினமலர் உள்ளிட்ட இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் எழுதி வருகிறார்.

Updated on: 

உடம்பில் அரிப்பு ஏற்பட்டால் அதனை தற்காலிகமாக நிறுத்துவதற்கு குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம் நறுமணம் இல்லாத உடம்பில் அரிப்பு ஏற்பட்டால் சொரிய கூடாது. அது மேலும் காயம் அடைந்து தொற்று ஏற்பட வழிவகுக்கும்

நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிப்பு ஏற்பட்டவுடன் அந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.

குளித்து முடித்தவுடன் நறுமணம் இல்லாத மாய்ஸ்ரைஸ் கிரீம் பயன்படுத்தலாம். அரிப்பு உள்ளவர்கள் பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

ஓட்ஸ் குளியல் ஒவ்வாமை அரிப்பை குணப்படுத்தும். உங்கள் உடம்பில் அரிப்பு இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் சம்பந்தப்பட்ட டாக்டரை அணுக வேண்டும்

சிலருக்கு அரிப்பு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இருக்கும் சிலருக்கு உடம்பு முழுவதும் இருக்கும்.

ஒவ்வாமை மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக இந்த அரிப்பு ஏற்படுகிறது.

கண்ணுக்குத் தெரியாத சிறிய பூச்சிகளாலும் இந்த அரிப்பு ஏற்படலாம். சரும அலர்ஜி சருமம் சிவத்தல் புண்கள் கொப்புளங்கள் ஏற்படலாம்.

சிலருக்கு வாய்ப்புண் உடல் பிரச்சினைகளை உண்டு பண்ணலாம்.

சிலருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். வயது தொடர்பான மாற்றங்கள் காரணமாகவும் அரிப்புகள் வரலாம்.

Itching | சரும அரிப்பு
Itching | சரும அரிப்பு

ஒவ்வாமை பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மூலம் இந்த அரிப்பை கண்டறியலாம் அரிப்பு உள்ள இடங்களில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது தற்காலிக நிவாரணம் மட்டுமே.

வயதானவர்களுக்கு சருமம் மெல்லியதாகவும் வரண்டும் காணப்படுவதால் அவர்களுக்கு அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு சரும அலர்ஜி, சிறுநீரக நோய், ரத்த சோகை, தைராய்டு பிரச்சனை போன்றவற்றால் அரிப்பு வருகிறது. ஆறு வாரங்களுக்கு மேல் ஏற்படும் அரிப்புகள் நம் தூக்கத்தை கெடுத்து விடும். இதன் மூலம் மனசோர்வுக்கு வழி வகுக்கும்.

அரிப்பு உள்ளவர்கள் வாசனை இல்லாத சோப்பு, ஷாம்பு பயன்படுத்துவது நல்லது. மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் மூலமாகவும் அரிப்புகள் ஏற்படும்.

இரவு நேர அரிப்பு சர்க்காடியன் தாளங்களால் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எந்த கிரீம் தடவினாலும் குதிகால் வெடிப்பு குணமாகவில்லையா? இதைப் படியுங்கள்!
Itching | சரும அரிப்பு

இரவு நேரங்களில் சருமம் அதிக நீரை இழக்கிறது. இதனால் வறட்சி ஏற்பட்டு அரிப்பு ஏற்படுகிறது. இதற்கு மாய்ஸ்ரைஸ் கிரீம் பயன்படுத்தலாம்.

சரும அரிப்பு நீரிழிவு நோய்களின் அறிகுறி ஆகும். சிலருக்கு கை கால்களில் மட்டும் இருக்கும் சிலருக்கு உடம்பு முழுவதும் அரிப்பு இருக்கும்.

முட்டை, சோயா, வேர்க்கடலை, கோதுமை ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தும். தீவிரமான அரிப்பு நம் மகிழ்ச்சியையும் தூக்கத்தையும் கெடுத்து விடும். சிலருக்கு இதில் தொடர்ச்சியாகவும் ஏற்படுகிறது

இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு லட்சம் பேரில் 72 நபர்கள் தாக்கப்படுகிறார்கள்.

உடலில் அரிப்பு உள்ளவர்கள் 40 வயது முதல் 70 வயது வரை பாதிக்கப்படுகிறார்கள்

இவர்களில் 100 பேரில் 54 பேர் பெண்கள் ஆவார். தொடர்ந்து நீண்ட காலமாக ஆஸ்பிரின் மாத்திரை எடுப்பவர்களுக்கு அரிப்பு ஏற்படலாம்.

தலையில் அரிப்பு உள்ளவர்கள் ஆப்பிள் சீடர் வினிகர் பயன்படுத்தலாம். அரிப்பு உள்ளவர்கள் உடலில் கேலமைன் லோஷன் பயன்படுத்தலாம் வாய் மூலம் உட்கொள்ளும் ஒவ்வாமை மாத்திரைகள் மருந்துகளும் இந்த அரிப்பை தடுக்க உதவும்

மேலும் அரிப்பு தொடர்ந்து இருக்குமானால் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலச் சளி, காய்ச்சலா? வீட்டிலேயே இருக்கும் மூலிகைகளால் சரி செய்வது எப்படி?
Itching | சரும அரிப்பு

Reference: