

'எல்லாம் தெரியும்; எதையும் பின்பற்ற மாட்டோம்' என்ற மனநிலையில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களிடம் நீரிழிவு நோய் (Diabetes) பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களிடம் 150 நபர்களிடம் ஆராய்ச்சி செய்ததில் 65% தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், 45 சதவீதம் பேர் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றி வருவதாகவும், 75% பேர் நார்ச்சத்துள்ள உணவுகளை உண்டாலும் இவர்கள் யாரும் அதனை தொடர்ந்து கடைபிடிப்பது இல்லை என்பதும்தான்தெரியவந்துள்ளது.
இவர்கள் உணவு பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டுகிறார்கள். நேரமின்மை, பணி தொடர்பான மன அழுத்தம், சோர்வு இவற்றின் காரணமாக இவர்கள் இதனை முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை. இவர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதை தடுப்பதாக ஆய்வு கூறுகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, ஒழுங்கற்ற தூக்கமின்மை போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இளம் வயதிலேயே ஏற்படுகிறது.
நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு இவர்களுக்கு இல்லை என கூறலாம். சிறந்த உணவு, உடற்பயிற்சி, எட்டு மணி நேர தூக்கம் இவற்றை கடைப்பிடிக்க ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவ்வப்போது கிடைக்கும் ஐந்து நிமிட இடைவேளை கூட ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அலுவலக நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நிற்பது, நடப்பது, தண்ணீர் குடிப்பது இருந்த இடத்திலேயே சிறிய உடற்பயிற்சிகள் செய்வது என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்வது, சிறந்த உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்றவற்றை இடைவேளை நேரத்தில் செய்வது போன்றவற்றை ஐடி நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன் 10 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதை தவிர்த்து சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மதுபானங்களை தவிர்க்க வேண்டும்.
வேலை தொடங்குவதற்கு முன், சிறிது நேரம் ஸ்ட்ரெட்ச்சிங் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். நீண்ட நேரம் டிவி பார்ப்பதை விட வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், விளையாடுவது, யோகா பயிற்சி செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம்.
இரவு உணவு ஒன்பது மணிக்கு முன்பாக சாப்பிடுவது, போதிய அளவு தண்ணீர் குடிப்பது, குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது ஆகியவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும். ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
அதை அவர்களுக்கு நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் நன்கு படித்தவர்கள். இருந்தாலும், இந்த விஷயத்தில் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
மேற்கண்ட விவரங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)