சிறுநீர் கழிக்கத் திணறுகிறீர்களா? 50 வயதை தாண்டிய ஆண்களே கவனம்!

Frequent urination problem
Frequent urination problemhttps://knowleswellness.com
Published on

என் வயது 75 ஆகிறது. சமீப காலமாக எனக்கு வெளியில் போய் விட்டு வந்து வீட்டு கதவை திறப்பதற்குள், சிறுநீர் கழிக்க அவசரம். சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற திடீர் மற்றும் கடுமையான உணர்வு. ஏற்பட்டு உடனடியாக டாய்லெட் போகும் நிலை ஏற்பட்டது.

வெளியில் போகும் போது இல்லை நடுவில் இல்லை ஆனால் வீட்டு கதவை திறப்பதற்குள் ஏன் இந்த மாதிரி உணர்வு எனக்கு?

இப்படி பல முறை நடந்து விட்டதால் Oncology மருத்துவரை கன்சல்ட் செய்த போது அவர் விளக்கினார்:

மாதவிடாய் நின்ற பிறகு கூட சில உபாதைகள் அனுபவிக்கும் பெண்களைப் போலவே, ஆண்களும் 50 வயது மேல் உள்ளவர்கள் prostate தொடர்பான நோய்கள் மூலம் அவதிப்படுகிறார்கள்.

இது அவர்களுக்கு மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும் கவலையை உண்டு பண்ணுகிறது.

அதில் முக்கியமான நோய் BPH. Benign Prostatic Hyperplasia (BPH) என்பது ஆண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான நிலை.

புரோஸ்டேட் சுரப்பி: இது ஒரு அக்ரூட் பருப்பு (walnut) வடிவில், சுமார் 3 செ.மீ நீளமும், 4 செ.மீ அகலமும், 2 செ.மீ உயரமும் கொண்டது. இதன் எடை சுமார் 20 கிராம். இது சிறுநீர்ப்பையின் கழுத்து பகுதிக்கு கீழே, மலக்குடலின் (rectum) முன்புறம் அமைந்துள்ளது. இது விந்து திரவத்தை உற்பத்தி செய்கிறது.

ஒரு மனிதன் வயதாகும் போது, புரோஸ்டேட் சுரப்பி பெரிதாக வளரத் தொடங்குகிறது. இந்த வளர்ச்சி புற்றுநோய் அல்லாதது என்பதால், இதை 'பெனைன்' (benign) என்று அழைக்கிறோம்.

இது சில சமயங்களில் புரோஸ்டேட் சுரப்பியின் நடுவில் செல்லும் சிறுநீர்க்குழாயை (urethra) அழுத்தி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

பிபிஹெச் (BPH) நோயின் அறிகுறிகள்:

பிபிஹெச்-இன் அறிகுறிகள் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

இதையும் படியுங்கள்:
திருமணமானவர்களுக்கு டிமென்ஷியா நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்! அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு!
Frequent urination problem
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்: பகலில் அல்லது இரவில் (குறிப்பாக இரவில்) அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு.

  • வெளியே போய் விட்டு வந்தவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற திடீர் மற்றும் கடுமையான உணர்வு.

  • சிறுநீர் ஓட்டம் பலவீனமாக இருத்தல்: சிறுநீர் ஓட்டம் மெதுவாகவும், பலவீனமாகவும் இருத்தல்.

  • சிறுநீர் கழிக்கத் தொடங்குவதில் சிரமம்: சிறுநீர் கழிக்கத் தொடங்குவதற்கு சற்று நேரம் காத்திருக்க நேரிடுதல்.

  • சிறுநீர் ஓட்டம் தடைபடுதல்: சிறுநீர் ஓட்டம் தொடங்கி, இடையில் நின்று, மீண்டும் தொடங்குதல்.

  • சிறுநீர் கழித்த பின் சொட்டுச் சொட்டாக வெளியேறுதல்:

    சிறுநீர் கழித்த பிறகும் சில துளிகள் வெளியேறுதல்.

  • சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகவில்லை என்ற உணர்வு:

    முழுமையாக சிறுநீர் கழிக்க முடியாத நிலை (கடுமையான சிறுநீர் தேக்கம்)

சில சமயங்களில் திடீரென சிறுநீர் கழிக்கவே முடியாத நிலை ஏற்படும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அது ஒரு அவசர மருத்துவ நிலை, உடனடியாக சிகிச்சை தேவைப்படும்.

பிபிஹெச் (BPH) நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

பிபிஹெச் ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், இது ஆண்களின் வயது அதிகரிப்பு மற்றும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.

டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் அளவு வயதாகும்போது மாறுபடுவது ஒரு காரணமாக இருக்கலாம்.

பிபிஹெச்-இன் சிக்கல்கள்:

பிபிஹெச்-க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது சில சிக்கல்களுக்கு வழிவகுக்கும்:

  • சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (Urinary Tract Infections - UTIs)

  • சிறுநீர்ப்பைக் கற்கள்

  • சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் சேதம்

  • சிறுநீரில் இரத்தம் வருதல்.

பிபிஹெச்-இன் அறிகுறிகளின் தீவிரத்தைப் பொறுத்து, பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன:

மருந்துகள்: புரோஸ்டேட் சுரப்பியை சுருக்கவும், சிறுநீர் ஓட்டத்தை எளிதாக்கவும் உதவும் மருந்துகள்.

அறுவை சிகிச்சை: மருந்துகள் வேலை செய்யாதபோது, புரோஸ்டேட்டின் ஒரு பகுதியை அகற்ற அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.

முக்கிய குறிப்பு:

பிபிஹெச் அறிகுறிகள் புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகளைப் போலவே இருக்கலாம். எனவே, இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். மருத்துவர் உங்கள் அறிகுறிகளையும், உடல்நிலைகளையும் பரிசோதித்து, சரியான நோயறிதலை உறுதி செய்வார்.

என்னன்ன சோதனைகள் மருத்துவர் தொடங்குவார் என்று பார்ப்போம்:

டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனை (Digital Rectal Exam),

PSA ரத்தப் பரிசோதனை (Prostate-Specific Antigen test) போன்ற பரிசோதனைகள் மூலம் புரோஸ்டேட்டின் நிலையை கண்டறிய முடியும்.

புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் ஆண்களுக்கு மிகவும் முக்கியமானது.

இதையும் படியுங்கள்:
நின்று கொண்டே சாப்பிடுவது okva?
Frequent urination problem

50 வயதான வாசகர்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் அலட்சியம் வேண்டாம் . இந்த கட்டுரை ஒரு விழிப்புணர்வு நோக்கத்தற்காகவே.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com