கம்ப்யூட்டர் பார்த்தே கண், மூளை களைப்பா? இந்த 'சங்கு பூ' டீ குடிச்சு பாருங்க!

தொடர் கணினி வேலையால் ஏற்படும் மனச்சோர்வை நீக்கி, நினைவாற்றலை அதிகரிக்கும் சங்கு பூவின் மருத்துவ குணங்கள்.
Butterfly Pea Tea | சங்கு பூ டீ
Butterfly Pea Tea | சங்கு பூ டீ
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

நீல நிறத்தில் அசல் சங்கு போலவே தோற்றமளிக்கும் ஒரு பூ தான் சங்கு புஷ்பம். இதை ஆங்கிலத்தில் BUTTERFLY PEA என்று அழைக்கிறார்கள் இந்த பூவிற்கு இருக்கும் மருத்துவ சக்தியை கேட்டால் தலை சக்கரம் போல சுழலும். எனக்கு தெரிந்த ஒரு FRCS மருத்துவரே இந்த பூவுக்கு அப்படி ஒரு புகழ் மாலை சூட்டினார் என்றால் பாருங்கள். அப்படி என்னதான் இருக்கு இந்த புஷ்பத்தில் என்று பார்க்கலாம் வாருங்கள்.

இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளேவனாய்டுகள் ஒரு நபரின் நினைவாற்றல் திறன், கவனம், செறிவு, அமைதி, விழிப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நியூரோபிராக்டிவ் கூறுகள் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது மற்றும் மூளையில் இருந்து பதற்றத்தை நீக்குகிறது.

சங்கு புஷ்பம் அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வது டிவி பார்ப்பது போன்ற செயல்களால் ஏற்படும் கடும் மன சோர்வுக்கு ஒரு அரு மருந்து. உடல் சோர்வுக்கு டீ அருந்துகிறோம் மனசோர்வுக்கு சங்கு புஷ்ப டீ அருந்த வேண்டும்.

ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு ஸ்பூன் சங்கு புஷ்ப பொடியை சேர்த்து கொதிக்க செய்து குடிக்கலாம் அல்லது உலர்ந்த சங்கு புஷ்பத்தை போட்டு டிகாக்ஷன் செய்து குடிக்கலாம். டிமென்ஷியா, அமைதியின்மை போன்ற பல்வேறு வகையான மூளை நோய் பிரச்சினைகளுக்கும் சங்கு புஷ்பத்தில் தீர்வு இருக்கிறது.

மிக முக்கியமாக இதய செயல்பாட்டை இந்த புஷ்பம் மேம்படுத்துகிறது. இதயம் நோகுதே என்று சங்கு புஷ்பம் உட்கொள்பவர்கள் ஒப்பாரி வைக்க தேவை இல்லை. சங்கு புஷ்பம் அதன் வலுவான ஆக்ஸிஜனேற்ற தன்மை காரணமாக பல்வேறு இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது இதய தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.

எத்தனாலிக் சாறு போன்ற உயிரியக்க கூறுகள், ஈஸ்டெரிஃபைட் அல்லாத கொழுப்பு அமிலங்களின் அளவைக் குறைக்கின்றன, எனவே மாரடைப்பு, இதயத் தடைகள் (Blocks), இரத்தக் கட்டிகள் (CLOTS) போன்றவற்றின் அபாயத்தை குறைக்கிறது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய நோய் வந்தால் சங்கு தான் என்று பயப்பட வேண்டியதில்லை. சங்கு புஷ்பம் கை கொடுக்கும்.

Butterfly Pea Tea | சங்கு பூ டீ
Butterfly Pea Tea | சங்கு பூ டீ

குடலுக்கும் இந்த அறிய மடல் பெரும் நன்மை செய்கிறது. இந்த பாரம்பரிய மூலிகையில் காணப்படும் செரிமான பண்புகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது செரிமான சாறுகளின் சுரப்பை தூண்டுகிறது, இதனால் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது திரவம் தங்குவதை தடுக்கிறது மற்றும் வயிற்று வலி, வயிற்றுப் பெருக்கம் (BLOATING), அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
பூசணி விதையா? சூரியகாந்தி விதையா? எதைச் சாப்பிட்டால் உடலுக்கு அதிக நன்மை?
Butterfly Pea Tea | சங்கு பூ டீ

இந்த நினைவாற்றலை அதிகரிக செய்யும் மூலிகை பூ கால்-கை வலிப்பு, டிமென்ஷியா, அல்சைமர் போன்ற பல மூளை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு மந்திர தீர்வாகும், ஏனெனில் இது நியூரான்களின் அழிவை தடுக்கிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ஒரு ஸ்பூன் சங்கு புஷ்ப பொடியை ஒரு கிளாஸ் பால் மற்றும் ஜீராவில் கலந்து, தூங்கச் செல்லும் முன் குடிப்பது, உடல் வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், தூக்கத்தைத் தூண்டவும் மற்றும் தூக்கமின்மை போன்ற தூக்கக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மூலிகை கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது, ஏனெனில் இது கருப்பையை திறம்பட பலப்படுத்துகிறது மற்றும் கருச்சிதைவுகளைத் தடுக்கிறது.

சங்கு புஷ்பத்திற்கு காலில் சக்கரம் கட்டிக் கொண்டு அலைய வேண்டாம். சனிக்கிழமைகளில் எல்லா சிவன் கோயில்களிலும் சங்கு புஷ்பம் கிடைக்கும். இதை இன்னும் எளிதாகப் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் வாங்கவும்.

இதையும் படியுங்கள்:
உடல் எடை குறைக்க உதவும் டிராகன் பழம்: இதிலிருக்கும் முக்கிய மருத்துவ நன்மைகள்!
Butterfly Pea Tea | சங்கு பூ டீ
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com