முட்டைக்கோஸ் (Cabbage) கீரை வகையை சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டைகோஸ் மிகவும் சிறந்தது.
இதன் மேல் பகுதியில் மூடி இருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பருடன் சேர்த்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.
முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்
கண்பார்வைக்கு: முட்டைகோஸ் கண் பார்வை கோளாறுகளை போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.
மூல நோய்க்கு: மூல நோயின் பாதிப்பை குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்று வலியை நீக்கும். சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.
பெண்களுக்கு மெனோ பாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைக்கோஸ் ஈடு செய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். புற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முட்டைக்கோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து அந்த நீரை கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலை போக்கும். சளியை போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். தலைமுடி உதிர்வதை குறைக்கும். மயக்க கால்களுக்கு பலம் கொடுக்கும்.
முட்டைக் கோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)