

காலெண்டுலா (Calendula) ஒரே மூலிகைச் செடியாகும். இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சருமம் மற்றும் சருமப்புண்களுக்குச் சிறந்தது. காலெண்டுலா பூக்களில் ஃளேவினாய்டுகள் மற்றும் ட்ரைடேர்பீனாய்டுகள் உள்ளன. இதனால் இது மருத்துவ குணங்கள் நிறைந்தது.
இதை பாட் மெரிகோல்ட் என்று கூறுவார்கள் மெடிட்டரேனியன் பகுதிகளில் காணப்படும் அழகான செடி. இது உணவில் நிறத்தைப் சேர்ப்பதற்காக பயன்படுத்தப் படுகிறது. இது மிகவும் சிறந்ததாக உலக சுகாதாரக் கழகத்தால் அங்கீகாரம் பெற்றது. சருமத்தயாரிப்பு க்ரீம்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
காலெண்டுலா க்ளென்சிங் ஃபேஸ் வாஷ் முகத்தில் இயற்கை எண்ணையைத் தக்கவைத்து முக அழுக்குகளைப் போக்குகிறது.
காலெண்டுலா இதழ்களும் ஆலோவேராவையும் இணைத்து சிறந்த சரும மாஸ்க்காக பயன்படுத்தலாம் இது சருமத்திற்கு உடனடி புத்துணர்ச்சி தரக்கூடியது.
சருமம் பிரச்சனைகளான எக்சிமா மற்றும் டெர்மாடிடிஸ் ஆகியவற்றுக்கு நல்லது. இது பல சருமப் பிரச்னைகளுக்குத் தீர்வாக உள்ளது.
பெண்களுக்குப் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்கு காலெண்டுலா கலந்த கிரீம் பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு சிறந்த சன்ஸ்கிரீன் ஆகச் செயல்படுகிறது. காலெண்டுலா ஆயில் சிறந்த சன்ஸ்கிரீன் ஆகும். இதில் உள்ள குமாரின்ஸ் என்ற பொருள் ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் போக்குகிறது.
சிறந்த நீரேற்றத்தை அளிப்பதோடு முகச் சுருக்கங்களை நீக்கும் வகையில் காலெண்டுலா ஆயில் மற்றும் கிரீம்கள் இயற்கை மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ளது. இளமையைத் தக்க வைக்கக் கூடியது.
ஆய்வுகளின்படி ஜெரேனியம் ஆயில் மற்றும் காலெண்டுலா ஆயில் இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தும்போது வயதான தோற்றத்தைத் தடுக்கக்கூடிய தாக தெரிகிறது.
காலெண்டுலாவில் உள்ள ட்ரைடெர்பினாய்டுகள் என்ற வேதிப்பொருள் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் உடல் அழற்சி மற்றும் தொற்றுக்களைப் போக்கக் கூடியதாகத் திகழ்கிறது இதில் உள்ள பாலிஃபினால்களும் அழற்சி எதிர்ப்புசக்தி உள்ளதால் தொற்றுக்கு இது மிகச் சிறந்தது.
காலெண்டுலாவிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்ப்ரே புண்களை ஆற்றக்கூடியது.
செரிமான ஆரோக்கியத்தையும் காலெண்டுலா சீராக வைப்பதாக தெரிகிறது. செரிமானப் பாதையை நன்றாக வைக்கக் கூடியது. இதனால் இதய எரிச்சல், பெப்டிக் அல்சர் மற்றும் குடல் எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் காலெண்டுலா தேநீர் உட்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது.
உலகில் பல இடங்களில் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளுக்கு காலெண்டுலா பயன்படுத்துவதாக தெரிகிறது.
குழந்தைகளுக்கு டயபர் பயன்பாட்டால் ஏற்படும் சரும பிரச்சனையை தீர்க்க காலெண்டுலா பேபி கிரீம் பயன்படுத்தப்படுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு இருப்பதால் எந்த அலர்ஜியும் தீர்க்கிறது. இதுமட்டுமல்லாமல் குழந்தைகள் சோப்பு மற்றும் மாய்சாசரைசரில் காலெண்டுலா பயன்படுத்தப் படுகிறது.
காலெண்டுலா தேநீர் தயாரிப்பு
தண்ணீரை கொதிக்கவிடவும்
இரண்டு டீ ஸ்பூன் காய வைத்த காலெண்டுலா பூவை நீரில் சேர்க்கவும்.
பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பிறகு இதை வடிகட்டி வாசனைக்கு பட்டை பௌடர், வெனிலா எசென்ஸ் அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
காலெண்டுலாவை யார் தவிர்க்க வேண்டும்?
கர்ப்பிணிகளும் பால் ஊட்டும் தாய்மார்களும் இதைத் தவிர்க்க வேண்டும் மருத்துவ ஆலோசனை கேட்டு பயன்படுத்தலாம்.
காலெண்டுலா ஆயின்மெண்ட், கிரீம், ஆயில், காப்ஸ்யூல் மற்றும் காய்ந்த பூக்கள் போன்ற நிலைகளில் கிடைக்கிறது.
இதன் வேறு பெயர்கள்
பாட் மரிகோல்ட்
ஸ்காட்ச் மரிகோல்ட்
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference