அடிக்கடி தலைவலியா? காரணங்கள் மற்றும் ஆய்வுகள் கூறும் 10 எளிய தீர்வுகள்!

ரத்த ஓட்டத் தடை முதல் ஒற்றைத் தலைவலி வரை - மாத்திரையின்றி போக்க உலக ஆய்வுகளின் வழி!
Migraine Headache -
Migraine Headache -
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

இப்பொழுதெல்லாம் தலைவலி மிகச் சாதாரணமான நோயாகிவிட்டது. தலையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் சிதைவே தலைவலிக்கு முக்கிய காரணம். இந்த சிதைவுக்கு ஓய்வு இல்லாமை, அதிக கவலை மற்றும் மன அழுத்தம், அதிகப்படியான உடல் உழைப்பு போன்றவை காரணமாகலாம்.

இதயம் உடலுக்கு தரும் இரத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு மூளைக்கு செல்லும். ஒரு நிமிடத்தில் பத்திற்கும் மேற்பட்ட முறை ரத்த ஓட்டம் மூளையைச் சுற்றி வந்து விடுகிறது. இந்த ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையே தலைவலியாக உருவெடுக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக மன அழுத்தம் உள்ளது.

அறிவாளிகளுக்கே பெரும்பாலும் தலைவலி வருகிறது என்பது உண்மை தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மூளையை அதிகம் பயன்படுத்தப்படும் வேலையில் இருப்பவர்களுக்கு குறிப்பாக தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றவர்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது என்கிறார்கள்.

தலைவலிகளில்;

  • அலுப்பு தலைவலி - இது அலுவல் சூழ்நிலை காரணமாக வரும்.

  • ஒற்றை தலை வலி - இது பெரும்பாலும் பெண்களுக்கே வருகிறது, குறிப்பாக அவர்களின் மாதவிடாய் சமயத்தில்.

  • கூட்டுத் தலைவலி - இது தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை இருக்கும். இதனால் இரவில் தூக்கம் கெடும்.

migraine
Migraine Headache -

அமெரிக்காவின் 'தேசிய தலைவலி ஆராய்ச்சி கழகம்' உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தந்த தலைவலி நீங்க மற்றும் வராமல் தடுக்க தந்த குறிப்புகளில் சிறந்த 10-ஐ தந்திருக்கிறார்கள். அடிக்கடி தலைவலியால் அவதிக்குள்ளாகிறவர்கள் பின்பற்றி பார்க்கலாம்.

  • அன்றாடம் சுக்கு காபி அல்லது சுக்கு நீர் சாப்பிட்டு வர தலைவலி நீங்கும் மற்றும் அதனை வராமல் தடுக்கும். காரணம் சுக்கின் மூலப் பொருளாக இருக்கும் இஞ்சியில் 'தரோம்பாக்சேன் - ஏ2 (Thromboxane - A2) என்ற மருந்துவப் பொருள் உள்ளது. இது இரத்த ஓட்டத்தையும், நரம்பு மண்டலத்தையும் சீராக இயங்குவதற்கு உதவி ஒற்றை தலை வலியை போக்கும் என்கிறார்கள்.

  • மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்புகள் தான் தலைவலியை ஏற்படுத்தும். இதற்கு வாசனை தைலமான 'பெப்பர் மென்ட் ஆயில்' தடவி வந்தால் மூளை நரம்புகள் சுறுசுறுப்புடன் இயங்கி தலைவலி பறந்து போகும். நல்ல வாசனை சிறந்த வலி நிவாரணியாக குறிப்பாக பெண்களிடம் அதிக அளவில் செயலாற்றும் என்பதை கனடாவில் உள்ள கியூபெக் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

  • உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பி12 சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் இவையெல்லாம் தலைவலி வராமல் தடுக்கும். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் ஒற்றை தலைவலியை வராமல் தடுக்கும் ஆற்றல் உடையது என்கிறார்கள் இத்தாலி நாட்டின் மிலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தலைவலி வராமல் தடுக்க தினமும் ஒரு கப் தயிர் சாபிட வேண்டும் என்கிறார்கள்.

  • கனிம சத்துக்கள் நிறைந்த உணவில் தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது. இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தலைவலிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று மெக்னீசியம் பற்றாக்குறை ஆகும். இது இரத்த நாளங்களைச் சுருக்குவதோடு, மூளையில் உள்ள நரம்பு சமிக்ஞைகளை பாதித்து ஒற்றைத் தலைவலியை (Migraine) தூண்டுகிறது. பாதாம் பருப்பு, கீரைகள், அவகேடோ மற்றும் வாழைப்பழம் போன்றவற்றில் மெக்னீசியம் நிறைய உள்ளது.

  • தலைவலிக்கு தூக்கமின்மை முக்கிய காரணம். எனவே நாள் தோறும் குறைந்தது 7 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். தூக்கமின்மையும் தலைவலியும் மிக நெருங்கிய தொடர்புடையவை. இரவில் போதுமான அல்லது ஆழமான தூக்கம் இல்லாதபோது, அது மறுநாள் காலையிலோ அல்லது நாளின் பிற்பகுதியிலோ கடுமையான தலைவலியைத் தூண்டக்கூடும் என்கிறார்கள்.

  • அசைவ உணவுகளில் ஒன்றான மீன் உணவு அதிகம் எடுத்துக் கொள்ள தலைவலி எட்டிப் பார்க்காது என்கிறார்கள். காய்கறிகளை விட மீன் உணவை அதிகம் சாப்பிடுவது மைக்ரேன் தலைவலியை குறைக்கிறது என்பதை அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மீன் அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழக்கமாக 10 முறை வரும் மைக்ரேன் தலைவலி பாதியாக குறைந்தது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் மீன் உணவிலுள்ள ஒமேகா 3 மற்றும் 5 கொழுப்பு அமிலங்கள் தான் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் அதிகரிக்கும் மாரடைப்பு! இதயத்தைக் காக்க நீங்கள் செய்ய வேண்டியவை!
Migraine Headache -
  • இனிப்பு பண்டங்களை அளவாக சாப்பிட்டு வர வேண்டும். சில செயற்கை இனிப்புகள் நிறைந்த உணவுப் பொருட்கள் மூளையின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து தலைவலியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

  • வேறு எந்த மருத்துவ சிகிச்சைகளையும் விட 'மைக்ரோன்' தலைவலியை 'அக்குபங்சர்' மருத்துவ முறை விரைவில் குறைக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

  • தலைவலிக்கு மாத்திரைக்கு அடிமையாக்கும் சூழலில் இருந்து விடுபட தலைவலிக்கு மாற்று மருந்து ஒன்று உள்ளது. தசைகளை தளர்வாக்கும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா பயிற்சி போன்றவைகளை ஆறு வார காலம் தினமும் செய்து வந்தால் தலைவலி பறந்தோடும், அடிக்கடி தொல்லை தராது. 'மைக்ரோன்' எனும் ஒற்றை தலைவலி வராமலும் தடுக்கலாம் என்கிறார்கள்.

  • எந்த கடினமான வேலை இருந்தாலும் அதை செய்து முடித்துவிட்டு இடையே கொஞ்ச நேரம் திறந்த வெளியில் காலார நடந்து வந்தால் தலைவலி பறந்து போகும். முக்கியமாக ஏசியில் வேலை பார்க்கும் நபர்கள் வெளிவந்து சில நிமிடங்களாவது இயற்கை காற்றை சுவாசிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
ரத்த சோகையா? மாத்திரை இல்லாமல் ஹீமோகுளோபினை உயர்த்தும் உணவுகள்!
Migraine Headache -

Reference:

logo
Kalki Online
kalkionline.com