கண்ணுக்கு கீழே வீக்கம், கருவளையமா? தவிர்க்க வேண்டிய 8 தவறுகளும் தீர்வுகளும்!

தூக்கமின்மை, உப்பு, சைனஸ் பிரச்சனை மற்றும் மேக்கப் சாதனங்களால் ஏற்படும் கண் பைகள் பற்றிய அலசல்.
கண்ணுக்கு கீழே வீக்கம்
கண்ணுக்கு கீழே வீக்கம்Image credit - Pixabay
எஸ்.மாரிமுத்து

கடந்த 15 ஆண்டுகளாக நானும் எனது மனைவி எம். வந்தா. நிறைய இதழ்களில் கதை, கட்டுரை, ஜோக்ஸ், ஆன்மீகம், சமையல் பற்றி எழுதி உள்ளோம். தற்போது கல்கி ஆன்லைனிலும் வருகிறது. கல்கிக்கு நன்றிகள்.

Updated on

பெண்களுக்கு கண்ணுக்கு கீழே ஒரு 'பேக்' வந்தாலே கவலை தொற்றிக் கொள்ளும். ஒருவரின் அடையாளம் முகம் என்றால் இந்த முகத்துக்கு அழகு தருவது கண்கள் தான்.

பெண்களுக்கு கீழே கருவளையம் வருவதும் தசைகள் வீங்கி ஒரு பை போல கண்களுக்கு அடியில் ஏற்படுவதும், அழகை மட்டும் அல்ல ஆரோக்கியத்தையும் கெடுக்கும் அடையாளம்.

இதற்கு காரணம் என்ன?

எப்படி இதையெல்லாம் தவிர்ப்பது?

அதற்குரிய வழிகளை பார்ப்போம்.

இதற்குரிய காரணங்கள்:

  • நமது கண்களுக்குக் கீழே இருக்கும் சருமம் மிகமிருதுவானது. நம் முகத்தில் மிக அதிகமான இரத்த குழாய்கள் பரவிக் கிடக்கின்றன. ரத்த ஓட்டத்தில் நிகழும் சின்ன மாற்றம் கூட நம் முகத்தில் எங்கோ ஓரிடத்தில் வீங்கச் செய்து விடும். அப்படி கண்ணுக்கு கீழே பைபோல பிதுக்கம் ஏற்படுவதற்கும், கருவளையங்கள் ஏற்படுவதற்கும் பல காரணங்கள் இருக்கலாம்.

  • முதுமையின் காரணமாக கண்களுக்கு அடியில் வீங்கி பை போல ஆகலாம். முதுமையில் உடலில் இருக்கும் கொழுப்பு குறையத் தொடங்கும். கண்ணுக்கு கீழேயும் இது நிகழும். அப்போது அங்கு அதிக ரத்த ஓட்டம் பாயும். இதனால் கண்கள் வீங்குகின்றன.

  • சைனஸ் போன்ற பிரச்சினைகளாலும் கண்களுக்கு அடியில் வீங்கும். வைரஸ் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம், மூக்கடைப்பு ஏற்படும் போது கண்களுக்கு அடியில் வீக்கம் வரும். கருவளையம் ஏற்படும்.

  • இரவில் சரியாக தூங்கவில்லை என்றால், கண்களை சுற்றிய ரத்தக் குழாய்கள் புடைத்துக் கொண்டு தெரியும், அதனால் வீக்கம் ஏற்படும்.

கண்ணுக்கு கீழே வீக்கம்
கண்ணுக்கு கீழே வீக்கம்
  • வெயிலில் செல்வதும் உடலுக்குத் தேவைதான். அளவுக்கு அதிகமாக வெயிலில் திரிந்தால் அதுவே கண்களை சுற்றி கருவளையங்களை ஏற்படுத்திவிடுகிறது.

  • நாம் சாப்பிடும் பழங்கள் காய்கறிகளில் இருந்தே நம் சருமத்தை பராமரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் பெறப்படுகின்றன. ஆரோக்கியமான இயற்கை உணவுகளை தவிர்த்தாலும் கண்களுக்கு அடியில் பைகள் உருவாகும்.

  • உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்வதும், ரத்த நாளங்கள் அதிக திரவத்தை உறிஞ்சி வைத்திருக்க காரணம் ஆகும். இந்த அதிகப்படி திரவமே கண்களைப் சுற்றி நீராக கோர்த்துக் கொள்கிறது.

  • தவறான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதும் இந்த பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம். புதிதாக எதையாவது பயன்படுத்தியதும் இந்த பிரச்சினை எழுந்தால், உடனடியாக சரும மருத்துவரை அணுக வேண்டும். அந்த பியூட்டி பொருட்களில் இருக்கும் எந்த வேதிப் பொருள், உங்கள் சருமத்தை இப்படி ஆக்கியது என மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். நீண்ட நேரம் மேக்கப் போட்டு இருந்தாலும் கருவளையம் கண்களுக்கு அடியில் பைகளை ஏற்படுத்தும். இரவில் தூங்கப் போவதற்கு முன்பாக மேக்கப்பை சுத்தமாக கழுவி விட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
40 வயதை தொட்டுவிட்டீர்களா? வாழ்க்கையை செதுக்க 5 சூப்பர் வழிகள்!
கண்ணுக்கு கீழே வீக்கம்

பிரச்னை தீர எளிய சில இயற்கை வழிகள்:

பாலில் டீ பேக்கை நனைத்து டீ சாப்பிடும் பழக்கம் உண்டா உங்களுக்கு? அந்த டீயை குடித்து முடித்த பிறகு டீ பேக்கை வெளியே எடுத்து சூடு குறைந்து இருக்கும் அந்த டீப் பேக்கை கண்களை மூடிக்கொண்டு பத்து நிமிடங்கள் அப்படியே மேலே வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

வெள்ளரிக்காய்க்கு வீக்கத்தை குறைக்கும் திறன் உண்டு.

வெள்ளரியில் இருந்து இரண்டு பெரிய துண்டுகளை வட்டமாக வெட்டி கண்களை மூடிக்கொண்டு கண்களிலும், கண்களுக்கு அடியிலும் படுமாறு வைக்க வேண்டும் இது கண்களை சுற்றிய இரத்த ஓட்டத்தை சீராக்கி புத்துணர்வு பெற வைக்கும்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டீஸ்பூனை ஃபிரிட்ஜில் உள்ள ஃப்ரீஸரில் வைக்கவும். நன்கு ஜில்லென ஆனதும் இதை எடுத்தவும். கண்ணுக்கு கீழே எங்கெல்லாம் வீக்கம் இருக்கிறதோ அந்த இடங்களில் இந்த ஸ்பூனால் மிருதுவாக அழுத்தி ஒத்தடம் கொடுக்கவும். இதேபோல திரும்ப திரும்ப ஃபிரிட்ஜில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் காணாமல் போகும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைக்குக் காய்ச்சல், வாயில் புண்களா? கை-கால்-வாய் நோய் அறிகுறிகளும் தீர்வும்!
கண்ணுக்கு கீழே வீக்கம்

மிகவும் களைப்பாக இருந்தாலும், ஏதோ காரணத்துக்காக உணர்ச்சி வசப்பட்டு அழ நேரிட்டாலோ, கண்களை சுற்றி பை போல வீங்கிவிடும். இதைச் சரி செய்ய தூக்கமே சிறந்த வழி. 7 முதல் 8 மணி நேரம் நிம்மதியாக தூங்க முயற்சி செய்யுங்கள். மறு நாள் பார்த்தால் வீக்கம், கருவளையம் மறைந்திடும்.

இந்த எளிய வழிகளை செய்து கண்களை பாதுகாக்கலாம்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com