நல்ல ஆகாரம்தான் சாப்பிடுகிறேன்! பிறகு ஏன் இந்த மலச்சிக்கல்...?

Constipation
Constipation
Published on

ன்றைய காலகட்டத்தில் மலச்சிக்கல் என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்னைதான். சிலர் தங்கள் மொத்த நாளையே மலச்சிக்கல் பிரச்னையால் வெறுத்துவிடுவார்கள். என்னதான் சத்தான ஆகாரம் சாப்பிட்டாலும் ஏன் இந்த மலச்சிக்கல் சரியாவதில்லை? இதற்கு முழுமையான தீர்வு இருக்கிறதா? 

வீட்டு சமையல்தான் இருந்தாலும்…
நாம் உண்ணும் பாரம்பரிய உணவுகளில் சேர்க்கும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின்(refined grains) அதிகப்படியான அளவுகூட இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணம்தான். என்னதான் தானியங்கள் நார்ச்சத்து நிறைந்ததாக இருந்தாலும், இப்போதுள்ள மெருகூட்டப்பட்ட அரிசி(polished rice) அல்லது பதப்படுத்தப்பட்ட கோதுமை(processed wheat) போன்ற பொருட்களில் தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்து இல்லாததால் உணவு செரிமானம் நடக்கும் தருணத்தில் நம் குடலில்(Intestine) ஒரு மந்தமான இயக்கத்தை ஏற்படுகிறது. மற்றொரு காரணம் சில மசாலாப் பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகும். ஒரு புறம் சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் போன்ற பொருட்கள் செரிமானத்திற்கு உதவினாலும், அதே மசாலாவில் அதிகமாக சேர்க்கப்படும் ஜாதிக்காய்(nutmeg) போன்ற பொருட்கள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

கூடுதலாக, நாம் அன்றாடம் பருகும் நீரும் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில நகர பகுதிகளில் அதிக கனிமங்களை(Minerals like Iron & Calcium) கொண்ட கடின நீர்(Hard waters) கூட குடல் செயல்பாட்டைச் சீர்குலைத்து மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். மேலும், இரும்புச் சத்துக்கள் நிறைந்த அல்லது வலி நிவாரணிகளாக உபயோகிக்கபடும் மருந்துகளின் பயன்பாடுகூட இந்த மலச்சிக்கலுக்கு ஒரு காரணமாகும்.

நல்ல தரமான உணவை உண்டால் போதுமா?

ஒரு புறம் ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலும் நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த நவீன வாழ்க்கை ஓட்டமும் மலச்சிக்கல் ஏற்படுவதை அதிகரிக்கின்றன. வேலை செய்யும்போது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அல்லது அதிக நேரம் திரையைப் பார்த்துக்கொண்டே(excessive screen time) உட்காரும் பழக்கங்கள் நம் உடல் செயல்பாடுகளை வெகுவாக குறைக்கின்றன. இதுபோக இன்றைய கரண்ட் ட்ரெண்டில் இருக்கும் ஒரு வித கலாச்சாரம் உணவு உண்பதற்கு என நேரம் காலம் என்று இல்லாமல் தோன்றும்போது மட்டும் சாப்பிடுவது, பின் சாப்பிடும் நேரத்தைத் தவிர்ப்பது போன்ற விஷயங்களை சிலர் சுகந்திரமாக கருதினாலும், அதில் பெருமானவர்களுக்கு அவர்களுடைய செரிமான நேரத்தை முற்றிலும் சீர்குலைக்கும்.

இதையும் படியுங்கள்:
வாரத்தில் 3 நாட்கள் 40 நிமிடங்கள் நடக்கும்போது உங்கள் மூளைக்கு என்ன நடக்கும்?
Constipation

இன்றைய நகர்ப்புற வாழ்வின் தவிர்க்க முடியாத விஷயமாக இருப்பது மன அழுத்தம். இது மலசிக்கலுக்கு முக்கியமான காரணமாகும். ஏனெனில் நாள்பட்ட மன அழுத்தம் குடல் மூளைக்கான(Brain signals to Intestine) மென்மையான தொடர்பை(Smooth communication) பாதித்து செரிமானத்தை மெதுவாக்கி மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது.

மேலும், பலர் சத்தானதாகக் கருதும் ‘சுகாதார உணவு’ என்று ஸ்டிக்கர் ஒட்டி, பேக் செய்யப்பட்ட குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவுகள் மீதுள்ள அதிகரித்த நம்பிக்கை, வீட்டில் தரமாகச் சமைக்கப்படும் உணவில் இருக்கும் நன்மைகளை முற்றிலும் தடுத்துவிடுகிறது.

எல்லோராலும் தங்கள் வாழ்வில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய முடியாதுதான். ஆனால், நம்மால் யூகிக்க முடியும் சில தீங்கு விளைவிக்கும் விஷயங்களைத் தவிர்த்தாலே நம் உடலுக்குப் பிரச்னை வரும் தருணங்களைப் பல நாட்களுக்குத் தள்ளிப் போடலாம்.

இதையும் படியுங்கள்:
கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து போச்சா? இந்த தேநீரை தினமும் குடித்து பாருங்கள்!
Constipation

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com