
கன்னம் பகுதியில் அதிகப்படியான கொழுப்பு, கன்னத்தின் கீழ் கொழுப்பின் தோற்றத்தை உருவாக்கும் இரண்டாவது அடுக்கு, என்பதுதான் இரட்டைத்தாடை. இது கனமான தோற்றத்தை உருவாக்கி தாடை வரையறையை குறைக்கும்.
இரட்டைத் தாடை ஏற்பட காரணங்கள்:
எடை அதிகரிப்பு:
உடல் அதிகப்படியான கொழுப்பை பல்வேறு பகுதிகளில் சேமித்து வைக்கிறது. ஹார்மோன் மாற்றங்கள், மோசமான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக எடை அதிகரிக்கும். இரட்டை கன்னம் ஏற்படுவதற்கு பொதுவான காரணம் உடல் எடை அதிகரிப்பு தான். அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் கொண்ட உணவு எடுத்துக் கொள்வது இரட்டை தாடை ஏற்பட காரணமாகும்.
வயதாகும்போது:
வயதின் காரணமாகவும் இந்நிலை ஏற்படலாம். ஏனெனில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி குறைவதால் சருமம் அதன் நெகிழ்வுத் தன்மையை இழந்து முகம் மற்றும் கழுத்தில் உள்ள கொழுப்பு படிவுகள் தொய்வடைவதன் காரணமாக இரட்டை கன்னம் ஏற்படுகிறது.
மரபியல் காரணம்:
குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு இரட்டைக் கன்னம் இருந்தால் உங்களுக்கும் அது வரும் வாய்ப்பு அதிகம். உடல் கொழுப்பை சேமிக்கும் கன்னம் பகுதிகள் பெரும்பாலும் மரபணு அமைப்பை பொருத்தது. ஆரோக்கியமாக எடையை பராமரித்தாலும் மரபியல் காரணம் மற்றும் மோசமான தோரணை காரணமாகவும் இரட்டை கன்னம் தோன்றும் வாய்ப்புள்ளது.
மோசமான தோரணை:
நீண்ட நேரம் சாய்ந்து அல்லது முன்னோக்கி சாய்ந்து கொண்டிருக்கும் பொழுது கழுத்து மற்றும் தாடைப் பகுதியை சுற்றியுள்ள தோல் தொய்வடையும். மேசையில் அமர்ந்திருக்கும் பொழுது அல்லது தொலைபேசியை பார்க்கும் போது நீண்ட நேரம் தலையை முன்னோக்கி அல்லது கீழ் நோக்கி பிடித்திருக்கும்போது தாடை மற்றும் கழுத்தை சுற்றியுள்ள சருமம் படிப்படியாக நீட்டுவதற்கு வழிவகுக்கும். காலப்போக்கில் இவை மடிப்புகள் அல்லது இரட்டைத்தாடை உருவாக வழி வகுக்கும்.
தீர்வுகள்:
a) முகப்பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இரட்டை கன்னத்தை குறைக்க முடியும்.
b) மேசையில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் அல்லது டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் பொழுது தலையை முதுகெலும்பு, தோள்கள் பின்புறம் மற்றும் தாடையை சற்று உள்ளே வைத்திருப்பதன் மூலம் தொய்வை தடுக்க முடியும்.
c) கழுத்து தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் தாடை மற்றும் தாடையின் தோற்றத்தை மேம்படுத்த முடியும். இதன் மூலம் இரட்டை தாடையின் ஒட்டுமொத்த தோற்றத்தை குறைக்க முடியும்.
d) ஜாகிங், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் ஒட்டுமொத்த கொழுப்பை எரிப்பதை அதிகரிக்கவும், கன்னம் பகுதியில் கொழுப்பை குறைக்கவும் உதவும்.
e) இரட்டைத்தாடை குறைப்பு பயிற்சிகளில் 'கன்னம் தூக்குதல்' எளிய பயிற்சியாகும். இதற்கு தலையை சற்று பின்னால் சாய்த்து கூரையை நோக்கி பார்ப்பதும், கீழ் தாடையை முன்னோக்கி நீட்டும் பொழுது, கீழ் உதட்டால் மேல் உதட்டை தொட முயற்சிப்பது போல் உதடுகளை மூடி நிதானமாக வைத்திருப்பதும், 5-10 வினாடிகள் இந்த நிலையில் இருப்பதும் அவசியம். 10 -15 முறை இதனை செய்வது கழுத்து மற்றும் தாடை பகுதிக்கான சிறந்த பயிற்சி ஆகும்.
f) மற்றொரு பயிற்சி 'கழுத்து நீட்சி'. இதற்கு முதுகெலும்பை நேராகவும், தோள்களை தளர்வாகவும் வைத்து உட்கார்ந்து கொண்டு கூரையை பார்க்கும் வகையில் தலையை மெதுவாக பின்னால் சாய்க்கவும். பின்பு கழுத்தை இடது மற்றும் வலது பக்கம் மெதுவாக நீட்டி, ஒவ்வொரு நிலையிலும் சில வினாடிகள் வைத்திருக்க கழுத்தை சுற்றியுள்ள தசைகள் வலுப்படுத்துவதுடன் இரட்டை கன்னத்தின் தோற்றத்தையும் குறைக்க உதவும்.
g) இரட்டைக் கன்னம் குறைப்பு ஊசிகள் மற்றும் கொழுப்பு உறைதல் தொழில்நுட்பம், ரேடியோ அதிர்வெண் சிகிச்சை போன்ற அதிநவீன சிகிச்சைகள் தாடை மற்றும் மெலிதான முகத்தை அடைவதற்கு உதவும். இதற்கு மருத்துவர்கள் அல்லது நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசியம்.